Published:Updated:

தெரபி + ஆயுர்வேதம்... ஆட்டிசம் குறைபாட்டுக்கு கூட்டு சிகிச்சை!

ஆட்டிசம் குறைபாட்டுக்கு கூட்டு சிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டிசம் குறைபாட்டுக்கு கூட்டு சிகிச்சை!

உடம்பில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் மருந்தும் மற்றும் மனதின் செயல் பாட்டை சீர்செய்யும் ‘மேதியம்’ என்ற மருந்தும் கொடுக்கிறோம்.

தெரபி + ஆயுர்வேதம்... ஆட்டிசம் குறைபாட்டுக்கு கூட்டு சிகிச்சை!

உடம்பில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் மருந்தும் மற்றும் மனதின் செயல் பாட்டை சீர்செய்யும் ‘மேதியம்’ என்ற மருந்தும் கொடுக்கிறோம்.

Published:Updated:
ஆட்டிசம் குறைபாட்டுக்கு கூட்டு சிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டிசம் குறைபாட்டுக்கு கூட்டு சிகிச்சை!

ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. மேலும், ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிசம் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு, சம்பந்தப் பட்ட பெற்றோரிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

‘`ஆட்டிசம் குறைபாட்டுக்கு அலோபதி தெரபி சிகிச்சையுடன் ஆயுர்வேத சிகிச்சையும் இணையும்போது நல்ல பலன் கொடுக்கும்’’ என்று சொல்லும் நாகர்கோவில், கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி குழந்தைகள்நல மருத்துவர் செந்தி அரசி, அது பற்றிய தகவல்களைப் பகிர்ந்தார்.

முதல் மருந்து, நம்பிக்கை!

``ஆட்டிசம் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், அதைத் தாண்டி வர முடியும் என்ற நம்பிக்கையும் பெற்றோருக்கு வேண்டும். அந்த தைரியத்தோடு குழந்தைக்கான சிகிச்சையை ஆரம்பிக்கும்போதுதான், அது பலன் கொடுக்கும். அதற்காகத்தான் ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிசம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறோம்.

காரணங்கள்...

ஆட்டிசம் குறைபாட்டுக்கான காரணங்கள் குறித்த ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. மரபு, சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. சுற்றுச்சூழல் காரணிகள் என்பது, காற்றிலும் மண்ணிலும் இருக்கக்கூடிய ரசாயனங்கள். அவை மரபுக் கூறுகளின் செயல்பாட்டிலும், வெளிப்படும் தன்மையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். வளர்சிதை மாற்றத்தில் குறை இருப்பதும் காரணமாகச் சொல்லப்படுகிறது.

 செந்தி அரசி
செந்தி அரசி

அறிகுறிகள்...

ஆட்டிசம் குழந்தைகள் புற உலக சிந்தனை குறைபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களது உலகமே தனி. மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். பேச்சுத் திறன் குறைவாகவும் கம்யூனிக்கேஷன் பிரச்னை அதிகமாகவும் இருக்கும். ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வார்கள். ஆபத்தை அறிய மாட்டார்கள். சிலர் அதிக உணர்ச்சிகளையும், சிலர் குறை வான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவார்கள். இன்னும் பல அறிகுறிகளுடன் சிவியர், மைல்டு, மாடரேட் சிம்டம்ஸ் எனப் பல படி நிலைகளில் இருப்பார்கள்.

ஆயுர்வேதத்தில் ஆட்டிசம் கான்சப்ட் என்ன?

ஆயுர்வேதத்தைப் பொறுத்த வரை, அக்னி என்று ஒரு கான்சப்ட் உள்ளது. அதுதான் வளர்சிதை மாற்றத்துக்கு முக்கியமானதாகச் சொல்லப்படுவது. உணவை செரிமானம் செய்து, சத்துகளை எடுத்துக்கொண்டு, கழிவுகளை வெளி யேற்றுவது அக்னியின் செயல்பாடு.

அக்னியின் பங்களிப்பு குறையும்போது கழிவுகள் உடம்பில் தேங்கி உடல், மனச் செயல்பாடுகளை பாதிக்கும். மேலும், சரீர தோஷம் எனச் சொல்லக்கூடிய வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் சமச்சீர் நிலை மாறுபடும். இந்த அக்னி செயல்பாடு குறைவு காரணங்களோடு, ஆட்டிசம் குழந்தைகளுக்கு மனோ தோஷங்கள் என்று சொல்லக்கூடிய ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்; சத்வ குணம் மிகவும் குறைவாக இருக்கும். இந்த விஷயங்களால் அவர்களின் மூளை செயல்பாடுகள் பாதிக்கப் படும். இதுதான் ஆயுர்வேதாவில் ஆட்டிசம் குறித்த கான்செப்ட்.

தெரபி + ஆயுர்வேதம்... ஆட்டிசம் குறைபாட்டுக்கு கூட்டு சிகிச்சை!

அலோபதி, ஆயுர்வேத சிகிச்சைகள்!

ஆட்டிசம் குறைபாட்டை குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. என்றாலும், அலோபதியில் ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி, பிஹேவியர் தெரபி கொடுக்கப்படுகின்றன. ஆயுர்வேத சிகிச்சையைப் பொறுத்தவரை, அக்னியின் செயல்பாட்டை சீர்செய்ய மருந்துகள் கொடுக்கிறோம்.

உடம்பில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் மருந்தும் மற்றும் மனதின் செயல் பாட்டை சீர்செய்யும் ‘மேதியம்’ என்ற மருந்தும் கொடுக்கிறோம். மேதியம் மருந்து என்பது பிரெமி, வல்லாரை, அதிமதுரம், சீந்தில்கொடி, வசம்பு போன்ற பலவகை மூலிகைகள் சேர்ந்தது. இவற்றை சாறு எடுத்தோ, நெய்யுடன் கலந்தோ கொடுக்கி றோம்.

இதே மருந்துகளை பொடி யாக்கி, மோருடன் கலந்து, தலையில் அப்ளை செய்கிறோம். ‘சிரோலோபம்’ என்று சொல்லக் கூடிய தலையில் மருந்தை அப்ளை செய்யும் இந்த முறையில், சுமார் இரண்டு மணி நேரம் வரை சிகிச்சை அளிக்கப்படும்.

மேலும், மோரில் சில மூலிகைகளைச் சேர்த்து தலையில் ஊற்றும் ‘தாரா’ மருத்துவ முறையையும் பின்பற்றுகிறோம்.

மேற்சொன்ன சிகிச்சைகளால் ஆட்டிசம் குழந்தைகளின் கோபப்படும் தன்மையில் நல்ல மாற்றம் தெரியவரும். அடம்பிடிப்பது, ஆங்காங்கே ஓடுவது போன்ற அதீத செயல்பாடுகள் இருந்த பல குழந்தைகளுக்கு, இந்த சிகிச்சை முறையால் மாற்றம் வந்திருக்கிறது. ஓர் இடத்தில் அமர்வது, சொல்லிக் கொடுப்பதை கேட்பது, புரிந்துகொள்ளும் தன்மை அதிகரிப்பது போன்றவை நடந் திருக்கிறது.

ஆரம்பத்தில் 30 முதல் 45 நாள்களுக்கு இந்த சிகிச்சைகள், பின்னர் ஒரு மாதம் உள்ளுக்குள் கொடுக்கும் மருந்து என இந்த சிகிச்சையை மாற்றி மாற்றி தொடர்ந்து கொடுக்கிறோம்.

எனவே பெற்றோர்களே...

ஆட்டிசம் என்பது நோய் அல்ல, குறைபாடுதான். அந்தக் குழந்தை களுக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்து இந்தச் சமூகத்தில் சேர்ந்து வாழ தயார் படுத்துவதுதான் அவர்களுக்கான சிகிச்சை. அவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை மட்டுமே எடுக்கச் சொல்லி நாங்கள் பரிந்துரைப்பதில்லை. எங்களது சிகிச்சைகளுடன் அலோபதியில் ஸ்பீச் தெரபி, பிகேவியர் தெரபி எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்துவோம்.

பெற்றோரின் புரிந்துணர்வும், முயற்சி யும் இதில் மிகவும் முக்கியம். மைல்ட் கண்டிஷனில் இருக்கும் குழந்தைகளிடம் விரைவில் மாற்றத்தை பார்க்க முடியும். சிவியர் கண்டிஷனில் இருக்கும் குழந்தை களுக்குக் கொஞ்சம் காலம் எடுக்கும்.

அலோபதி தெரபி + ஆயுர்வேதம் எனக் கூட்டு சிகிச்சையை முயற்சி செய்வோம்’' என்றார் உறுதியாக.

****

பாக்கிய லெட்சுமி
பாக்கிய லெட்சுமி
தெரபி + ஆயுர்வேதம்... ஆட்டிசம் குறைபாட்டுக்கு கூட்டு சிகிச்சை!

‘`அம்மான்னு கூப்பிட்டான்!”

நாகர்கோவிலைச் சேர்ந்த பாக்கிய லெட்சுமி, தன் மகன் ரோஹித்துக்கு எடுத்துவரும் ஆயுர்வேத சிகிச்சை பற்றி பகிர்ந்தார். “ரெண்டரை வயசுக்கு அப்புறம்தான், ரோஹித் நார்மலா இல்லைனு கவனிச்சோம். நியூரோ டாக்டர்கிட்ட போனப்போ, லைட்டா ஆட்டிசம் இருக்குன்னு சொன்னாங்க. ஆக்குபேஷனல் தெரபியும், ஸ்பீச் தெரபியும் கொடுத்தாங்க. ஒரு வருஷம் கழித்து, ஆயுர்வேத சிகிச்சை எடுக்க ஆரம்பிச்சோம். நல்ல மாற்றம் தெரிஞ்சது. முக்கியமா, நல்லா தூங்கினான். அவன் பிறந்ததில இருந்து சரியா தூங்கினதே கிடையாது. அப்புறம், அஞ்சு வயசுல என்னை முதன்முதலா அம்மான்னு கூப்பிட்டான். நீல நிறத்தை அடையாளம் காட்டினான். டாய்லெட் போகணும்னா பாத்ரூம் கதவை தட்டுறான். இப்படி பல வகையிலும் அலோபதி, ஆயுர்வேத கூட்டு சிகிச்சை எங்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism