Published:Updated:

என்ன நோய்... எந்த டாக்டர்? - 5 - மெனோபாஸ்... அலட்சியம் வேண்டாம்!

மெனோபாஸ்... அலட்சியம் வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மெனோபாஸ்... அலட்சியம் வேண்டாம்!

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

சென்ற இதழ் தொடர்ச்சி...

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் பங்களிப்பையும் பெண்கள் அவர்களைச் சந்திக்க வேண்டியதன் அவசியத்தையும் விரி வாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை மெனோபாஸுக்கான சராசரி வயது 51ஆக இருக்கிறது. 51 வயதுக்குப் பிறகு ஒரு வருடத் துக்கு பீரியட்ஸ் வராமலிருந்தால், அதை மெனாபாஸ் என எடுத்துக்கொள்ளலாம். மெனோபாஸ் என்பது பலவித பிரச்னைகளை உள்ளடக்கிய ஒரு பருவம். இதயநோய் பாதிப்பு, கை, கால்களில் வலி, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, எலும்பு முறிவுக்கான அபாயம், உடல் பருமன், மனநிலையில் மாற்றங்கள் போன்ற பல பிரச்னைகளைப் பெண்கள் எதிர் கொள்வார்கள். மெனோபாஸ் தொடர்பான பாதிப்புகளுக்கும் மருத்துவரை அணுக வேண் டும் என்ற விழிப்புணர்வு நம் மக்களிடம் இல்லை. மெனோபாஸ் பிரச்னைகள் என்றாலே ஹார்மோன் மாத்திரைகள்தான் தருவார்கள் என்ற பயமும் தேவையில்லை. எல்லோருக்கும் ஹார்மோன் சிகிச்சைகள் அவசியப்படாது.

என்ன நோய்... எந்த டாக்டர்? - 5 - மெனோபாஸ்... அலட்சியம் வேண்டாம்!

அவசியம் மேற்கொள்ள வேண்டியவை...

மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்ற விஷயத்தை ஆண்கள் அளவுக்கு பெண்கள் அவ்வளவு சீரியஸாக அணுகுவதில்லை. மாறிப்போன இன்றைய வாழ்க்கைமுறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அது மிகவும் அவசியம்.

50 வயதில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் வருடம் ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து பார்க்க வேண்டும். ரத்தப் பரிசோதனை, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியம் போன்றவற்றைப் பரிசோதிக்க வேண்டும். மார்பக ஆரோக்கியத்துக்கு மேமோகிராம் பரிசோதனை அவசியம்.

தாம்பத்திய உறவுக்குப் பழகிய பெண்கள் எல்லோரும் 25 வயதுக்கு மேல் பாப் ஸ்மியர் பரிசோதனையை அவசியம் எடுக்க வேண்டும். 25 முதல் 49 வயது வரையிலான பெண்களுக்கு மூன்று வருடங்களுக்கொரு முறை இந்த டெஸ்ட் செய்யப்படும். அதன் பிறகு 5 வருடங் களுக்கொரு முறை செய்யப்படும். கர்ப்பப்பை உள்ள அனைத்துப் பெண்களுக்கும் (திருமண மான, ஆகாதவர்களுக்கும்) கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான அபாயம் இருப்பதால், அதைக் கண்டறியவே இந்தச் சோதனை.

 நித்யா ராமச்சந்திரன்
நித்யா ராமச்சந்திரன்

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கு...

திருமணம் தவிர்த்த லிவ் இன் ரிலேஷன்ஷிப் பில் வாழும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த வருடங்களில் அதிகரித்து வருகிறது. ஒரே பார்ட்னருடன் வாழ்வோரும் இருக்கி றார்கள், அடிக்கடி பார்ட்னரை மாற்றும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் சந்திக்கும் பிரதான பிரச்னை யூரினரி இன்ஃபெக்‌ஷனும், பாலியல் நோய்த் தொற்றுகளும். ஒன்றுக்கு மேலான நபர்களுடன் செக்ஸ் உறவு கொள்ளும்போது இந்தத் தொற்று மற்றவர்களுக்கும் பரப்பப்படுகிறது. இத்தகைய உறவில் இருக்கும் பெண்கள், தாம்பத்திய உறவின்போது ஆணுறை அணிவதை பார்ட்னருக்கு வலியுறுத்துவது முக்கியம். இதன் மூலம்  ஹெச்ஐவி உள்பட நோய்த்தொற்றுகள் தவிர்க்கப்படுகின்றன.

தனியே வசிக்கும் பெண்களுக்கு...

படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங் களுக்காக தனியே வசிக்கும் பெண்கள், ஏதோ உடல்நலக் கோளாறுக்காக மகளிர் மருத்து வரை அணுகலாம். அவர்கள் அதுவரை தாம்பத்திய உறவு கொண்டதில்லை என்ற பட்சத்தில், பிறப்புறுப்பு பரிசோதனையைத் தவிர்க்கச் சொல்லலாம். மருத்துவர்களே பெரும்பாலும் அதைத் தவிர்த்துவிடுவார்கள். வெஜைனாவில் ஏதேனும் அசாதாரண கசிவு இருப்பதாகச் சொன்னால் மட்டுமே மருத்து வர்கள் அந்தப் பரிசோதனையைச் செய்வார்கள்.

சுய மருத்துவம் வேண்டவே வேண்டாம்...

மருத்துவராக இருந்தாலுமே சுய மருத்துவம் கூடாது.

அசாதாரண வெள்ளைப்படுதல் பிரச்னை, வலி, பீரியட்ஸை தள்ளிப்போட என எதற்கும் சுய மருத்துவம் செய்யாதீர்கள்.

மெனோபாஸுக்கு பிறகு திடீரென ப்ளீடிங் திட்டுத் திட்டாக வந்தால் அலட்சியம் செய்யாதீர்கள். அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

40 வயதுக்குப் பிறகு தாம்பத்திய உறவுக்குப் பிறகு ப்ளீடிங் இருந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம். சுய மருத்துவமும் வேண்டாம்.

அடுத்த இதழில் நரம்பியல் மருத்துவம்

- அலெர்ட் ஆவோம்...

****

டேஞ்சர் டேட்டா

பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்றுநோயும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் கடந்த வருடங்களில் சற்று அதிகரித்திருக்கின்றன. தினமும் குளிக்கும்போது மார்பகங்களைப் சுயபரிசோதனை செய்து ஏதேனும் கட்டிகளோ, வீக்கமோ, கசிவோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  சின்ன அசாதாரணம் தெரிந்தாலும் மகளிர் மருத்துவரை அணுகுங்கள். சரியான தருணத்தில் கண்டறிந்தால் மார்பகப் புற்றுநோயை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியும். பெரும்பாலான பெண்கள் கடைசி ஸ்டேஜில்தான் சிகிச்சைக்கே வருகிறார்கள். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாவிட்டால் புற்றுநோயின் ஆரம்பகட்டத்திலேயே அதை குணப் படுத்திவிடலாம். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறியத்தான் பாப் ஸ்மியர் டெஸ்ட் வலியுறுத்தப் படுகிறது. புற்றுநோயாக மாறுவதற்கு முந்தைய நிலையிலேயே கண்டுபிடித்து தடுக்க இந்த டெஸ்ட் உதவும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு காரணமான ஹெச்பிவி  என்ற வைரஸை தடுக்க ஹெச்பிவி தடுப்பூசி போடப்படுகிறது. 11 முதல் 13 வயதுப் பெண் குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இந்தத் தடுப்பூசியைப் போடலாம்.