மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன நோய்... எந்த டாக்டர்? - 6 - தலைவலியும் தலைச்சுற்றலும் நரம்பியல் பாதிப்பின் அறிகுறிகளா?

என்ன நோய்... எந்த டாக்டர்?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன நோய்... எந்த டாக்டர்?

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System), புற நரம்பு மண்டலம் (Peripheral Nervous System) என நரம்பியல் மண்டலத்தில் இரு பிரிவுகள் உண்டு. மத்திய நரம்பு மண்டலம் என்பது மூளையும் முதுகுத்தண்டும் இணைந் தது. இந்த இரண்டுக்கும் வெளியே அமைந் துள்ளது புற நரம்பு மண்டலம். மூளை என்பது நம் வீட்டிலுள்ள மெயின் ஸ்விட்ச் போர்டு போன்றது. அதிலிருந்து வீட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் மின்சார இணைப்பு செல்வது போன்றதுதான் நரம்புகள். மெயின் போர்டு சரியாக இருந்தால்தான் ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட அனைத்து மின் சாத னங்களுக்கும் மின்சாரம் சரியாகச் செல்லும். மூளையும் அப்படித்தான். மூளையின் செயல்பாட்டில் பிரச்னை இருந்தால் அது உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கலாம்.

என்ன நோய்... எந்த டாக்டர்?
என்ன நோய்... எந்த டாக்டர்?

எலும்பியல் மருத்துவம் பற்றிய விழிப்பு உணர்வு உள்ள அளவுக்கு மக்களுக்கு நரம் பியல் மருத்துவம் குறித்து இல்லை என்பதுதான் உண்மை. நரம்பியல் மண்டலத்தை பாதிக்கும் பிரச்னைகள், தீர்வுகள், நரம்பியல் ஆரோக் கியத்துக்கான விஷயங்கள் என எல்லாவற்றை யும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்.

தலைவலிக்கும் மூளைக்கும் தொடர்புண்டா?

நரம்பியல் மருத்துவர்களைச் சந்திக்க வரு பவர்களில் பெரும்பாலானோர் தலைவலியை பிரதான அறிகுறியாகக் குறிப்பிடுவதுண்டு. தலைவலி என்றதும் பலரும் அதை சைனஸ், பார்வைக் கோளாறு என்றே நினைத்துக் கொள்வார்கள். தலைவலிக்கு இவையும் காரணமாக இருக்கலாம் என்றாலும், அதற் கான பிரதான காரணம் மைக்ரேன். அதை ஒற்றைத் தலைவலி என்கிறோம். தலைவலி உள்ள 100 பேரில் கிட்டத்தட்ட 80 பேருக்கு அது மைக்ரேனாக இருக்கும். 50 வயதுக்கு மேல் ஒருவருக்கு திடீரென ஏற்படும் தலைவலி, காரணமே இல்லாமல் வரும் தலைவலி, இடி விழுந்தது போன்ற தலைவலி (Thunderclap headache) போன்றவற்றை அலட்சியம் செய்யக் கூடாது. இதற்கெல்லாம் மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட ஆபத்தான காரணங்கள் இருக்க லாம் என்பதால் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.

இவையெல்லாமும் நரம்பியல் பாதிப்புகள் தான்....

மெயின் போர்டிலிருந்து மின்சாரம் சரி யாகச் செல்லாவிட்டால் கருவிகள் வேலை செய்யாதது போல மூளையில் பிரச்னை என்றால் அதன் விளைவாக நரம்புகள் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டு, கை, கால்கள் செயலிழக்கலாம். மூளையிலும் முதுகுத்தண்டிலும் எந்த இடத்தில் பிரச்னை என்பதைப் பொறுத்து ஒரு கை முழுவதுமோ, ஒரு விரல் மட்டுமோ, கையில் ஒரு பகுதி மட்டுமோ செயலிழக்கலாம். தவிர தொடு உணர்வும் பாதிக்கப்படலாம். உதாரணத்துக்கு கை கால்களோ, விரல்கள் மட்டுமோ மரத்துப் போகலாம்.

கை கால்கள் உதறி, வலிப்பு வருவதும் நரம் பியல் தொடர்பான பிரச்னைதான். வலிப்பு நோய் என்பது குணப்படுத்தக் கூடியதுதான் என்பதால் சீக்கிரமே சிகிச்சையைத் தொடங்க வேண்டும். நரம்புகளில் ஷாக் அடிப்பது போன்ற உணர்வு, சுளீரென்ற வலி (குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது சகஜம்) போன்ற வையும் வரலாம். நடப்பது, யோசிப்பது என நம்முடைய எல்லா செயல்களையும் உள்ளடக்கியதுதான் நம் மூளையின் ஆற்றல். திடீரென ஏற்படும் மறதி, வழக்கமான வேலைகளைச் செய்வதில் தடுமாற்றம் போன்றவை மூளை பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். நடக்க முடியாமல் கை, கால்களில் நடுக்கம், நடையில் வேகம் குறைவது போன்றவை உதாரணங்கள். இவற்றுக்கெல்லாம் நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

என்ன நோய்... எந்த டாக்டர்?
என்ன நோய்... எந்த டாக்டர்?

நரம்பு சுருட்டி இழுப்பது ஏன்?

சிலருக்கு இரவில் தூக்கத்தில் மட்டும் ஒரு காலில் பிடித்து இழுப்பது போலத் தோன்றும். அது சாதாரண தசைப்பிடிப்பாக இருக்கலாம். அடிக்கடி தொடரும் பட்சத்தில் அது நரம்பியல் சார்ந்ததாகவும் இருக்கலாம் என்பதால் நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும். பெரும் பாலும் ‘வெரிகோஸ் வெயின்ஸ்’ எனப்படும் பிரச்னையைத்தான் பலரும் நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னையாகச் சொல் வார்கள். அதாவது கால் களில் தெரியும் பச்சை நரம்புகள் சுருட்டி இழுப்பது தான் நரம்பு சம்பந்தப்பட்டது. அதற்கு முறையான சிகிச்சை அவசியம்.

கழுத்துவலி, முதுகுவலிக்கு எந்த மருத்துவர்? தலைச்சுற்றலுக்கும் நரம்புகளுக்கும் தொடர்புண்டா? நரம்பியல் மண்டலத்தை ஆரோக்கிய மாக வைத்துக்கொள்வது எப்படி?- அடுத்த இதழில்

- அலெர்ட் ஆவோம்...