மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன நோய்... எந்த டாக்டர்? 7- கழுத்துவலி, முதுகுவலிக்கு எலும்பியல் மருத்துவரா, நரம்பியல் மருத்துவரா?

கழுத்துவலி, முதுகுவலிக்கு???
பிரீமியம் ஸ்டோரி
News
கழுத்துவலி, முதுகுவலிக்கு???

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

சென்ற இதழ் தொடர்ச்சி...

எலும்பியல் மருத்துவம் பற்றிய விழிப்பு உணர்வு உள்ள அளவுக்கு மக்களுக்கு நரம்பியல் மருத்துவம் குறித்து இல்லை என்பது தான் உண்மை. நரம்பியல் மண்டலத்தை பாதிக்கும் பிரச்னைகள், தீர்வுகள், நரம்பியல் ஆரோக்கியத்துக்கான விஷயங்கள் என எல்லா வற்றையும் இந்த இதழிலும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் மூட்டுகளில் வலி ஏற்பட்டால் பொது வாக அது எலும்பியல் சார்ந்த பிரச்னையாக இருக்கலாம். அதுவே ஒருவருக்கு ஷாக் அடிப்பது போன்ற வலி ஏற்படுகிறது, கழுத்தில் ஆரம்பித்து மற்ற இடங்களுக்கும் பரவுகிறது என்றால் அது நரம்பு பாதிப்பால் ஏற்பட்டதாக இருக்கலாம். அதற்கு நரம்பியல் மருத்துவரை அணுகி னால் நரம்பு அழுத்தியிருக்கிறதா, அது எந்த நரம்பு என பார்த்து சிகிச்சை அளிப்பார்.

என்ன நோய்... எந்த டாக்டர்? 7- கழுத்துவலி, முதுகுவலிக்கு எலும்பியல் மருத்துவரா, நரம்பியல் மருத்துவரா?

எத்தனை நாள்கள் சகித்துக் கொள்ளலாம்?

ஓரிடத்தில் நீண்ட நேரம் கையை வைத்திருக்கிறீர்கள், கை மரத்துப் போகிறது... கையை எடுத்த சில நொடி களில் அது சரியானால் அது பயப்படக்கூடிய பிரச்னையல்ல. தூங்கும்போது ஒரு பக்கமாகப் படுத் திருக்கும் நிலையில் ஏதோ ஒரு நரம்பு அழுத்தப்பட்டு மரத்துப்போவதும், பிறகு சரியாவதும் பிரச்னையல்ல. ஆனால்,  எப்போது வேண்டுமானாலும் இப்படி மரத்துப்போவதும், சாதாரணமாகவே மரத்துப் போவதும் கவனிக்கப்பட வேண்டும்.

வெயிலில் சென்றாலோ, பசியிலோ, தூக்கம் கெட் டாலோ, டென்ஷனிலோ தலைவலி வரும்  என்றால் அது மைக்ரேனாக இருக்க வாய்ப்புண்டு. அது எமர் ஜென்சியாக கவனிக்கப்பட வேண்டியதில்லை என்றாலும் நரம்பியல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. மூன்று, நான்கு மாதங்களுக்கொரு முறை வரும் தலைவலி பிரச்னைக்குரியதல்ல. ஒரே மாதத்தில் நான்கைந்து முறை வருகிறது, மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கிறது, வேலை கெட்டுப்போகிறது என்றால் அது சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது.

சிலருக்கு சுளீர், சுளீர் என தலைவலிக்கும். அப்போது கண்கள் சிவக்கும். சிறிது நேரத்தில் சரியாகிவிடும். அதே தலைவலி ஒருவருக்கு 50 வயதுக்குப் பிறகு வருகிறது, இடி இடிக்கிற மாதியான தீவிர வலி, அதாவது வலிக்கத் தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள் அது உச்சத்தை அடைகிறது என்றால் அது ஆபத் தான அறிகுறி. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டிய எமர்ஜென்சி அது. ஒவ்வொருவித தலைவலிக்கும் ஒவ்வொருவித சிகிச்சை உண்டு.

என்ன நோய்... எந்த டாக்டர்? 7- கழுத்துவலி, முதுகுவலிக்கு எலும்பியல் மருத்துவரா, நரம்பியல் மருத்துவரா?

தலைச்சுற்றல் எதை உணர்த்துகிறது?

தலைச்சுற்றல் பாதிப்புடன் வரும் பலரும், கழுத்து எலும்பு தேய்ந்திருப்பதாகச் சொல் வார்கள். தலைச்சுற்றும்போது வீடே சுற்றுவது போலவோ, தள்ளாடுவது போலவோ உணர்ந் தால் அது  ஒருவரது பேலன்ஸ் சிஸ்டம் பாதிக்கப்பட்டதன் அறிகுறி. அதாவது உள் காதிலிருந்து மூளை வரையிலான மென்மை யான பகுதியே பேலன்ஸ் சிஸ்டம்.  உள்காது நரம்புகளின் வழியேதான் மூளைக்கு சிக்னல்கள் போகும். அந்த சிக்னல் பாதிப்புக் குள்ளாகும்போது சுற்றியுள்ள எல்லாமே சுழல்வது போலத் தெரியும். இதைத் தான் ‘வெர்டிகோ’ (vertigo) என்கிறோம். சிலருக்கு இந்த வெர்டிகோ பாதிப்பு ஒற்றைத் தலைவலி யில் வரலாம். தலைவலி இல்லாமலும் வரலாம். எனவே தலைச்சுற்றல் இருந்தால் முதலில் மூளையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என பார்க்க வேண்டும். பித்தத்தின் காரணமாகவும் தலைவலி மற்றும் தலைச் சுற்றல் ஏற்படும். அதற்கும் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 நரம்பியல் மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி?

மூளையை முழுமையாகப் பயன்படுத்துவது தான் முதல் வழி. நம்மில் பலரும் மூளைக்கு என்றிருக்கும் 100 சதவிகித செயல்திறனை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. 30 முதல் 40 சதவிகிதம்தான் பலரும் பயன்படுத்து கிறார்கள். அதிகபட்சமாக 60 சதவிகிதம் வரையே பயன்படுத்தப்படுகிறது. மூளைக்கு முழுமையாக வேலை கொடுத்தால்தான் அது முழு ஆரோக்கியத்துடன் இருக்கும். அதற்கு, பாசிட்டிவ் சிந்தனை, ஆரோக்கிய உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, அதிக இனிப்பு, உப்பு தவிர்த்தல், யோகா போன்றவையே போது மானது. ஒருவருக்கு மூளையின் செயல்திறன் 60 சதவிகிதமாக இருக்கும் நிலையில், முழுமை யாகப் பயன்படுத்தாமல், 20 சதவிகிதம் குறை கிறது என வைத்துக்கொள்வோம். அதாவது, 40 சதவிகிதம் என்கிற நிலைக்குச் செல்லும் போது, மறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும். மூளைக்கு போதுமான வேலை கொடுத்து 60 சதவிகித செயல்திறனுக்குக் குறையாத வகை யில் தக்கவைத்துக் கொண்டாலும் அல்லது அதற்கும் கூடுதலாக செயல்திறனை உயர்த்திக் கொண்டாலும் மறதி பாதிப்பு ஏற்படாமல் சமாளிக்க முடியும்.

அடுத்த இதழில் இதயநலம்...

- அலெர்ட் ஆவோம்...

***

டாப் 3 நரம்பியல் பிரச்னைகள்...

டாப் 3 நரம்பியல் பாதிப்புகளின் வரிசையில் தலை வலி, பக்கவாதம் மற்றும் வலிப்பு ஆகியவை இருக் கின்றன. இவற்றில் கடந்த சில வருடங்களில் இள வயதினரிடையே பக்கவாத பாதிப்பு அதிகரித்து வரு கிறது. இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப் பட்டால் அதை ஹார்ட் அட்டாக் என்கிறோம். அது போல மூளையின் ரத்தக்குழாய்களில் அடைப்போ, கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் எல்லா காரணிகளும் மூளைக்கும் பொருந்தும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், உடற்பயிற்சிகள் இல்லாத வாழ்க்கை முறை, புகை மற்றும் மதுப்பழக்கங்கள் போன்றவை மாரடைப்புக்கு எப்படிக் காரணமாகின்றனவோ, அதே போல பக்கவாதத்துக்கும் காரணமாகலாம். சமீப காலங்களில் இளைஞர்கள் மத்தியில் பக்கவாதம் அதிகரித்திருக்கிறது. முதல் காரணம் ஸ்ட்ரெஸ். அடுத்து மாறிப்போன உணவுப்பழக்கம், தூக்கமின்மை, கட்டுப்பாடில்லாத கொலஸ்ட்ரால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், போதுமான தூக்கம், உடற்பயிற்சி மூன்றும் மூளையை மட்டுமல்ல, இதயத்தையும் காக்கும்.