Published:Updated:

ஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு? #DoubtOfCommonMan

ஜிப்மர்

எம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று தொடர்ந்து குரல்கள் ஒலித்துவருகின்றன.

Published:Updated:

ஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு? #DoubtOfCommonMan

எம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று தொடர்ந்து குரல்கள் ஒலித்துவருகின்றன.

ஜிப்மர்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியா முழுவதுமுள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், ராணுவ மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேர முடியும். ஆனால், எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் நீட் தேர்வு பொருந்தாது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்குத் தனித்தனியாக நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன.

நீட்
நீட்

தேசிய அளவில் மருத்துவப் படிப்பின் தரத்தை மேம்படுத்தவும் வரைமுறைப்படுத்தவும் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் ஏன் விலக்கு..? இந்த இரண்டு நிறுவனங்களும் பெற்றுள்ள தனித்தன்மையை ஏன் தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் பெற முடியவில்லை..?

இப்படியொரு கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருக்கிறார் வாசகர் புதியவன். இந்தக் கேள்வியை மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவிடம் எழுப்பினோம்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

"மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, யு.ஜி.சி-யின் தரச்சான்றைப் பெறவேண்டியதில்லை. 'மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா'வின் அனுமதியைப் பெற்றிருந்தாலே போதுமானது. கலைக்கல்லூரிகள்தான் யுஜிசி-யின் தரச்சான்றிதழைப் பெற வேண்டும். நீட் தேர்வு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி நடத்தப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே, எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்குத்தான் இதுபோன்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

மருத்துவக் கல்லூரி
மருத்துவக் கல்லூரி

நம்முடைய மருத்துவக் கல்லூரிகளுக்கு மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் வழிமுறைப்படியும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியும் நீட் தேர்வின் மூலமாகத்தான் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நம்முடைய மருத்துவக் கல்லூரிகளைத் தன்னாட்சியாக மாற்றுவது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது" என்றார் அவர்.