Published:Updated:

புற்றுநோயின் பிடியில் 10 வயது அன்பு மகன்... காப்பாற்ற பரிதவிக்கும் தந்தை!

லத்தீஷ்

கோவையில் தொடர்ந்து ஒரு வாரம் சிகிச்சை அளித்து பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இப்படி ஒரு‌ பேரிடியை சற்றும் எதிர்பார்த்திராத குட்டன்‌, நிலைகுலைந்துபோனார்.

புற்றுநோயின் பிடியில் 10 வயது அன்பு மகன்... காப்பாற்ற பரிதவிக்கும் தந்தை!

கோவையில் தொடர்ந்து ஒரு வாரம் சிகிச்சை அளித்து பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இப்படி ஒரு‌ பேரிடியை சற்றும் எதிர்பார்த்திராத குட்டன்‌, நிலைகுலைந்துபோனார்.

Published:Updated:
லத்தீஷ்

நீலகிரி மாவட்டம், ஊட்டி புதுமந்து பகுதியைச் சேர்ந்தவர் குட்டன். 44 வயதான இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிப்பவர். அதில் கிடைக்கும் வருவாயில் மனைவி காயத்ரி, மகன்கள் அமீஷ், லத்தீஷுடன் மகிழ்ச்சியாக நகர்ந்துகொண்டிருந்தது குட்டனின் வாழ்வு.

உலகையே ஆட்டுவிக்கும் கொரோனா, குட்டனையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த திடீரென பள்ளிகள் மூடப்பட்டதால் இவர் தனது வேலையை இழக்க நேரிட்டது. போதிய வருவாயின்றி குடும்பத்தை நடத்தத் தடுமாறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படி ஓர் இக்கட்டான சூழலில், 10 வயதேயான குட்டனின் இரண்டாவது மகன் லத்தீஷுக்கு திடீரென இடது கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. வலியால் அவதிப்பட்ட மகனை ஊட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து மூன்று நாள்கள் சோதனை செய்துவிட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஊட்டி அரசு மருத்துவர்கள்.

சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் லத்தீஷ்
சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் லத்தீஷ்

கோவையில் தொடர்ந்து ஒரு வாரம் சிகிச்சை அளித்து பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இப்படி ஒரு‌ பேரிடியை சற்றும் எதிர்பார்த்திராத குட்டன்‌, நிலைகுலைந்துபோனார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொடிய நோயின் பிடியிலிருந்து அன்பு மகனைக் காப்பாற்ற போராடி வரும் குட்டன், தந்தையின் பரிதவிப்பை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``இடது கையில லத்தீஷுக்கு வலி, லேசான வீக்கம் இருந்தது. ஏதோ சின்ன பிரச்னையா இருக்கும்னு ஊட்டி ஜி.ஹெச்க்கு கூட்டிட்டுப்போனோம். இப்போ டாக்டருங்க, `உங்க மகனுக்கு கேன்சர் ஆரம்பகட்டத்துல இருக்கு. நுரையீரல், இதயம் போன்ற உள்ளுறுப்புகளைச் சுத்திலும் சின்னச் சின்ன நிணநீர் கட்டி இருக்கு. இது அவனோட உறுப்புகளைச் சரியா செயல்படவிடாம பாதிக்கும். தொடர்ந்து ஆறு, ஏழு மாசம்‌ சிகிச்சை கொடுத்தா சரிசெய்ய முடியும்'னு சொல்றாங்க. இந்த வருஷம் ஆறாவது போகப்போறான். பச்சப்புள்ளைக்கு இப்படி ஒரு சோதனையானு எங்க குடும்பமே நிலைகுலைஞ்சு போயிருக்கோம்.

மருத்துவப் பரிசோதனை விவரங்கள்
மருத்துவப் பரிசோதனை விவரங்கள்

``இப்போ கொரோனா பிரச்னை இருப்பதால எங்களுக்கு போதிய மருந்து, மாத்திரைகள் சப்ளை இல்ல, தனியார் மருத்துவமனையில பார்த்துக்கோங்க. இங்க ட்ரீட்மென்ட் கொடுக்க முடியாது"னு கோயம்புத்தூர் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சொல்லி கையவிரிச்சுட்டாங்க. எனக்கு‌ சொந்தம், பந்தம்னு எந்த ஆதரவும் கிடையாது.

சில நண்பர்கள் ஆலோசனையில கோயம்புத்தூர்ல ஒரு தனியார் ஆஸ்பத்திரியில இப்போ மகனை சேர்த்திருக்கேன். சிகிச்சைக்கு 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்னு சொல்றாங்க. அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்னு தெரியல. இப்பவே ஆஸ்பத்திரி செலவை சமாளிக்க முடியல. வாழ்க்கை முழுக்க மகனை எப்படிக் காப்பாத்தப் போறேன்னு எனக்கே தெரியல" - கண்ணீர் வார்த்தைகளை நிறுத்துகிறது குட்டனுக்கு.

இந்த அப்பாவின் பரிதவிப்புக்கு வெளிச்சம் கிடைக்குமா..?

Note:

இவருக்கு உதவி செய்ய முன்வரும் வாசகர்கள், help@vikatan.com - என்ற மெயில் ஐ.டிக்கு தொடர்புகொண்டு நீங்கள் செய்ய நினைக்கும் உதவி குறித்துத் தெரிவிக்கலாம். உங்கள் உதவியைக் குட்டனுக்கு கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism