Published:Updated:

திருப்பூரில் டெங்குக் காய்ச்சலுக்குச் சிறுமி பலி..!

திருப்பூரை அடுத்துள்ள போயம்பாளையம் பகுதியில், செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் விஸ்வநாதன். அந்தப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு தியாஸ்ரீ என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி தியாஸ்ரீயை வீட்டின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தனர் பெற்றோர். ஆனால் தியாஸ்ரீக்குக் காய்ச்சல் தொடர்ந்து நீடிக்கவே, உடனடியாக அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையைத் தொடர்ந்தனர். ஆனால் அங்கும் காய்ச்சல் குணமடையாததால், பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியைச் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அங்கு தியாஸ்ரீக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், தியாஸ்ரீயின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இன்று மருத்துவமனையிலேயே  உயிரிழந்திருக்கிறார் சிறுமி.

அடுத்த கட்டுரைக்கு