Published:Updated:

டெங்குக் காய்ச்சலுக்கு பெண் தொழிலாளி பலி..! - லட்சத்தை தொட்ட மருத்துவக் கட்டணம்...!

டெங்குக் காய்ச்சலுக்கு பெண் தொழிலாளி பலி..! - லட்சத்தை தொட்ட மருத்துவக் கட்டணம்...!
டெங்குக் காய்ச்சலுக்கு பெண் தொழிலாளி பலி..! - லட்சத்தை தொட்ட மருத்துவக் கட்டணம்...!

திருப்பூர் மாவட்டம், கள்ளப்பாளையம் பகுதியில் பெண் விசைத்தறி தொழிலாளி ஒருவர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெங்குக் காய்ச்சலுக்கு பெண் தொழிலாளி பலி..! - லட்சத்தை தொட்ட மருத்துவக் கட்டணம்...!

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளப்பாளையம் கிராமத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார் கனகராஜ். அதே தொழிலில் ஈடுபட்டு வந்த அவரது மனைவியான கவிதா(37), கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் கவிதாவை உடனடியாக சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்தனர். கடந்த இரண்டு நாள்களாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காய்ச்சல் மேலும் அதிகரித்ததால், உடனே கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கவிதாவை அழைத்து சென்று சிகிச்சை தொடரப்பட்டது. ஆனால் தொடர்ந்து சிகிச்சை அளித்தும், கவிதாவின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் மருத்துவமனையிலேயே மரணமடைந்திருக்கிறார்.

நெசவுத் தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் கனகராஜின் குடும்பம், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கவிதாவின் மருத்துவ செலவுக்காக 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்வரை செலவு செய்திருக்கிறது. இருப்பினும் கவிதாவை மருத்துவமனையிலிருந்து உயிருடன் மீட்டு வர முடியாமல் போனதுதான் வேதனையின் உச்சம்.