Election bannerElection banner
Published:Updated:

டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய புதுச்சேரி வந்தது மத்தியக் குழு

டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய புதுச்சேரி வந்தது மத்தியக் குழு
டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய புதுச்சேரி வந்தது மத்தியக் குழு

டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய புதுச்சேரி வந்தது மத்தியக் குழு

புதுச்சேரி டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் புதுச்சேரிக்கு வந்தனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை பேராசிரியர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையில் தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் இணை இயக்குனர் கல்பனா பர்வா உள்ளிட்ட 5 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு குறித்து தொடர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மத்தியக் குழுவினர், புதுச்சேரி தலைமைச்  செயலகத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் ஜிப்மர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர்களுடன்  ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து, அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை, ஜிப்மர், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையம் ஆகியவற்றுக்கு சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.  டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்திக்க உள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு