Published:Updated:

சிவகங்கையில் டெங்கு ஒழிப்புப் பணி தீவிரம்: கள ஆய்வு செய்த ஆட்சியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிவகங்கையில் டெங்கு ஒழிப்புப் பணி தீவிரம்: கள ஆய்வு செய்த ஆட்சியர்
சிவகங்கையில் டெங்கு ஒழிப்புப் பணி தீவிரம்: கள ஆய்வு செய்த ஆட்சியர்

சிவகங்கையில் டெங்கு ஒழிப்புப் பணி தீவிரம்: கள ஆய்வு செய்த ஆட்சியர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பாக நடைபெற்று வரும் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் லதா முன்னிலையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் செயலரும் மாவட்டக் கணிப்பாய்வு அலுவலருமான ஜோதி நிர்மலாசாமி ஆகியோர்  பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது, காரைக்குடி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு (ஆண், பெண்), குழந்தைகள் பிரிவு, ரத்தவங்கி ஆகியவற்றைப் பார்வையிட்டு, அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் காய்ச்சல் விவரம் குறித்தும், மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 1, 10-வது வார்டுகள், சங்கராபுரம் ஊராட்சி, குறிஞ்சி நகர், என்.ஜி.ஓ.காலனி, கம்பன் நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி ஆகிய இடங்களில் ஏடிஸ் கொசுப் புழு ஒழிப்புப் பணிகள், புகைமருந்து அடித்தல், நிலவேம்புக் கஷாயம் வழங்குதல், காய்ச்சல் சிகிச்சை முகாம், அபேட் மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு, கம்பன் நகரில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குளோரினேஷன் சரிவர செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரிசோதித்தார்.

நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:1, கழனிவாசல் புகழேந்தி தெருவில் உள்ள ஒரு வீட்டில், லார்வாவை (கொசு உற்பத்தியைத் தடுக்கும் பொருட்டு) சாப்பிடக்கூடிய கம்பூசியா மீன்குஞ்சுகளை கிணற்றில் விடும் பணிகளையும் மேற்கொண்டார்.

மேலும், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காரையூர் ஊராட்சியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு நோய் ஒழிப்பு, தடுப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் விவரங்களைத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் செயலரும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்  ஜோதி நிர்மலாசாமி, கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்கள் தண்ணீர் சேமித்துவைக்கும் குடங்கள், தொட்டிகளை வாரத்துக்கு ஒருமுறை நன்கு சுத்தம் செய்தும்,  வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும் தண்ணீர் தேங்காமலும் வைத்துக்கொள்ளுமாறும், பழைய வாகன டயர்கள், தேங்காய்ச் சிரட்டைகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் அவற்றை அப்புறப்படுத்த நகராட்சி மற்றும் ஊராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு