Published:Updated:

தீக்காயம் எப்படி அளவிடப்படுகிறது? - குரங்கணி மருத்துவர்கள் குழு விளக்கம்!

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு ட்ரெக்கிங் சென்ற 36பேர் ஒத்தைமரம் என்ற இடத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போது காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட போதும், 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். இந்த சம்பவத்தில் கடும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 17 பேர் குரங்கணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு முதலுதவி செய்யப்பட்டு மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தீக்காயங்களின் அளவிற்கு ஏற்ப மருத்துவமனைகள் தேர்ந்தெடுத்து மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டன. காயம்பட்டவர் எவ்வளவு சதவிகிதம் தீக்காயங்களுடன் இருக்கிறார் என்பதை எப்படி கணக்கிடுகிறீர்கள் என குரங்கணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்த மருத்துவர் குழுவிடம் நாம் கேட்ட போது,‘’மீட்கப்பட்டவர்களில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் 50 சதவிகிதத்துக்கும் மேல் தீக்காயங்களுடன் இருந்தனர். நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு என்றால் அது தோல் தான். உடலின் உள்ளே இருக்கும் அனைத்து உறுப்புகளையும் காக்கும் பணியை தோல் செய்கிறது. அந்த தோல் பகுதி தீயினால் காயம்படும் போது உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க ஆரம்பிக்கும். முடிவில் மரணம் ஏற்படும்.

தீக்காயங்களை வால்ஸ் ரூல் அஃப் நைன் (‘’Wallace Rule of Nine’’) என்ற கணக்கீட்டின் படி அளவிடுவோம். ’வால்ஸ்’ என்பவர், பிளாஸ்டிக் சர்ஜரியின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார். அவர் வகுத்துக்கொடுத்த முறையில்தான் தீக்காயங்கள் அளவீடு செய்யப்படுகிறது. உடலின் 9 பகுதிகளைப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் தீக்காயத்தை அதற்கென உள்ள சதவிகித அளவை வைத்து மொத்தமாகக் கணக்கிடுவோம். அந்த வகையில் குரங்கணி தீ விபத்தில் உடனே தீக்காயங்களின் அளவைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ப மருத்துவ உதவிகளை செய்தோம். இந்த அளவீடுகள் குழந்தைகளுக்கு மாறுபடும்’’ என்றனர்.