Published:Updated:

“வலிகளைக் கடந்து சாதித்திருக்கிறேன்!” - திருநங்கை பிசியோதெரபிஸ்ட் சோலு

“வலிகளைக் கடந்து சாதித்திருக்கிறேன்!” - திருநங்கை பிசியோதெரபிஸ்ட் சோலு
பிரீமியம் ஸ்டோரி
“வலிகளைக் கடந்து சாதித்திருக்கிறேன்!” - திருநங்கை பிசியோதெரபிஸ்ட் சோலு

தன்னம்பிக்கை

“வலிகளைக் கடந்து சாதித்திருக்கிறேன்!” - திருநங்கை பிசியோதெரபிஸ்ட் சோலு

தன்னம்பிக்கை

Published:Updated:
“வலிகளைக் கடந்து சாதித்திருக்கிறேன்!” - திருநங்கை பிசியோதெரபிஸ்ட் சோலு
பிரீமியம் ஸ்டோரி
“வலிகளைக் கடந்து சாதித்திருக்கிறேன்!” - திருநங்கை பிசியோதெரபிஸ்ட் சோலு

‘அனைவருக்கும் கல்வி’ திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்னர் அவர்களுக்கு ‘பள்ளி ஆயத்த பயிற்சி மையம்’ மூலமாக பிசியோதெரபி பயிற்சி வழங்குவதற்காக பிசியோதெரபி நிபுணரை நியமிப்பார்கள். அப்படி அரசு தரப்பில் மதுரை மாவட்டம், செல்லம்பட்டியில் பணியாற்றிவருபவர், திருநங்கை சோலு. வலி மிகுந்த பயணத்தைக் கடந்து, இன்று அரசுப் பதவியில் மகிழ்ச்சியைச் சந்தித்திருப்பவர், தன் தழும்புகள் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.

“வலிகளைக் கடந்து சாதித்திருக்கிறேன்!” - திருநங்கை பிசியோதெரபிஸ்ட் சோலு

ஆண்கள் பள்ளியில் படித்த வேதனை!

‘‘என் சொந்த ஊர், விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுந்தரகுடும்பன்பட்டி. எனக்கு மூணு அண்ணா, மூணு அக்கா. என்னோட பெயர் சோலைராஜ். அப்பா, அம்மா ரெண்டு பேரும் விவசாயம் பண்றவங்க. சின்ன வயசுலயிருந்தே பொண்ணுங்களோட டிரெஸ் போடுறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அம்மா கண்டிப்பாங்க, அப்பா அடிப்பாங்க. ஆனா, அவங்களுக்குத் தெரியாம என் அக்காவோட டிரெஸ்ஸைப் போட்டுக்குவேன்.

நான் படிச்சது ஆண்கள் பள்ளி. அதனால, அதிகத் துயரங்களை அனுபவிச்சிருக்கேன். யாரும் இல்லாத நேரத்துலதான் பாத்ரூமுக்குப் போயிட்டு வருவேன். ‘ஏன்டா பொண்ணு மாதிரி நடக்குறே’னு கேலிக் குரல்களும் சிரிப்புகளும் என்னைத் தொடர்ந்துட்டே இருக்கும். நான் நல்லா படிப்பேன். அந்த ஒரே காரணத்துக்காக என்னை எங்க ஸ்கூலைவிட்டு அனுப்பலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வலிகளைக் கடந்து சாதித்திருக்கிறேன்!” - திருநங்கை பிசியோதெரபிஸ்ட் சோலு

2008-ம் வருஷம் ப்ளஸ் டூ முடிச்சதும், கோயம்புத்தூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் `பேச்சிலர் ஆஃப் பிஸியோதெரபி’யில் (Bachelor of Physiotherapy - BPT) சேர்ந்தேன். அந்த இருபாலர் கல்லூரியில், கேலி கிண்டலை என்னால சமாளிக்கவே முடியலை. லீவுக்காக சொந்த ஊருக்கு வந்துட்டுப் போகும்போது, திருநங்கைகள் ஜமாத் பற்றிக் கேள்விப்பட்டு, மதுரைக்குப் போனேன். அங்கே நான் திருநங்கைனு முதன்முதலா பதிவு பண்ணினேன். ‘நான் இங்கேயே இருந்துடுறேன், வீட்டுக்குப் போகலை’னு அடம்பிடிச்சேன். அங்கே என்னை பொண்ணாகத் தத்தெடுத்துக்கிட்டவங்க, ‘இங்கே இருந்தா, நீயும் எங்களை மாதிரி கஷ்டப்படணும். உனக்கு இப்போ படிப்பு ரொம்ப முக்கியம். அதனால எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு படிச்சு முடிச்சுடு’னு சொல்லி என்னை அனுப்பிட்டாங்க.

தோள்கொடுத்த தோழி!

தாராவும் நானும் பள்ளி நாள்களில் இருந்தே நல்ல நண்பர்கள். அவளும் என்னை மாதிரி திருநங்கைதான். தன் குடும்பச் சூழல் காரணமா தன்னுடைய பெண் தன்மையை வெளிக்காட்டாம இருந்தா. காலேஜ்ல ரெண்டாவது வருஷம், பசங்களோட கிண்டலைத் தாங்கிக்க முடியாம, மதுரைக்குப் போன நான், ‘இனி நான் படிக்கலை’னு என்னைத் தத்தெடுத்தவங்களிடம் அடைக்கலமானேன். நான் காலேஜ்ல படிக்கிறேன்னு நினைச்சுகிட்டு எங்க அம்மா ஃபீஸ் கட்டப் பணம் அனுப்பிட்டிருந்தாங்க. அந்தப் பணத்தைவெச்சு, பெங்களூருக்குப் போய் ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். ரெண்டு மாசமா காலேஜுக்குப் போகலை. என் பெண்மையை நான் உணர ஆரம்பிச்ச சந்தோஷம் ஒரு பக்கம், படிப்பை விட்டுவிட்ட துயரம் ஒரு பக்கம். இதுக்கப்புறம் என்ன பண்ணப்போறோம்னு பயம் கவ்விக்கிச்சு. எனக்குக் கடை ஏறுவதில் உடன்பாடில்லை. தாராகூட தங்கினேன். அந்த நேரத்துல அவதான் எனக்கு சப்போர்ட். மறுபடியும் நான் படிச்ச காலேஜுக்கே போனேன். காலேஜ்ல சேர்த்துக்க மாட்டோம்னு சொன்னவங்ககிட்ட, அழுது கெஞ்சினேன். ‘நீ மறுபடியும் காலேஜுக்கு வரணும்னா, மீதமிருக்கிற மூணு வருஷத்தையும் ஆண்கள் மாதிரி டிரெஸ் போட்டுட்டுதான் படிக்கணும்’னு சொன்னாங்க. சம்மதிச்சேன். அதை எப்படிக் கடந்தேன்னு சொல்ல ஆரம்பிச்சா நான் உடைஞ்சிடுவேன்.

நான் கோல்டு மெடலிஸ்ட்!

2012-ம் வருஷம் நான் காலேஜ் முடிக்கிறவரைக்கும் எங்க வீட்டுல யாருக்குமே நான் பொண்ணா மாறினது தெரியாது. ‘ரொம்ப நாள் ஆச்சு, உன்னைப் பார்க்க வர்றோம்’னு அம்மா சொன்னாங்கன்னா, ‘நான் டெல்லிக்கு ட்ரெய்னிங் போயிருக்கேன்’னு சமாளிச்சிடுவேன். நாலு வருஷப் படிப்பை முடிச்சப்போ, எங்க யுனிவர்சிட்டியில் நான்தான் டாப்பர். கோல்டு மெடலிஸ்ட், பெஸ்ட் புராஜெக்ட் அவார்டு, பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட்னு மூணு அவார்டுகள் வாங்கினேன். பிசியோதெரபி படிப்பைப் பொறுத்தவரை, நாலு வருஷம் காலேஜும் ஆறு மாசம் மருத்துவமனையில் ட்ரெய்னிங்கும் இருக்கும். என் பிரின்சிபால், அந்த ஆறு மாச ட்ரெய்னிங்கை பெண் உடை அணிந்தே படிக்க எனக்கு அனுமதி கொடுத்தார். கேம்பஸ் இன்டர்வியூவில் பெங்களூரில் ஒரு மருத்துவமனையில் இடம் கிடைச்சுது. அங்கே பயங்கரமான செக்ஸ் டார்ச்சர் இருந்தது. எங்கே வேலைக்குப் போனாலும் இதே தொந்தரவுதான். இதுக்கிடையில், என் தோழி தாராவுக்கும் சர்ஜரி பண்ணி அவளையும் என்கூடவே கூட்டிட்டு வந்துட்டேன். ஆறு மாசம் எந்த வேலைக்கும் போகாம வீட்டுலேயே இருந்தேன். அப்போ தாரா, எனக்காக கடை ஏறி என்னைப் பார்த்துக்கிட்டா.

அம்மாவின் தற்கொலை!

நான் நிஜமாவே ஒருமுறை ட்ரெய்னிங் போயிருந்தப்போ, எங்கம்மா என்னைப் பார்த்தே ஆகணும்னு என் காலேஜுக்கு வந்திருக்காங்க. அங்கே இருந்தவங்க நான் திருநங்கையா மாறிட்டதைச் சொல்லியிருக்காங்க. ஒரு வாரத்துல, எங்கம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. கடைசியா எங்க அம்மாவோட முகத்தைக்கூட என்னைப் பார்க்கவிடலை. என் கடைசி அக்கா, ‘அம்மாவை நீதான் கொன்னுட்டேன்னு எல்லோரும் உன் மேல கோபமா இருக்காங்க. நீ வந்தா உன்னை அடிச்சே கொன்னுடுவாங்க’னு சொல்லிடுச்சு. அதனால என் அம்மா இறந்ததுக்குக்கூட என்னால போக முடியலை. அம்மா இறப்புல இருந்து என்னால மீண்டு வரவே முடியலை. ஒரு நாள் என்கிட்ட பேசின எங்கப்பாவும், ‘உன் அக்கா, அண்ணன்களுடைய வாழ்க்கையைக் கெடுத்துடாதே... நான் செத்தாகூட நீ வரக் கூடாது’ன்னு சொல்லி போனைவெச்சிடுச்சு. குற்ற உணர்ச்சியில் செத்துட்டிருந்த என்னை, தாராதான் மீட்டுக்கொண்டு வந்தா. 

“வலிகளைக் கடந்து சாதித்திருக்கிறேன்!” - திருநங்கை பிசியோதெரபிஸ்ட் சோலு

நல்ல மனிதர்கள் தந்த வெளிச்சம்!

ஒருநாள் பேப்பர்ல, சிறப்புக் குழந்தைகளுக்கான பிசியோதெரபி ட்ரெய்னருக்கான பணியிட வாய்ப்பைப் பார்த்து விண்ணப்பிச்சேன். எக்ஸாம் பாஸ் பண்ணிட்டேன். ஆனா, என்னை வெயிட்டிங்ல வெச்சிருந்தாங்க. அந்த நேரத்துல,  திருநங்கை ஆவணப்பட இயக்குநர் பிரியா பாபு மேடமும்,  திருநங்கைகள் அமைப்பின் காரைக்கால் மாவட்டத் தலைவியாக இருந்த சுபிக் ஷா மேடமும்,  ‘ஜூனியராக இருந்தாலும் இந்தப் பொண்ணுகிட்ட மார்க் இருக்கு’னு எனக்காக சப்போர்ட் பண்ணினாங்க. கலெக்டர், ஸ்டேட் புராஜெக்ட் ஆபிஸர் எல்லோரும் கலந்தாலோசித்து என்னைத் தேர்ந்தெடுத்தாங்க.

பணியில் சேர்ந்தபோது...

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி பள்ளியில் பணியில் சேர்ந்தேன். செல்லம்பட்டியைச் சுற்றி மொத்தம் 300 கிராமங்களும், அங்கெல்லாம் 200-க்கும் அதிகமான சிறப்புக் குழந்தைகளும் இருந்தாங்க. அதுல பெரிய பிரச்னைகளுடன்  60 குழந்தைங்க இருந்தாங்க. அவங்களுக்கு பிசியோதெரபி கொடுத்தேன். இதை ‘பள்ளி ஆயத்த பயிற்சி மையம்’னு சொல்வாங்க. சிறப்புக் குழந்தைங்களுக்கு பிசியோதெரபி கொடுத்து, நார்மல் குழந்தைகளாக்கி, அவங்களையும் ‘அனைவருக்கும் கல்வி’ திட்டம் மூலமா பள்ளிக்கு அனுப்புறதுதான் இதன் நோக்கம். தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பள்ளிகள் இயங்கிட்டிருக்கு. மதுரையில் மட்டும் கிட்டத்தட்ட 14 பள்ளிகளுக்கு மேல இயங்கிட்டிருக்கு. அந்தக் குழந்தைங்களுக்கு ஸ்பெஷல் டீச்சர்ஸ் இருப்பாங்க. நாங்க ஸ்பெஷல் ட்ரெய்னர்ஸ். மத்தவங்க உதவியோடு நடந்துட்டிருந்த பல குழந்தைங்க இப்போ தனியா நடக்குறாங்க. அவ்வளவு சந்தோஷம் எனக்கு!

“வலிகளைக் கடந்து சாதித்திருக்கிறேன்!” - திருநங்கை பிசியோதெரபிஸ்ட் சோலுஅடுத்து?

தொலைநிலைக் கல்வி மூலமா எம்.பி.ஏ., ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படிச்சேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எனக்கு பிஹெச்.டி படிக்க இலவச ஸீட் கொடுத்திருக்காங்க. சிறப்புக் குழந்தைகள் பற்றி அடுத்த கல்வியாண்டில் என் பிஹெச்.டி ஆய்வைத் தொடங்கவிருக்கேன். என்கூட வேலை பார்க்கிற எல்லோரும் என்னைக் குடும்பத்தில் ஒருத்தரா நினைக்குறாங்க. இந்த சந்தோஷமான மனநிலையில், இன்னும் திருப்தியா சர்வீஸ் பண்ணணும். இப்போவரை எங்க வீட்டில் என்னை ஏத்துக்கலைனு வருத்தமா இருந்தாலும், இந்தக் குழந்தைங்களைப் பார்க்கும்போது என்னை அறியாமலேயே ஒரு தாய்மையை உணர்கிறேன். என் அம்மாவும் என்கூடவேதான் இருக்காங்கன்னு நம்புறேன்!”

- வெ.வித்யா காயத்ரி

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism