தேஜஸ் ஸ்ரீ மேடைக்கு வந்துவிட்டால் போதும்... அரங்கமே ‘தேஜூ...தேஜூ... தேஜூ...’ என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிடுகிறது. அப்படியொரு வரவேற்பு தேஜூவுக்கு. சித்ரா, எஸ்.பி.பி-க்கெல்லாம் அவள் செல்லக் குழந்தை. அவள் பாடி முடித்ததும், எல்லோரின் கண்களிலும் கண்ணீர் அரும்புகிறது. சில நிமிடங்களுக்கு அந்த அரங்கில் தேஜூவின் குரலே நிரம்பியிருக்கிறது. ஆனால், இசையைத் தவிர வேறு எதையும் உணர முடியாது அவளால்.

“தேஜூவை இந்த மாதிரிப் பார்க்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ஆனா, இந்த அளவுக்குக் கொண்டு வருவோம்னு யோசிச்சதுகூட இல்லை. ரெண்டு வயசுவரைக்கும் அவளுக்குப் பேச்சே வரலை...”- தேஜூவின் அப்பா தத்தாத்ரேயன் கணபதி நெகிழ்ச்சியாகப் பேசுகிறார். சென்னை, கே.கே.நகரில் இருக்கிறது வீடு. துறுதுறுவென்று அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறாள் தேஜூ.

விஜய் டி.வி., `சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியின் இப்போதைய ஹீரோயின், தேஜூதான். நடுவர்கள் தொடங்கி போட்டியாளர்கள்வரை இந்த ஏழு வயதுக் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். தேஜூ, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். ஆட்டிசம் என்பது, மூளையின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய நரம்பு சார்ந்த ஒரு குறைபாடு. இந்தியாவில் மட்டும், 125 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை சொல்கிறது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் தனிமையை விரும்புவார்கள். மற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பார்கள். ஒரே மாதியான செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது, பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமலிருப்பது, காரணமில்லாமல் அழுவது, சிரிப்பது... என அவர்களின் இயல்பு வித்தியாசமாக இருக்கும்.

“தேஜூ பிறந்து ரெண்டு வயசுவரைக்கும் எந்த வித்தியாசமும் தெரியலை. பேச்சு மட்டும் வரலை. அது எங்களுக்குப் பெரிய விஷயமாத் தெரியலை. அவளுக்கு இரண்டரை வயசு இருக்கும்போது, புது அப்பார்ட்மென்ட்ல குடியேறினோம். அங்கே தேஜூ வயசுள்ள குழந்தைகள் நல்லாப் பேசுறதைப் பார்த்த பிறகுதான் ‘தேஜூவுக்கு பேச்சு வரலை’ங்கிற விஷயமே புரிஞ்சுது. ‘குடிக்கத் தண்ணி வேணும்’னுகூட கேட்டதில்லையேனு அப்போதான் உணர்ந்தோம். தாகமெடுத்தா தண்ணி இருக்கிற இடத்துக்கு எங்களைக் கூட்டிட்டுப் போவா. இல்லைனா அவளே போய் எடுத்துப்பா... அப்போதான் அவளுக்கு ஏதோ பிரச்னையிருக்குனு உணர்ந்தோம். பெங்களூருவில் ஒரு டாக்டர்கிட்ட காட்டினோம். அவர்தான் `தேஜூக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் (Autism Spectrum Disorder) இருக்கு’னு சொன்னார்’’ - சொல்லும்போதே கண்கள் கலங்குகின்றன தேஜூவின் அம்மா ரமா லலிதாம்பளுக்கு.

ஆட்டிசம் வந்தால் எல்லாமே முடிந்துவிட்டது என்று சிலர் முடிவெடுத்துவிடுகிறார்கள். ஆனால், ரமாவும் தத்தாத்ரேயனும் அப்படி நினைக்கவில்லை.

“எல்லாரும் குழந்தைகிட்ட இருந்த குறைகளைப் பார்த்தபோது, நாங்க அவகிட்ட இருக்கிற பாசிட்டிவ் விஷயங்களைக் கண்டுபிடிச்சோம். ஒரு சினிமாவுல வர்ற வசனத்தைச் சரியா சொல்லிட்டா, அன்னைக்கு முழுக்க நான் சந்தோஷமா இருப்பேன். சில நேரங்கள்ல எங்களால செய்ய முடியாத விஷயங்களைக்கூட செஞ்சு ஆச்சர்யப்படுத்துவா. அவகிட்ட இசை ஞானம் இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டோம். அது இயற்கையா அவளோடவே பிறந்தது மாதிரி இருந்துச்சு. அபார்ட்மென்ட்ல குழந்தைகள் பாடும்போது, இவளும் பாட முயற்சி செய்வா. அதை உற்சாகப்படுத்த ஆரம்பிச்சோம். நானும் அவளும் பேசிக்கிறதையே பாட்டு மாதிரி பாடத் தொடங்கினோம். அவளைப் பேசவைக்கிற பயிற்சியாகவும் அதைச் செஞ்சோம். ஒரு கட்டத்துல நாங்களே எதிர்பார்க்காத வகையில பாட ஆரம்பிச்சா. சூப்பர் சிங்கர்வரைக்கும் இப்போ வளர்ந்து நிக்குறா... ‘சூப்பர் சிங்கர் போட்டியில தேஜூ என்னென்ன பாட்டெல்லாம் பாடியிருக்கா?’னு கேட்டா எங்களுக்குச் சொல்லத் தெரியாது. ஆனா, போட்டியில கலந்துகிட்ட 20 போட்டியாளர்களும் என்னென்ன பாட்டு பாடினாங்கனு தேஜூ வரிசையா சொல்லுவா...” என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் ரமா.

தங்கை ஷ்ரேயஸ் ஸ்ரீ தத்தா பிறந்த பிறகு, தேஜூவின் செயல்பாடுகளில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

“தேஜூ ஒரு குழந்தைகூட விளையாடினா அந்தக் குழந்தையையே சுத்திச் சுத்தி வருவா... தொட்டுக் கூப்பிடுவா. ஆனா, அவளால பேச முடியாது. அவளோட உணர்வுகளை வெளிக்காட்டுறதுல பிரச்னை இருந்துச்சு. ஆரம்பத்துல ரொம்பவே கவலையா இருந்துச்சு. ஷ்ரேயூ வந்தப்புறம் அவ இயல்பு மாறிடுச்சு. ஷ்ரேயூ, தேஜூவைத் தனியா இருக்கவே விடுறதில்லை. எல்லா உணர்வுகளையும் தங்கையிடமிருந்து கத்துக்கிட்டா தேஜூ. ஷ்ரேயூ அவளுக்கு இன்னோர் அம்மா...” என்கிறார் ரமா.

சாலிகிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார் தேஜூ. தங்கை ஷ்ரேயூ, பள்ளிக்கூட நட்புகள், பெற்றோரின் ஊக்கம் எல்லாம் சேர்ந்து தேஜூவை மெள்ள மெள்ளப் பேசவைத்திருக்கிறது. எத்தனை பாடல்களை வேண்டுமானாலும் பிழையில்லாமல் பாட முடியும் அவளால். ஆனால், ஒரு வாக்கியத்தை முழுமையாகப் பேச வேண்டும் என்றால் சற்று சிரமம். வார்த்தைகள் உடைகின்றன.

“நீச்சல், நடனம்னு வேறு சில விஷயங்களையும் கத்துக்கொடுத்தோம். ஆனா, இசையைப்போல வேறு எதுவும் அவளை ஈர்க்கவேயில்லை. நிகழ்ச்சியில பாடின பிறகு கிடைக்கிற கைதட்டல்கள் அவளை சந்தோஷப்படுத்துது. இப்போ கர்னாடக சங்கீதமும், சினிமா சங்கீதமும் கத்துக்கொடுக்கிறோம். அவ எதை விரும்புறாளோ அதை மட்டுமே செய்வோம். நாளைக்கே இசை வேணாம்னு சொன்னா, அப்படியே எல்லாத்தையும் நிறுத்திடுவோம்...” என்கிறார் ரமா.

அப்பாவின் மொபைலில் டாக்கிங் டாமை திறந்து, ‘காலா’ பாடலைப் பாடி விளையாடிக்கொண்டே அம்மாவைப் பார்த்து பூ மாதிரி சிரிக்கிறாள் தேஜூ.

ஆட்டிசத்தை வென்ற அவள், தன் முன் நிற்கும் சவால்களையும் வெல்வாள் ஒருநாள்!

- மோனிகா பரசுராமன், படங்கள்: ராகேஷ்.பெ