Published:Updated:

“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன்

“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன்

தன்னம்பிக்கை

“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன்

தன்னம்பிக்கை

Published:Updated:
“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன்

``வேலை மட்டும்தான் என்னுடைய காதல். கிடைக்கிற எந்த வேலையையும் முழு திருப்தியோடும் முழு உற்சாகத்தோடும் செய்ய ஆரம்பிச்சிட்டா, அதுதான் எனக்கான பெரிய ஆறுதலும் பொழுதுபோக்கும்...” - டெலி ரிப்போர்ட்டிங் வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு, அடுத்ததாக வீல் சேர் ஸ்கில்லர் பணிக்கான பயிற்சிக்காக சண்டிகர் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த கணேஷ் முருகன் நம்மோடு பேசினார். 14 வயதில், குடிநோய்க்கு அடிமையான அப்பாவை இழந்திருக்கிறார் கணேஷ். மூன்று மகள்களையும், ஒரு மகனையும் தனி ஆளாக வளர்த்த அம்மாவை, அவருக்கு அவ்வளவு பிடிக்கிறது.எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டு சின்னச் சின்ன வேலைகளைச் செய்யத் தொடங்கிய கணேஷ், வாழ்வு தந்த எந்த வாய்ப்பையும் நழுவவிடவில்லை. பேப்பர் போடும் வேலைக்கு நடுவில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன்

செப்டம்பர் 2006-ம் ஆண்டில் நடந்த விபத்தைப் பற்றிப் பேசும்போது பதற்றமாகிறார். ``டிரைவரா இருந்தேன். வேலை முடிஞ்சு பைக்குல வீட்டுக்குத் திரும்பும்போது லாரி மோதி அந்த ஆக்ஸிடென்ட் நடந்தது. வண்டியிலிருந்து கீழே விழுந்து, கொஞ்ச தூரம் தூக்கி அடிக்கப்பட்டிருந்தேன். அலுவலகத்துக்கு போன் பண்ணினப்போ, உடனே யாரும் வரலை. ரோட்டுல கடந்து போனவங்களும் காப்பாத்த வரலை. கொஞ்சம் நேரம் கழிச்சு அங்கே வந்த போலீஸ்தான், என்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினாங்க. மூணு நாள் கழிச்சு நான் கண்விழிச்சு பார்த்தபோது, என் முதுகுத்தண்டு சிதைஞ்சு உடல் இயங்குற தன்மையிலேயே இல்லைனு புரிஞ்சுது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன்‘இனி எழுந்திருக்கவே முடியாது’னு யாராவது சொன்னா, அந்த நிமிஷம் உங்களுக்கு எப்படி இருக்கும்? வேலூர் சி.எம்.சி-க்குக் கூட்டிட்டுப் போனாங்க. மருந்து, சிகிச்சைக்கு மட்டும் பணம் வாங்கிக்கிட்டு, இலவசமா படுக்கை வசதி செஞ்சு கொடுத்தாங்க. எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தப்போ, எனக்கு வாழவே பிடிக்கலை” என்று சொல்லி நிறுத்தினார் கணேஷ். ``விபத்துக்குப் பிறகு அம்மாவும் மூத்த அக்காவும்தான் ரொம்பவும் துணையாக இருந்தாங்க. ஆனா, அதையெல்லாம் பொருட்படுத்தாம தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். இயலாமையைத் தாங்கிக்க முடியாமத்தான் அந்த முடிவெடுத்தேன். அந்த முயற்சியில தோத்துப்போய் உயிர் பிழைச்சேன். என் அம்மா அழுதாங்களே தவிர, என்னைக் காயப்படுத்துற ஒரு வார்த்தையையும் பேசலை. அவங்களோட மெளனம்தான் எனக்குப் பெரிய தண்டனையா இருந்தது. ஏற்கெனவே ஸ்பைனல் சிகிச்சைக்குச் செலவழிச்சிட்டு இருந்ததோட, இப்படியான மன உளைச்சலையும் கொடுக்குறேனேனு எனக்கே குற்ற உணர்ச்சி இருந்தது” என்கிற கணேஷ், தன் பயணத்தில் அன்பின் மனிதர்களைக் கண்டடைந்திருக்கிறார்.

“நம்பிக்கையை இழப்பதுதான் தோல்வி!” - கணேஷ் முருகன்

வைத்தியநாதன், முதுகுத்தண்டு பாதிப்பு உடையவர்; தேசிய அளவில் இயங்கிவரும் ஸ்பைனல் கார்டு பாதிப்புகொண்டவர்களுக்கான ஆணையத்தின் உறுப்பினர். தன்னைப்போல் அந்தத் துன்பத்திலிருக்கும் பலரைச் சந்தித்து அவர்களுக்கான வழிகளை, ஆறுதலைச் சொல்வதை வாழ்வாக்கியிருக்கும் அந்த மனிதர்தான், தனது இன்றைய மகிழ்ச்சிக்கான விதை என்கிறார் கணேஷ்.

மொபைல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது, பிறகு வங்கியில் உதவி வேலை, டெலி ரிப்போர்ட்டிங்... எனப் பல வேலைகளில் அனுபவம் பெற்று, இப்போது வீல் சேர் ஸ்கில்லர் பணிக்குத் தேர்வாகி, அதற்கான பயிற்சிக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார் கணேஷ். மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் மாரத்தான்களிலும் தவறாமல் பங்கெடுப்பதை வழக்கமாகவைத்திருக்கிறார். ``தற்கொலை செஞ்சுக்கக்கூட இன்னொருத்தர் துணை தேவைப்படுற நிலைமை இருந்தது. ஆனா, வாழணும்னு முடிவெடுத்த பிறகு நானும், என் நம்பிக்கையும், நான் காதலிக்கும் வேலையும் மட்டுமே போதும்னு புரியுது. நம்பிக்கை இல்லாம இருக்கிற அந்த நேரம் மட்டும்தான் தோல்வி. நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன வழிகள் இருக்கோ, அதையெல்லாம் ஒவ்வொண்ணா தேடணும், அவ்வளவுதான்” என்கிறார் கணேஷ்.

விபத்து, குறைபாடு போன்ற காரணங்களால் முதுகுத்தண்டுவட பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களைப் பார்த்து அவர்களுக்கு ஆறுதலளிப்பது, கூட்டைவிட்டு அவர்கள் வெளிவருவதற்கான வழிகளைக் காட்டுவதுதான் தன் வாழ்வின் இலக்கு என்கிறார் கணேஷ். இந்த ஆண்டின் இரண்டாம் பகுதியில், சென்னையிலிருந்து கன்னியாகுமரிவரை பயணம் மேற்கொண்டு, முதுகுத்தண்டுவட பாதிப்புக்கு ஆளானவர்களைச் சந்திக்கப்போகிறார்.

அன்பில் பயணித்து ஒளியேற்றுங்கள் கணேஷ்!

ம.குணவதி - படங்கள்: தி.குமரகுருபரன்