Published:Updated:

குமரியில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குமரியில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்
குமரியில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்

குமரியில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரளாவில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாகப் பரவிவருகிறது. மலப்புரம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா போன்ற மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

கேரளாவில் டெங்கு காய்ச்சல் பரவிவருவதைத் தொடர்ந்து, அதன் எல்லையோர தமிழகப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. நாகர்கோவிலில் பலரும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். டெங்கு  கொசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், நாகர்கோவில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவிலிலிருந்து, திருவனந்தபுரத்துக்கு தினமும் வேலைக்குச் சென்றுவரும் தொழிலாளர்கள்,  திருவனந்தபுரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு டெங்கு அறிகுறி ஏற்பட்டுள்ளது. அவர்கள் நாகர்கோவில் வரும்போது, கொசு கடித்தால் அந்தக் கொசு டெங்கு வைரஸைப் பரப்பும் கொசுவாக மாறிவிடுகிறது. எனவே, ஒருங்கிணைந்த கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

வார்டுக்கு ஒரு கொசுமருந்து அடிக்கும் மெஷின் என, நகராட்சியில் மொத்தம் 52 மெஷின்கள் உள்ளன. ஒரு வீட்டுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை கொசுமருந்து அடிக்கப்படுகிறது. மேலும், சுய உதவிக்குழுக்கள்மூலம் வீடுகளில் உள்ள ஃப்ரிட்ஜ், கிரைண்டர் ஆகியவற்றில் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா... எனவும் கண்காணிக்கப்படுகிறது. மூன்றாவது கட்டமாக ஓடைகளில் தண்ணீர் தேங்காதவண்ணம் சுத்தப்படுத்தி, கொசுமருந்து தெளிக்கப்படுகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கை, கடந்த ஒரு வாரமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குமரியில், டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிக்கு கூடுதலாக 665 பணியாளர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு