Published:Updated:

பேருந்துகளில் பயணம் செய்யும் டெங்கு கொசுக்கள்.!

பேருந்துகளில் பயணம் செய்யும் டெங்கு கொசுக்கள்.!
பேருந்துகளில் பயணம் செய்யும் டெங்கு கொசுக்கள்.!

பேருந்துகளில் பயணம் செய்யும் டெங்கு கொசுக்கள்.!

பருவமழை தொடங்கிய கையோடு டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், தமிழக-கேரள எல்லையில் சோதனையைக் கடுமையாக்க வேண்டும் எனவும், வாகனங்களுக்குக் கொசு மருந்து அடித்த பின்னரே அனுமதிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். இதுதொடர்பாக மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, ``கேரளாவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக அங்கே ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. நன்னீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இந்தக் கொசுக்கள், பகல் நேரத்தில் கடிக்கும் தன்மை கொண்டவை. மேலும், இந்தக் கொசுக்கள், பஸ், கார்களின் சீட்டுக்கு அடியில் ஒளிந்துகொண்டு நம் கால்களை நன்றாக கடிப்பவை. எனவே, தமிழக- கேரள எல்லையில் வாகனங்களை முறையாக சோதனை செய்து கொசு மருந்து அடிப்பதன் மூலம், இந்த ஏடிஸ் கொசுக்கள் எல்லை தாண்டி தமிழகத்துக்குள் வருவதை தடுக்க முடியும்.

காய்ச்சல் வந்தவுடன் டெங்கு காய்ச்சல்தான் என்று பயப்பட வேண்டாம். மழைக்காலத்தில் வரும் சாதாரண வைரஸ் காய்ச்சலாகக் கூட இருக்கலாம். அப்படியே டெங்கு காய்ச்சல் வந்தாலும், அதைக் குணப்படுத்தும் மருந்துகள் நம்மிடம் இருக்கிறது. எனவே, மக்கள் பயப்படத்தேவையில்லை. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்`` என்றார். தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்றாலும், கோவை, தேனி, பொள்ளாச்சி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் தமிழக – கேரள எல்லையில் அரசு கவனம் செலுத்தினால், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். உடனடி நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

அடுத்த கட்டுரைக்கு