Published:Updated:

`நிலையில்லாமல் மாறும் ஆர்.என்.ஏ!' - கோவிட் வைரஸை ஊர்ஜிதப்படுத்தும் பிசிஆர் தொழில்நுட்பம் #MyVikatan

கோவிட் வைரஸை ஊர்ஜிதப்படுத்தும் பிசிஆர் (PCR) தொழில்நுட்பம் குறித்து கல்லூரி உதவிப் பேராசிரியர் எம். விக்னேஷ் பகிர்ந்துகொண்ட தகவல்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று, கொரோனாவை ஊர்ஜிதப்படுத்த பிசிஆர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்கிறோம். பிசிஆர் (PCR) என்றால் என்ன என்று பார்ப்போம். பிசிஆர், உயிர் தொழில்நுட்பவியலில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு மனிதனோ அல்லது விலங்கோ அல்லது ஏதேனும் ஓர் உயிரினத்தின் மரபணுவை ஆராய வேண்டும் என்றால், அதன் டிஎன்ஏ எனப்படும் அடிப்படை நியூக்கிளிக் அமிலத்தைப் பகுத்து ஆராய வேண்டும். அதன்மூலம் அவ்வுயிரின் மரபை ஆராய முடியும்.

Representational Image
Representational Image

டிஎன்ஏ (DNA), நம் தலைமுடியில் இருந்து தோல் வரை எல்லா உறுப்புகளிலும் பரவி இருக்கும். ஒரு டிஎன்ஏ மூலக்கூறை ஆராய ஒரு டிஎன்ஏ துணுக்கை பல்கிப் பெருக்க வேண்டும். இதை, பிசிஆர் என்ற தொழில்நுட்பம் மூலம் நாம் செய்யலாம். இதை, பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (polymerase chain reaction) என்று கூறுவர். இது, 1983-ம் ஆண்டு காரி முல்லிஸ் என்ற அமெரிக்கரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பிசிஆர் மூலம் ஒரு டிஎன்ஏ-வை நாம் ஜெராக்ஸ் பிரதி எடுப்பது போல லட்சம், கோடி பிரதிகளை எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் அந்த டிஎன்ஏ-வில் நாம் விருப்பப்பட்ட பகுதியை பகுத்து ஆராயலாம். தடயவியலில் பெரும்பாலும் பிசிஆர் உபயோகப்படுத்தப்படுறது. உதாரணமாக, ஒருவரின் பெற்றோரை ஊர்ஜிதப்படுத்த டிஎன்ஏ பரிசோதனைகூட இதன் மூலமாகத்தான் செய்யப்படுகிறது.

பிசிஆர் பரிசோதனைக்கு முதலில் ஒரு கிரியாஊக்கி ( catalyst ) தேவைப்படுகிறது. இதற்கு, டேக் பாலிமெரேஸ் (taq polymerase ) என்ற நொதி தேவைப்படுகிறது. டிஎன்ஏ என்பது இரண்டு பாம்புகள் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டது போல ஒரு இரட்டைச் சுருள் (ஹெலிக்ஸ்) கொண்ட அமைப்பாகும். முதலில், இந்த இரட்டைச் சுருளை தனித்தனியாகப் பிரித்து ஒற்றைச் சுருளாக்க வேண்டும். இதற்கு மிக அதிக வெட்பத்தில், 96 டிகிரி செல்ஷியஸில் டிஎன்ஏ-வை உட்படுத்துவர்.

அதன்பின், தனித்தனியாகப் பிரிந்த சுருளில் எந்தப் பாகத்தின் நகல் வேண்டுமோ அதற்கு எதிர்மறையாக ப்ரைமர் (Primer) டிஎன்ஏ-வை இணைக்க வேண்டும். டிஎன்ஏ என்பது அடினைன், தயாமின், குயனின், சைட்டோசின் என்ற நியூக்கிளியோடைடுகளைக் கொண்டவை. இது A , T , G , C முறையே Adenine, Thymine, Guanine and Cytosine எனப்படும்.

Representational Image
Representational Image

ஆனால் சார்ஸ், கொரோனா போன்ற பெரும்பாலான வைரஸ்களுக்கு டிஎன்ஏ கிடையாது. ஆர்என்ஏ மட்டுமே உண்டு. அதுவும் நிலையில்லாமல் மாறும் தன்மை உடையதால், அதை வைத்து மரபணுவை ஆராய முடியாது. எனவே, ஆர் என்ஏ-வை வைத்து டிஎன்ஏ உற்பத்திசெய்யும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் முறையை, கொரோனாவைக் கண்டறிய RT - PCR (Reverse Transcription Polymerase Chain Reaction) என்ற தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நோயாளிகளாகக் கருதப்படுபவர்களின் சளி மாதிரியை வேதிப்பொருள்கள் கொண்டு அதில் உள்ள புரதம், கொழுப்பு போன்றவற்றை நீக்கிவிடுவர். வெறும் ஆர்.என்.ஏ-வை மட்டும் தனியே பிரித்து, ரிவர்ஸ் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் முறையில் அதை டிஎன்ஏ-வாக மாற்றி, கொரோனா வைரஸ் டிஎன்ஏ-வை தனியே காட்ட அதனுடன் மார்க்கர் (Marker ) எனப்படும் வேதிப்பொருள்களைச் சேர்த்து, நாம் ஆராய நினைக்கும் டிஎன்ஏ பகுதிகளை பிசிஆரில் பன்மடங்காக்குவர்.

Representational Image
Representational Image

முதல் சுழற்சியில் ஒற்றையாக இருக்கும் டிஎன்ஏ, இரட்டையாக மாறும். அடுத்து வரும் சுழற்சிகளில், முறையே இரண்டு டிஎன்ஏ நான்காகவும், நான்கு எட்டாகவும் பெருகும். உதாரணமாக , பிசிஆரை முப்பது சுழற்சிகள் இயக்கினால், அதன் முடிவில் 1,073,741,824 டிஎன்ஏ மூலக்கூறுகள் நமக்கு கிடைக்கும். இவ்வாறு நகல்கள் எடுக்கப்பட்ட டிஎன்ஏ-வுடன் ப்ளோரசன்ட் நிறமியைச் சேர்ப்பர். கோவிட் வைரஸ் இருக்குமேயானால், அந்த டிஎன்ஏ-வில் அதை அந்த ப்ளோரசன்ட் நிறம் காட்டிக்கொடுத்துவிடும்.

இப்படி பிசிஆர் முறையில் நம்பகத்தன்மை இருப்பதால்தான் உலக சுகாதார நிறுவனமே அதை கோவிட் பரிசோதனைக்கு அங்கீகரிக்கிறது.

-எம். விக்னேஷ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு