Published:Updated:

மாஸ்க் பற்றிய தவறான புரிதல்! - அனுபவம் பகிரும் மருத்துவர் #MyVikatan

Representational Image
Representational Image

இந்திய சூழலில் கொரோனா பாதுகாப்புக்கு முகக் கவசம் சாத்தியமா?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வைராலஜி நிபுணர் ஜேக்கப் ஜான் முகக் கவசம் அணிவது கொரோனா தடுப்பில் 100% உதவாவிட்டாலும் அவசியம் தேவை என வலியுறுத்துகிறார்.

உலக சுகாதார மையத்தின் ஆலோசகர் Dr.Mike ryon, அமெரிக்க Surgeon General முகக் கவசம் பொதுமக்கள் அணிவதால் பெருமளவு பலனில்லை என்றே அறிவுறுத்துகின்றனர்.

Representational Image
Representational Image

கல்பாக்க அனுபவம்:

முகக் கவசம் அணியாத ஒருவரை காவலர்கள் சோதனையின்போது தடுத்து நிறுத்துகின்றனர். முகக் கவசம் அணிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்போம் எனக் கட்டாயப்படுத்துகின்றனர். அவரும் வேறு வழி தெரியாமல் அருகில் உள்ள மருந்துக்கடைக்குச் சென்று முகக் கவசம் வாங்கி சோப்பு மூலம் கை கழுவாமலே அணிந்து வருகிறார். காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டோம் என்ற பரவசத்துடன் அவரை உள்ளே அனுமதிக்க அவரும் மகிழ்ச்சியுடன் உள்ளே செல்கிறார்.

அறிவியல் தவறு -

முகக் கவசம் அணியுமுன் கைகளை சோப்போ, ஆல்கஹால் கலந்த கிறுமிநாசினி மூலம் கழுவிய பின்னரே அணிய வேண்டும் என்பதே அறிவியல் விதி.

ஆக அணிந்த அந்த நபருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக நினைத்துக்கொண்ட காவலர்களுக்கும் சரியாகக் கொரோனா தடுப்பு கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது தெளிவு.

முகக் கவசம் அணிந்தால் அதன் வெளிப்பகுதியைத் தொடக்கூடாது என்பது மருத்துவ விதி. தொட்டால் உடனே அதைக் கழட்டி விட வேண்டும். (வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்களே பேட்டியின்போது அதன் வெளிப்பகுதியைத் தொட்டார்.)

Representational Image
Representational Image

இந்திய/தமிழக சூழலில் வெயிலின் வேர்வையால் முகக் கவசத்தைத் தொடாமல் இருப்பது மிகவும் கடினமான செயல்.

மேலும் தண்ணீர் குடிக்க, சாப்பிடும்போது எப்படி முகக் கவசம் அணிய முடியும். அதன் வெளிப்பகுதியைத் தொடும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதையே திரும்ப பயன்படுத்தினால் பலன் தராது. 6 மணி வரை மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும். அதைத் தாண்டினால் பலனில்லை.

உலக சுகாதார மையத்தின் கருத்துப்படி சமூக இடைவெளி/ சோப்பு போட்டு கை கழுவாமல் வெறும் முகக் கவசம் அணிவதால் பயனில்லை என்பதை உணர்ந்து தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் அனைவரையும் முகக் கவசம் அணிய அறிவுறுத்துவது (கட்டாயமல்ல) உரிய பலன் கொடுக்குமா?

மத்திய சுகாதாரத்துறை முகக் கவசம் அணிவதை அறிவுறுத்தியதை (Advisory), கட்டாயம் அணிய வேண்டும் எனத் தமிழ் நாளிதழ் மொழி பெயர்த்தது சரியா?

அமெரிக்காவிலும் முகக் கவசம் அணிய வேண்டும் எனச் சொல்லப்பட்டாலும், அதிபர் ட்ரம்ப் அவர்கள் அதை Voluntary (கட்டாயமல்ல) என்றே கூறியுள்ளார்.

ஜேக்கப் ஜான் அவர்கள் அதற்கும் ஆலோசனை கூறினால் நல்லது.

- மருத்துவர்.வீ.புகழேந்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு