Published:Updated:

`மருத்துவமனைகளில் இடமில்லையா?' - வைரல் போட்டோ குறித்து இத்தாலிவாழ் தமிழர் #MyVikatan

Viral photo
Viral photo

`இத்தாலி மருத்துவமனைகளில் இடமில்லாமல் வெளியே வைத்து மருத்துவம் பார்க்கிறார்கள்' என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் வைரலானது.

``இத்தாலியிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். மருத்துவமனைகளில் இனி இடமில்லை. அடுத்து 21 நாள்களுக்கு வீட்டிற்கு வெளியே வராதீர்கள்" என்று வலியுறுத்தும் ஒரு செய்தி இன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது. இதன் உண்மைத் தன்மை என்ன?

இந்தப் புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்தபோதும், இந்தியா டி.வி-யின் எடிட்டர் ரஜத் சர்மா என்பவர் பகிர்ந்தது சர்ச்சைக்குள்ளானது. `ஒரு முன்னணி தொலைக்காட்சியின் தலைவர் பொறுப்பில் இருக்கும் முக்கியப் புள்ளி ஒருவர், இதுபோன்ற உறுதி செய்யப்படாத செய்திகளைப் பகிர்வது சரியா?' என்ற கேள்வி எழுந்தது.

Croatia hospital
Croatia hospital
Credits : abc.net.au news website

உண்மையில் நடந்தது என்ன?

இந்தப் புகைப்படம் இரு தினங்களுக்குமுன் குரேஷியா நாட்டின் தலைநகரமான ஜாக்ரெப் என்ற இடத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் விளைவால் நிகழ்ந்ததே ஆகும். இதற்கும் இத்தாலியில் உள்ள மருத்துவமனைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

இந்த மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பது குரேஷியா நாட்டின் தலைநகரமான ஜாக்ரெப் என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சீரழிவு.

குரேஷியா நாட்டின் பிரதமர் கூறுகையில், `கடந்த 140 வருடங்களில் இந்த நிலநடுக்கமே மிகவும் கோரமானது' என்றார். மருத்துவமனை என்பதால் அந்த இடமே ஒரு போர்க்களக் காட்சி போன்று இருந்தது.

viral picture
viral picture

அன்று பிரசவம் முடிந்த பெண்களும் தங்களின் பச்சிளம் குழந்தைகளுடன் தலைதெறிக்க ஓடி வந்தது மனதை மிகவும் உலுக்கியது. ராணுவத்தின் துணைகொண்டு இவர்களையும் குழந்தைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற ஆவன செய்யப்பட்டது.

எனவே, இந்தப் புகைப்படம் இத்தாலியில் எடுக்கப்பட்டது அல்ல என்பது தெளிவாகிறது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு