Published:Updated:

`அந்த ஒரு ஃபெஸ்டிவல்தான் முக்கிய காரணம்..!’ - கொரோனா தொற்று குறித்து நெதர்லாந்து தமிழர் வேதனை

சங்கர் ராமன்

நெதர்லாந்தில் ஐந்தோவன் (Eindhoven) என்னும் இடத்தில் வசிக்கும் தமிழர் சங்கர் ராமன், அவர் வசிக்கும் பகுதியில் கொரோனா தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

`அந்த ஒரு ஃபெஸ்டிவல்தான் முக்கிய காரணம்..!’ - கொரோனா தொற்று குறித்து நெதர்லாந்து தமிழர் வேதனை

நெதர்லாந்தில் ஐந்தோவன் (Eindhoven) என்னும் இடத்தில் வசிக்கும் தமிழர் சங்கர் ராமன், அவர் வசிக்கும் பகுதியில் கொரோனா தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Published:Updated:
சங்கர் ராமன்

``நான் இங்கு ஐ.டி நிறுவனத்துல ஒன்றரை வருடங்களாக புராஜெக்ட் மேனேஜராக வொர்க் பண்றேன். நெதர்லாந்தில் கொரோனா வருவதற்கு முக்கிய காரணம் வருடா வருடம் நடக்கும் கார்னிவல் என்னும் திருவிழாதான். பிப்ரவரி மாதம் நடக்கும் இந்த விழா ரொம்பவே விமரிசையா இருக்கும். ரெண்டு மூணு நாள் தொடர்ச்சியா நடக்கும் இந்த விழாவில், மக்கள் எல்லாரும் ஒரு இடத்தில் கூடி ஆடிப் பாடி கொண்டாடுவாங்க. அது பாரம்பர்யம் சார்ந்த விழா என்பதால பெரும்பாலும் எல்லா நிறுவனங்களும் விடுமுறை அறிவிச்சுடுவாங்க.

நெதர்லாந்து
நெதர்லாந்து

கார்னிவல் நடப்பதற்கு முன்னாடி வாரம் பள்ளிகளும் விடுமுறை விட்றுவாங்க. அதனால எல்லாரும் வெளி நாடுகளுக்குச் சுற்றுலா போவாங்க. குறிப்பா பனிக்காலம் என்பதால ஒரு நாளில் பயணிக்குற மாதிரியான இடங்களுக்கு அதிகமா போவாங்க. அப்படித்தான் பலர் வடக்கு இத்தாலியில் இருக்க லோம்பார்டி என்னும் பகுதியின் சுற்றுலாத் தளத்துக்குப் போனாங்க. அங்க போய்ட்டு வந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கு. அவங்க அது தெரியாம, அடுத்த வாரமே நடந்த கார்னிவல் விழாவில் கலந்துகிட்டாங்க. இப்படித்தான் பலருக்கு கொரோனா தொற்று பரவுச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசு தரப்பில் பரிசோதனை செய்து அவங்க டிராவல் ஹிஸ்ட்ரி செக் பண்ணும்போது, முக்கால்வாசி பேர் இத்தாலி போய்ட்டு வந்தவங்கன்னு கண்டுப்பிடிச்சாங்க. பிப்ரவரி 25-ம் தேதிக்கு மேலதான் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துச்சு. கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை, ஒண்ணு ரெண்டு-ன்னு ஆரம்பிச்ச இத்தாலியைப் போலவே பல மடங்கு அதிகரிச்சுட்டே இருந்துச்சு. இத்தாலி மக்கள் லாக் டவுன் அறிவிப்பதற்கு முன்னாடி அரசு சொன்ன அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் பெருசா எடுத்துக்கல. பின்பற்றவும் இல்ல. ஆனா, நெதர்லாந்தில் இருக்கவங்க அரசு சொன்னதைப் பின்பற்றி எச்சரிக்கையா இருக்க ஆரம்பிச்சாங்க.

நெதர்லாந்து
நெதர்லாந்து

மார்ச் 26-ம் தேதி எண்ணிக்கைபடி பார்த்தீங்கன்னா ஏறக்குறைய 6,400 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருந்தது. இன்னைக்கு எண்ணிக்கைபடி மொத்தம் 18,803 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கு. ஏப்ரல் 6-ம் தேதி மட்டும் 1,224 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கு. இதுவரை 1,867 பேர் இறந்திருக்காங்க. இறந்தவங்கள்ள பெரும்பாலும் 60 வயதுக்கு மேல உள்ளவங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மார்ச் 16-ம் தேதியில் இருந்து எல்லாரும் வீட்ல இருந்தபடியே வேலை செய்யுங்கன்னு பிரதமர் அறிவிச்சிட்டாரு. பள்ளிகள் மார்ச் 13 வரைக்குமே இயங்கிட்டுதான் இருந்துச்சு. அதன் பிறகு கொரோனா பற்றிய பேச்சுகள் அதிகரிச்சதும் பார்லிமென்டில் நிறைய பேர் பள்ளிகளை மூட வலியுறுத்தினாங்க. பெற்றோர்களும் கொஞ்சம் பயந்ததால பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுச்சு. மார்ச் 16-ம் தேதியில் இருந்தே யாருமே வெளியே போகல.

நெதர்லாந்து
நெதர்லாந்து

ஸ்கூல் பிள்ளைங்களுக்கு ஆன்லைனிலேயே நோட்ஸ் எல்லாம் அனுப்பி பள்ளி நிர்வாகம் படிக்க வைக்குறாங்க.ஹோம் வொர்க் கொடுக்குறது, தேர்வு வைக்குறதுன்னு எல்லாமே ஆன்லைன்லதான் நடக்குது. வொர்க் ஃப்ரம் ஹோம் நேரம் போக என் பிள்ளைகளுக்கு ஆன்லைன்ல வர நோட்ஸ் வெச்சு சொல்லிக் கொடுக்குறேன். இப்படியே நாள்கள் கடந்துகிட்டு இருக்கு. இந்தியாவில் இருக்க எல்லாரும் சேஃபா இருங்க. அலட்சியமா இருக்காதீங்க’’ என்றார் சோர்வுடன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism