Published:Updated:

அச்சத்தின் விளிம்பில் நிற்கிறோம்…! - அரசுக்குக் குடிமகனின் கோரிக்கை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் மட்டுமே நம்பி இருக்கும் அபலைகள் நாங்கள்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மத்திய அரசு முதல் மாநில அரசுகள் வரை ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகள் என்ற பாகுபாடுகள் இல்லாமல் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை, ஒத்துழைப்பு, வழிகாட்டல் இவற்றுடன் கொரோனாவுக்கு எதிராக உடனடியாக களம் இறங்குவது அவசியம். மற்றபடி இப்போதும் ஒருவர்மீது ஒருவர் ஈகோவும், அதிகாரமும், ஆளுமையும், குறை சொல்லுவதும் மக்கள் நலனுக்கு நல்லதல்ல.

Representational Image
Representational Image

அச்சத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் நம் தேச மக்களை வைத்து இப்போதும் வாக்கு வங்கிகளை உருவாக்கும் அரசியல் வேண்டாம். அவற்றை எல்லாம் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களுடன் ஒன்றிணைந்து மக்கள் நலனை மட்டும் முன்வைத்து இயங்குவது மட்டுமே உயிர் பிழைக்கும் காரியமாக இருக்கும். ஒருவரிடம் ஆலோசனை கேட்பதும் பெறுவதும் உதவி கோருவதும் ஆளும் தரப்புகளுக்கு ஒன்றும் தாழ்ந்த காரியமல்ல.

ஏனெனில் இது ஒவ்வோர் உயிரின் உத்தரவாத காரியம். நம் தேசத்தின் நலம். 130 கோடி மக்களின் ஈடு செய்ய முடியாத உயிர். இந்த நேரத்தில் தனி நபர் துதிபாடல்களும் முன்னிலைப்படுத்தலும் முக்கியமல்ல. பெரும்பாலும் முன்னணி அரசியல் கட்சிகள் அனைத்திலும் மருத்துவர் அணி உள்ளது. அவற்றின் வழிகாட்டலைப் பெறுவது அவசியம். கொரோனாவுக்குத் தீர்வு கண்டால் அது ஆளும் தரப்பின் செல்வாக்கை உயர்த்தும் என்ற மலிவான அரசியல் கணக்குகள் இப்போது வேண்டாம்.

அரசியல் கொள்கை, சித்தாந்தம், பகைமை, முரண் இவற்றை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாய் அரசியல் தலைவர்கள் அணி திரளுவது அவசியம்.

Representational Image
Representational Image

இந்தியக் குடிமக்கள் என்பவர்கள் வெறும் வாக்கு வங்கிக்காகத் தயாரிக்கப்பட்ட பண்டங்கள் அல்ல. நம் மண்ணில் உடன் பிறந்த உறவுகள்; இந்த ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் மட்டுமே நம்பி இருக்கும் அபலைகள்; அந்த ஒப்பற்ற உணர்வுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தனியார் மருத்துவமனைகளும் மருத்துவ நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்களும் பொதுமக்களும் அரசுடன் கரம் கோத்தும் ஆலோசனை வழங்கியும் கொரோனாவுக்கு எதிராகப் படை திரளுவோம். அப்போதுதான் கொரோனோ எனும் கொடுங்கோலனைத் துரத்த முடியும். கொரோனாவுக்கு எதிராக நம் தேசம் அணிதிரளும் நேரம் இது. இல்லையேல் ….?!!

-பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு