Published:Updated:

இளம் வயதினரை குறிவைக்கும் மூட்டுவலி! - தடுப்பது எப்படி?

Representational Image ( Photo by Towfiqu barbhuiya on Unsplash )

ஒரு காலத்தில் முதியவர்களை மட்டுமே பாதித்த மூட்டுவலி, இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக மாறிவிட்டது.

இளம் வயதினரை குறிவைக்கும் மூட்டுவலி! - தடுப்பது எப்படி?

ஒரு காலத்தில் முதியவர்களை மட்டுமே பாதித்த மூட்டுவலி, இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக மாறிவிட்டது.

Published:Updated:
Representational Image ( Photo by Towfiqu barbhuiya on Unsplash )

ஒரு காலத்தில் முதியவர்களை மட்டுமே பாதித்த மூட்டுவலி, இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக மாறிவிட்டது. இதுகுறித்து நம் ``மை விகடன்'' பகுதியில் , அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் முடநீக்கியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் துரை குமார் பகிர்ந்து கொண்ட தகவல் பின்வருமாறு..

சமீப காலமாக 25-40 வயதுப் பிரிவினர் இடையே Arthritis எனப்படும் மூட்டழற்சி நோய் அதிகரித்துவருகிறது. இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கூற்றுப்படி, மூட்டழற்சி ஏற்பட முக்கிய காரணம் வைட்டமின் டி குறைபாடு. மேலும் பாலினம், மரபு அம்சங்கள், உடல் பருமன் போன்ற பல்வேறு காரணிகளால் மூட்டழற்சிப் பிரச்சினை ஏற்படுகிறது.

இளம் வயதினரை குறிவைக்கும் மூட்டுவலி! - தடுப்பது எப்படி?

அறிகுறிகள்

மூட்டழற்சி ஏற்பட்டால் தொடக்கத்தில் மூட்டுகளில் வலி, விறைப்புத்தன்மை போன்றவை இருக்கும். கால்களை இயக்கும்போது அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதன் பின்னர் வெளிப்புற வீக்கம், கால்களை இயக்கும்போது 'கிளிக்' என்ற ஒலி ஏற்படுதல், மூட்டுகளில் கடினமான கட்டிகள் ஆகியவை இருக்கும்.

உடல் எடையைத் தாங்கும் மூட்டுகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் உடல் பருமன், உட்கார்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை, நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது உடலை தவறான அமைப்பில் வைத்திருப்பது, எடை தூக்குதல், கால்பந்து அல்லது ஹாக்கி போன்ற விளையாட்டுகளைப் பயிற்சி செய்தல் உள்ளிட்டவை இளம் வயதிலேயே மூட்டழற்சியைத் தூண்டக்கூடிய செயல்பாடுகள் ஆகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எடைக் கட்டுப்பாடு:

உடல் எடை அதிகமாக இருந்தால் இடுப்பு, முழங்கால்கள் உள்ளிட்ட உடல் எடையைத் தாங்கும் மூட்டுகள் மீது கூடுதல் அழுத்தத்தைத் ஏற்படுத்தும். எடை மீது கவனம் செலுத்தி உணவுகளை உட்கொள்ளுதல், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ளுதல் ஆகியவை இந்த நோய் சார்ந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் உதவும்.

தொடர் உடற்பயிற்சி:

தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. தசைகளை வலுப்படுத்துவது மூட்டுகளுக்கு எடையை சமமாகப் பகிர்ந்தளிக்க உதவுகிறது. ஏரோபிக் பயிற்சிகள், நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளுடன் கால்களை நீட்டிப் பயிற்சிசெய்வது ஆகியவை கால் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவும்.

வலி இருந்தால் கவனம்: ஒருவருக்கு உடற்பயிற்சி செய்யும்போது அல்லது உடற்பயிற்சி செய்த 1-2 மணி நேரத்துக்கு மூட்டு வலி இருந்தால், மூட்டுகளுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். வலி தொடர்ந்தால், பிசியோதெரபிஸ்டை கன்சல்ட் செய்யலாம்.

டாக்டர் துரை குமார்
டாக்டர் துரை குமார்

உடற்பயிற்சி செய்யும்போது, ​​மெதுவான வேகத்தில் தொடங்கி இலக்கை நோக்கி அடுத்தடுத்து முன்னேற வேண்டும். 5-10 நிமிடங்களுக்கு மென்மையான இயக்கங்களுடன், கை கால்களை நீட்டி-மடக்கி வார்ம் அப் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது தசைகள், மூட்டுகள், தசைநார்கள், தசைநாண்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. உடற்பயிற்சி, உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் மாற்றுவதற்கு மறந்துவிடக் கூடாது. இது ஒரே மூட்டுகளில் அழுத்தம் அதிகரிப்பதைத் தவிர்க்க உதவுகிறது. மேலும் மூட்டுகளில் காயம் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


முடிவாக...


மூட்டழற்சி அல்லது மூட்டு அசௌகரியத்தின் ஆரம்ப அறிகுறிகள் ஒருவருக்கு தோன்றினால், உடனடியாக ஒரு சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது. மூட்டழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்த்ரோஸ்கோபி, ஆஸ்டியோடமி, குருத்தெலும்பு சிகிச்சை, முழங்கால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை வசதிகள் உள்ளன.

-டாக்டர் துரை குமார்

முடநீக்கியல் அறுவைசிகிச்சை நிபுணர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism