Published:Updated:

வாழை தோசை, வெந்தயக்கீரை ரொட்டி! - சிம்பிளான சத்தான 5 டிஷ்!

சத்தான உணவு பொருள்களை சிம்பிளாகவும் அதே சமயம் சுவையாகவும் எப்படி சமைப்பது என்பதை விளக்குகிறார் வாசகர் கோவிந்தராஜன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொத்தவரங்காய் மசாலா


கொத்தவரங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. உணவில் கொத்தவரங்காயை சேர்த்து கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது. இப்போது சத்து நிறைந்த கொத்தவரங்காய் மசாலா எப்படி செய்வது


தேவையான பொருட்கள் :-

நறுக்கிய கொத்தவரங்காய் - கால் கிலோ

பெரிய வெங்காயம் - 1(நறுக்கியது)

தேங்காய் துருவல் - 1 கப்

வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பு ன்

மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பு ன்

சர்க்கரை - அரை டீஸ்பு ன்

உப்பு - தேவைக்கேற்ப

கடுகு - அரை டீஸ்பு ன்

சீரகம் - அரை டீஸ்பு ன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பு ன்

எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை :-

கொத்தவரங்காயை காய் முழுகும் வரை தண்ணீர்விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், மஞ்சள்தூள் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


பின் அவற்றுடன் கொத்தவரங்காயை சேர்த்து வதக்கவும். பின்பு மிளகாய் தூள், வேர்க்கடலை தூள், தேங்காய், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். நன்றாக வெந்தவுடன் இறக்கவும். இப்போது சுவையான கொத்தவரங்காய் மசாலா தயார்.

Representational Image
Representational Image

வாழைப்பழ ரவை தோசை

தேவையான பொருட்கள் :-

வாழைப்பழம் - 4

ரவை - 2 கப்

கோதுமை - 1 கப்

சீனி - 6 ஸ்பு ன்

உப்பு - 2 சிட்டிகை

நெய் - சிறிதளவு


செய்முறை :-

வாழைப்பழ ரவை தோசை செய்வதற்கு முதலில் ரவையில் சிறிதளவு தண்னீரை ஊற்றி 15நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பிறகு அதனுள் வாழப்பழத்தை சேர்த்துப் பிசைந்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

பிறகு அதனுள் சீனி, உப்பு, மாவு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து 50 நிமிடங்கள் வைக்கவும்.


பிறகு தோசைக்கல்லில் மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து, திருப்பி போட்டு, சிறிதளவு நெய் ஊற்றி மொறு மொறுவென்று சுட்டு எடுத்தால் சுவையான வாழைப்பழ ரவை தோசை தயார்.

பீட்ரூட் சாதம்


தேவையான பொருட்கள் :-

பீட்ரூட் - கால் கிலோ

பாஸ்மதி அரிசி - 4 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

மஞ்சள்தூள் - அரை டீஸ்பு ன்

மல்லித்தூள் - அரை டேபிள் ஸ்பு ன்

கரம்மசாலாத்தூள் - 1 டேபிள் ஸ்பு ன்

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி அளவு

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க :-

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - அரை டீஸ்பு ன்

உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பு ன்

கறிவேப்பிலை - 1 கொத்து


செய்முறை :-

முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 8 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, மூடி போட்டு மூடி, 3 விசில் விட்டு இறக்கவும்.

பிறகு பீட்ரூட்டை துருவி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு அதில் மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள், மல்லித் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, துருவி வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு, சிறிது உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும்.

பீட்ரூட் வெந்ததும் அதனை இறக்கி, சாதத்துடன் கலந்து, கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும். இப்போது சுவையான பீட்ரூட் சாதம் ரெடி!!!

Representational Image
Representational Image

கம்பு வெந்தயக்கீரை ரொட்டி


தேவையான பொருட்கள்:-
கம்பு மாவு - கால் கிலோ
வெந்தயக் கீரை - அரை கப்
கோதுமை மாவு - கால் கப்
சீரகம் - கால் டீஸ்பு ன்
ஓமம் - கால் டீஸ்பு ன்
மிளகாய்த் தூள் - கால் டேபிள் ஸ்பு ன்
தயிர் - கால் கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :-
கம்பு மாவு, கோதுமை மாவு, சீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், வெந்தயக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். தேவைக்கேற்ப நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவேண்டும்.
உருண்டையை சப்பாத்தி போல் திரட்டி, சு டான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவேண்டும். மேலே வெண்ணெய் தடவி பரிமாறவேண்டும். இப்போது சுவையான கம்பு வெந்தயக்கீரை ரொட்டி தயார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புடலங்காய் குழம்பு


நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் புடலங்காயில் பலவித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. புடலங்காயை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்வதால் நரம்புகள் பலப்படும். இப்போது புடலங்காயை வைத்து வீட்டில் எளிமையாக புடலங்காய் குழம்பு எப்படி செய்வது


தேவையான பொருட்கள் :-


புடலங்காய் - அரை கிலோ


சின்ன வெங்காயம் - அரை கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3

பூண்டு பல் - 4

தக்காளிப் பழம் - 1

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு

பால் - 1 கப்

மிளகாய்த்தூள் - அரை டேபிள் ஸ்பு ன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - அரை டீஸ்பு ன்

பெருஞ்சீரகம் - அரை டீஸ்பு ன்

கறிவேப்பிலை - 2 கொத்து

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

Representational Image
Representational Image

செய்முறை :-

விதை நீக்கிய புடலங்காய் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டை சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, இவற்றுடன் கடுகு போட்டு தாளிக்கவும். அதனுடன் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, பு ண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

புளிக்கரைசல் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மிளகாய் தூளின் பச்சை வாசனை போனதும் பாலை ஊற்றவும்.

ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்திருக்கும் புடலங்காயை போடவும். குழம்பு கெட்டியானதும் கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு இறக்கவும். இப்போது சுவையான புடலங்காய் குழம்பு தயார்.

-ஏ எஸ் கோவிந்தராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு