
இந்த 9 கேள்விக்கு சரியா பதில் சொன்னா, நீங்கதான் `No Corona Super Star!’
டல்கோனா சேலஞ்ச்... லவ்தானா சேலஞ்ச்... இப்படி எத்தனையோ சவால்கள் லைன்ல இருக்கு.
`இந்த லாக் டௌன் காலத்துல இன்னும் என்னவெல்லாம் பார்க்கப்போறோமோ?'-ன்னு சுவத்துல கைய முட்டுக் கொடுத்துட்டே கபாலி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணிட்டுருக்கோம்.
இதுக்கெல்லாம் காரணமான கொரோனா குறித்த செய்திகள் எல்லாம் நம் காது கொடுத்து கேக்காட்டியும், கண்ணைத் தொறந்து பாக்காட்டியும் நமக்கு எப்படியோ வந்து சேர்ந்துடுது.
இதுவும் ஒரு விதத்துல நல்லதுதான். போதுமான விழிப்புணர்வோடு அடங்கியிருந்தா மட்டும்தான் கொரோனாவின் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.
ஆக, கொரோனா அப்டேட்ஸ் நமக்கு ரொம்ப முக்கியம். எனவேதான் உங்களுக்கு இந்த சிம்பிளான - ஜாலியான டெஸ்ட்.
கொரோனா அப்டேட்ஸ் தொடர்பா சிம்பிளான 9 கேள்விகள் இங்கே சாம்பிளுக்காக க்விஸ் வடிவில் இருக்கு. இதுக்கு கரெக்டா பதில் சொல்லி, நீங்க `No Corona Super Star!' ஆகுறீங்களான்னு செக் பண்ணலாம் வாங்க...
நீங்கள் 'No Corona Superstar'-ஆ? கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.