Published:Updated:

அந்த கர்ப்பிணிப் பெண் இறப்புக்கு கொரோனா மட்டுமா காரணம்? -வாசகரின் ஆதங்கப் பதிவு #MyVikatan

Representational Image
Representational Image

கொரோனா தொற்றை சரிசெய்வது என்பது இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமான ஒன்றுதான். ஆனால், மறைமுகமாக அதைவிட அதிகமான உயிரிழப்புகள் இதுபோன்ற சூழ்நிலையால் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே என் கவலை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இந்தியாவில், இப்போது எங்கு பார்த்தாலும் கொரோனா பற்றிய பேச்சு மட்டும்தான் கேட்க முடிகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி என எல்லாவற்றிலும் கொரோனா மட்டுமே பிரதானம் என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மறைமுகமாக கொரோனாவினால் ஏற்படும் பிரச்னைகளை யாரும் பொருட்படுத்துவது இல்லை. சில நாள்களுக்கு முன்பு, ஒரு meme அதிகம் பகிரப்பட்டது. அதில், நோய் பாதிக்கப்பட்டவரிடம் டாக்டர், அவருக்கு அபாயகரமான நிலையில் இதயத்தில் அடைப்பு உள்ளது என்று கூறுகிறார். அதற்கு அந்த நோயாளி, "அவ்வளவுதானா? நான் எனக்கு கொரோனா வந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன்" என்று கூறுவதுபோல இருந்தது.

Representational Image
Representational Image

இன்று துரதிர்ஷ்டவசமாக, கொரோனா தொற்றால் மருத்துவ உலகம் அந்த நிலையில்தான் இருக்கிறது. நேற்று புதுச்சேரி மாவட்டத்தில், ராஜலக்ஷ்மி என்கின்ற கர்ப்பிணிப் பெண், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் டெங்கு நோய் தாக்கி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவ நிபுணர்கள் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டிருந்ததால், அவருக்கு போதிய சிகிச்சை கிடைக்கவில்லை. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பார்க்காத காரணத்தால், பரிதாபமாக ராஜலக்ஷ்மியும் அவர் வயிற்றில் இருந்த சிசுவும் இறக்க நேரிட்டது. ராஜலக்ஷ்மியின் தாயார், இந்த மரணத்திற்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தனது பெண்ணை கவனிக்கத் தவறியதே காரணம் என்று கூறியுள்ளார். மேலும், சேலம் நகரத்தில் ஒரு மன நோயாளி, தான் பெற்ற மகளை அடித்துக் கொன்ற சம்பவத்திலும் மறைமுகமாக கொரோனாவே காரணமாக உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அந்த நபர், சேலம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரிப்பால், மருத்துவமனை நிர்வாகம் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவரை வீட்டுக்கு கூட்டிச்செல்ல நிர்பந்தித்துள்ளது. அதனால் அந்த நோயாளியை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில்தான், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த தந்தை, தன் மகளை அடித்துக் கொன்றுள்ளார். புதுச்சேரி மற்றும் சேலம் நகரில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற எடுத்துக்காட்டு. நான் தேனி மாவட்டத்தில் பணிபுரியும் மருத்தவ நண்பர் ஒருவரிடம் பேசும்போது, கொரோனா தொற்றால் தேனி மாவட்டத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட சிறு கிளினிக் வைத்து இருப்பவர்கள் இந்த ஊரடங்கினால் தமது clinic-ஐ மூடிவிட்டதாகக் கூறினார். இது, கொரோனாவினால் மறைமுகமாக என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

Representational Image
Representational Image

நமது நாட்டில் இந்த சிறு கிளினிக்குகள்தான் பெருவாரியான மக்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்திசெய்து வருகின்றன. சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை எளிதாக மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு இவைதான் உதவுகின்றன. இப்போது அவை மூடப்பட்டிருப்பதால், அனைத்து மக்களும் அரசு மருத்துவமனைகளையோ அல்லது அப்போலோ போன்ற பெரு மருத்துவமனைகளையோ மற்றும் சார்ந்து இருக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகள் அதிக மக்களை கவனிக்கக்கூடிய நிலையில் இல்லை.

மேலும், ஊரடங்கால் அருகில் உள்ள மருத்துவமனைகள் மூடபட்டதால் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல தயங்கி, வியாதிகளைப் பெரிதாக்கக்கூடிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இது, மறைமுகமாக ராஜலக்ஷ்மி போன்று பல உயிர் இழப்புகளுக்கு இட்டுச்செல்லும். நமது அரசும் கடந்த காலங்களில், அரசு மருத்துவமனைகளைப் பெரிதாகத் தரம் உயர்த்தவும் இல்லை. கடந்த ஆண்டுகளில், ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொடுத்து, தனியார் மருத்துவமனைகளை நாடுவதற்கு தான் வழி செய்துகொடுத்திருந்தது.

Representational Image
Representational Image

இந்தச் சூழ்நிலையில், திடீரென்று தனியார் மருத்துவமனைகள் மூடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கக்கூடிய சூழ்நிலையைத்தான் உண்டு செய்யும். கொரோனா தொற்றறை சரிசெய்வது என்பது இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமான ஒன்றுதான். ஆனால், மறைமுகமாக அதைவிட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட கூடாது என்பதே நமது கவலை. இல்லை என்றால், கொரோனா ஏற்படுத்தும் உயிர் இழப்புகளைவிட, இந்த மறைமுகப் பிரச்னைகள் அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்திவிடும். அதனால் அரசு விரைவாகச் செயல்பட்டு, இந்த சிறு கிளினிக்குகள் செயல்பட நடவடிக்கை எடுப்பதே இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.

-ஷியாம் சுந்தர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு