Published:Updated:

ஃப்ரிட்ஜில் இருந்த ஆசிட்; தண்ணீர் என நினைத்து குடித்த மாணவன்!

ஆசிட்

இந்தத் தகவல் அறிந்ததும் சைதன்யாவின் கல்லூரி நண்பர்கள் ஒன்றுசேர்ந்து குளிர்பானக் கடை உரிமையாளரைக் கைது செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஃப்ரிட்ஜில் இருந்த ஆசிட்; தண்ணீர் என நினைத்து குடித்த மாணவன்!

இந்தத் தகவல் அறிந்ததும் சைதன்யாவின் கல்லூரி நண்பர்கள் ஒன்றுசேர்ந்து குளிர்பானக் கடை உரிமையாளரைக் கைது செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published:Updated:
ஆசிட்

கல்லூரி மாணவன் ஒருவன் தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.  

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைதன்யா. விஜயவாடாவில் உள்ள ஓர் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவரும் இவர், கல்லூரிக்கு அருகில் உள்ள குளிர்பான கடையில் தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார். கடை உரிமையாளரிடம் தண்ணீர் கேட்டதற்கு, `ஃபிரிட்ஜில் இருக்கிறது எடுத்துக்கொள்' எனச் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து சைதன்யா ஃபிரிட்ஜில் உள்ள பாட்டிலை எடுத்துக் குடித்திருக்கிறார். சற்று நேரத்தில் அவரின் வாய் மற்றும் குடல் முழுவதும் எரிய, வலியால் அலறித்துடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

ஆசிட்
ஆசிட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவப் பரிசோதனையின்போது, அவர் தண்ணீர் என நினைத்து குடித்த பாட்டிலில் ஆசிட் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்ததும் சைதன்யாவின் கல்லூரி நண்பர்கள் ஒன்றுசேர்ந்து குளிர்பானக் கடை உரிமையாளரைக் கைது செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கடை உரிமையாளரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடை உரிமையாளர் தண்ணீர் பாட்டில் அருகே ஆசிட் பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism