Published:Updated:

தமிழரசனுக்கு மருத்துவ உதவி கிடைத்துள்ளது... ஆனால்?!

நோயால் பாதிகப்பட்ட தமிழரசன்

17 ஆண்டுகளுக்கும் மேல் என்ன நோய் என்றே கண்டறிய முடியாத சூழலில் இருந்துவருகிறார்.

தமிழரசனுக்கு மருத்துவ உதவி கிடைத்துள்ளது... ஆனால்?!

17 ஆண்டுகளுக்கும் மேல் என்ன நோய் என்றே கண்டறிய முடியாத சூழலில் இருந்துவருகிறார்.

Published:Updated:
நோயால் பாதிகப்பட்ட தமிழரசன்
தமிழரசன் வேலைக்கு செல்ல முடியாத சூழலில்தான் உள்ளார். எனவே அவருடைய உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கூடுதல் பண உதவி தேவை உள்ளது.

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ளது குமாரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (35). பத்தாவது வரை படித்துள்ளார். எந்த ஒரு தீய பழக்கங்களும் இல்லாத இவர் படிப்பை முடித்து மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டயர் தயாரிக்கும் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற சில மாதங்களிலேயே இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்றுள்ளது. பின்னர் ஓய்வு எடுத்துக் கொண்டு மருத்துவம் பார்த்துவரும் இவர் 17 ஆண்டுகளுக்கும் மேல் என்ன நோய் என்றே கண்டறிய முடியாத சூழலில் இருந்துவருகிறார்.

தமிழரசனுக்கு மருத்துவ உதவி
தமிழரசனுக்கு மருத்துவ உதவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் இது குறித்து விகடன் இணைய தளத்தில் `என்ன நோய்ன்னே தெரியல; 17 வருஷமா இதே நிலைமதான்!’ - விநோத நோயால் கலங்கும் இளைஞர்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். இந்நிலையில் தமிழரசனுக்கு சிறிய அளவு பண உதவியும், மருத்துவ உதவியும் கிடைத்துள்ளது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து தமிழரசன் நம்மிடம், "என் உடம்பில் வலி சொல்ல முடியாத அளவுக்கு வேதனையா இருக்கும். நம்ம வாழ்க்க இம்புட்டுதானு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது நிறைய பேரு எனக்காக அனுதாபம் தெரிவிச்சு இருந்தாங்க. பாபு, கோபால், சோமு, மஞ்சு உள்ளிட்ட சில விகடன் வாசகர் எனக்கு பண உதவியா 11 ஆயிரம் வரைக்கும் உதவி செஞ்சாக. வேலைக்கு போகாத எனக்கு பெரும் உதவியா இருந்துச்சு. எனக்கு உதவி செஞ்சவங்க எல்லாருக்கும் நன்றி.

தமிழரசனுக்கு மருத்துவ உதவி
தமிழரசனுக்கு மருத்துவ உதவி

டாக்டர் சரவணன் சார் என்னை நேர்ல கூப்டு 5 நாள் அவங்க ஆஸ்பத்திரிலையே வச்சு ட்ரீட்மெண்ட் கொடுத்து ஸ்கேன், ரத்த டெஸ்ட்னு என் உடம்ப நல்லா செக் பண்ணி பார்த்துக்கிட்டாங்க. கொஞ்சநாள் கழிச்சு மறுபடியும் வரச்சொல்லி இருக்காங்க. எனக்கு மருத்துவ உதவி செய்யும் சரவணன் சார்க்கு மிக்க நன்றி. எனக்கு நோய் குணமாகுதோ இல்லையோ என்னையும் மதிச்சு மருத்துவம் பாக்குறது என் மனசுக்கு ரெம்பவும் ஆறுதலா இருக்கு. மனசுக்கு தெம்பும், மகிழ்ச்சியும் கிடைச்சுருக்கு" என்றார் தழுதழுத்த குரலில்.

இது குறித்து மருத்துவரும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சரவணன், "தமிழிரசன் குறித்த செய்தி மனதிற்கு வேதனையாக இருந்தது. அவருக்கு வந்திருக்கும் நோய் குளிர் பிரதேசம் மற்றும் வெளிநாடுகளில் அரிதாக ஏற்படக்கூடிய நோய். சரவணா மருத்துவமனையில் சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவசமாக (AUTOIMMUNE ARTHRITIS ANKYLOSING SPONDYLITIS) சிகிச்சை அளித்து, பிறரின் உதவி இல்லாமல் தானாகவே நடப்பதற்காகப் பயிற்சிகள் அளித்து வருகிறோம். தொடர்ந்து மருத்துவமனைக்கு வரவழைத்து சிகிச்சை அளிப்போம்" என நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழரசன்
தமிழரசன்

தமிழரசினின் பக்கத்து வீட்டுக்காரர் நடராஜன், "நான் ஒரு ஆட்டோ டிரைவர். தம்பி தமிழரசன் தேவைக்கு மருத்துவமனைக்கு என் ஆட்டோவில் அழைத்து செல்கிறேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடிகிறது. தமிழரசன் வேலைக்கு செல்ல முடியாத சூழலில்தான் உள்ளான். எனவே அவனுடைய உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கூடுதல் பண உதவி தேவை. எனவே சமூக ஆர்வலர்கள் தமிழரசனுக்கு கூடுதல் உதவி செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.