Published:Updated:

வாசகர் மேடை: ரஜினி எழுதும் கவிதை!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

வாசகர் மேடை

வாசகர் மேடை: ரஜினி எழுதும் கவிதை!

வாசகர் மேடை

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? ஆளே இல்லாமல் ஐபிஎல் நடக்கப்போகிறது. இதற்கு ஒரு டேக்லைன் சொல்லுங்கள்.

கிரவுண்ட் காலி. ஆனால் டிவி பார்த்து ஜாலி.

மகிழி M.நிஹ்மத் அலி,

அடியக்கமங்கலம்

ஆளே இல்லைன்னாலும், ‘ஆறு’ பெருக்கெடுத்து ஓடும்..!

கே.லக்‌ஷ்மணன்,

திருநெல்வேலி-11

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க காலி கிரவுண்டுக்குள்ள ஆடற கதை உனக்குத் தெரியுமா?

San8416

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்.

rajusundararaja

விசில் போட விசிறி இல்லை

எதுக்கு இந்த ஐபிஎல் தொல்லை.

skkaran_68

ஆடியன்ஸ் ஃப்ரீ... டென்ஷன் ஃப்ரீ...

IamJeevagan

ஜெ.தீபாவுக்கு அவங்க அத்தை சொத்து கிடைச்ச மாதிரி ‘த்ரில்’லே இருக்காது.

Aruns212

மக்கு நாமே கைதட்டு

Ntramesh_kpm

வீட்டில் தனித்திருந்தே ஆட்டத்தை ரசித்திருப்போம்!

ஏ.முருகேஸ்வரி, தென்காசி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை: ரஜினி எழுதும் கவிதை!

? கமல் கவிதை எழுதித்தான் பார்த்திருக்கிறோம். ஒருவேளை ரஜினி கவிதை எழுதினால் எப்படி இருக்கும்?

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, நமது வருங்கால சந்ததியின் நம்பிக்கை.

புதிய சுற்றுச்சூழல் கொள்கையை ஆதரிப்போம், பூமித் தாயைக் காப்போம்.

ராம் மோகன், சென்னை

ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி நம்மள கவிதையெல்லாம் எழுதச் சொல்லுறாங்க. அப்புறம் ‘கவிதை’ன்னு எழுதிட்டேன், இது எப்படி இருக்கு!

SriRam_M_20

ஆன்மிக அரசியலில்

நீங்கள்

ராமன் வழியா

முருகன் வழியா என்றார்கள்.

நான்

கந்தனுக்கு அரோகரா

என்றபடியே

இமய மலை அடிவாரத்தை

அடைந்தேன்.

JaNeHANUSHKA

அப்போ சொன்னதைத தான் இப்பவும் சொல்றேன்

ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும்

எனக்கொரு கவலை யில்லை!

எதிர்த்து ஏதாவது சொன்னா

ஆன்டி இந்தியன் என்பார்களே!

கதம் கதம்

h_umarfarook

நான் அரசியலுக்கு

வரும்போது கவிதை

எழுதுவது உறுதி

balasubramni1

சுத்திச் சுத்தி வந்தாங்க

கேள்வி கேட்டு ஒரு நிமிஷம்

தலைசுத்திப் போக வச்சாங்க

ஐயோ என் ஆசை அத்துப் போக

காவிக்காரங்க வந்தாங்க

காயா பழமா கேட்டாங்க

என் நிம்மதி இத்துப் போக...

KLAKSHM14184257

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? மோடி பேசும் நிகழ்ச்சிக்கு மன் கி பாத் என்று பெயர் வைத்திருப்பதைப் போல எடப்பாடி, ஸ்டாலின் நடத்தும் வீடியோ மீட்டிங்குகளுக்கு என்ன பெயர்கள் வைக்கலாம்?

எடப்பாடி: இது மோடியின் குரல் அல்ல

ஸ்டாலின்: இது ஐபேக்கின் குரல் அல்ல.

Venkat

அம்மாவின் நினைவாய் உங்களோடு.

அப்பாவின் கனவாய் உங்களோடு.

R.நேஹாயாழினி,

சேலம்

எடப்பாடி - அம்மா என்றழைக்காத உயிரில்லையே.

ஸ்டாலின் - தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.

KrishnaratnamVC

எடப்பாடி: மோடி கி பாத்

ஸ்டாலின்: பிரசாந்த் கிஷார் கி பாத்

SriRam_M_20 twitter

? கவுண்டமணியும் செந்திலும் இப்போது சந்தித்தால் என்ன பேசுவார்கள்?

செந்தில் : அண்ணே கல்யாண வீட்டுல கையை நனச்சுட்டுப் போகச் சொன்னாங்க. ஆனா சோறு போடலையே அண்ணே?!

கவுண்டமணி : அடேய் சட்டித் தலையா, கையில சானிட்டைசர் போடுறதுக்குத் தான் அப்படிச் சொன்னாங்க.

எம்.விக்னேஷ், மதுரை

செந்தில் : அண்ணே மக்கள் பாவம்ணே. எம்புட்டு தூரம் நடந்தே போறாங்க.

கவுண்டமணி : உனக்குத் தெரியுது. தெரிய வேண்டியவங்களுக்குத் தெரியலையே. சரி நீ தள்ளியே இரு. போறப்ப சானிட்டைசரைத் தூக்கிட்டுப் போனாலும் போயிடுவ. உன்னையெல்லாம் நம்ப முடியாதப்பா.

pachaiperumal23

வாசகர் மேடை: ரஜினி எழுதும் கவிதை!

பிரதமர் செந்திலிடம் கவுண்டமணி

க: நாங்க உன்கிட்ட என்ன கேட்டோம்?

செ: நிவாரணம் கேட்டிங்க

க: நீ அதுக்கு என்ன சொன்ன?

செ: 20 லட்சம் கோடி நிவாரணம் தரேன்னு சொன்னேன்

க: இப்ப நீ என்ன தந்திருக்க?

செ: கொண்டைக்கடலை தந்தேன்

க: அப்ப நிவாரணப் பணம் எங்க?

செ: அதாங்க இது!

SriRam_M_20

செந்தில் : ஏண்ணே தூரமா உட்காரச் சொல்றிங்க, சமூக இடைவெளியா?

கவுண்டமணி : பக்கத்துல வந்தா பழக்க தோஷத்துல உதைச்சிடுவேன் அதான்!

ARiyasahmed

வாடா கொரானா மண்டையா...

அண்ணே மண்டையப் பத்திப் பேசாதீங்க.

பேசுனா என்னடா பண்ணுவ?

போன வாரம்தான் எனக்கு கொரானா வந்துருக்கு.கட்டிப்பிடிச்சிட்டுப் போயிருவேன்.

அடங்கப்பா, ஆள விடுடா சாமி!

Elanthenral

அண்ணே, கொரோனா வந்தா காது கீழே விழுந்திருமாண்ணே?

ஏண்டா கேக்குற?

இல்லண்ணே, எல்லாருமே ரெண்டு காதையும் ஒரு துணியால சேத்துக் கட்டியிருக்காங்களே அதான் கேட்டேன்.

அடேய், கொரோனாத் தலையா...

செல்லதுரை, சென்னை

நான் உன்ன எத்தன மாஸ்க் வாங்க சொன்னேன்?

ரெண்டு

ஒண்ணு இங்க இருக்கு, இன்னொண்ணு எங்க?

ஏ.ஜெ.பி.இன்பெண்ட்

பெராரோ

சி.எம்.சி, வேலூர்.

க.மணி: ஏன்டா நாயே சிரிக்கிறே..?

செ: அமெரிக்காவை நெனச்சேன்... சிரிச்சேன்.

க.மணி: அடேய்... இந்தியாவைக் கொஞ்சோண்டு நெனச்சேன்னா அந்தச் சிரிப்பே வராதுடா கொரோனா மண்டையா..!

க.அய்யனார், தேனி.

? மயிலிறகு குட்டி போடும் என்று சிறுவயதில் நம்பியிருப்பீர்கள். ஒருவேளை குட்டி போட்டிருந்தால்..?

அந்தக் குட்டி பெரிதானதும் இன்னொரு குட்டி போடும்.

eromuthu

நீ மயில் குட்டி மேய்க்கத்தான் லாயக்குன்னு புதுச்சொல் திட்டக் கிடைத்திருக்கும்.

manipmp

குட்டி போடும் மயிலிறகை விற்றே மில்லினியர் ஆகியிருப்பேன்.

இரா.கோதண்டராமன்,

சென்னை

முதன்முதலில் குளோனிங் முறையைக் கண்டுபிடித்தது தமிழ்ச் சிறுவர்கள்.

உண்மையான தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்.

JaNeHANUSHKA

Hai friends... உங்களுக்கு மயிலிறகை எப்படி குட்டி போட வைக்கணும்னு சொல்லித்தரேன்... இந்த channela subscribe பண்ணிக் கோங்கன்னு youtube video போட்டிருப்பேன்.

Laviher3

அப்போ நிஜமாவே குட்டி போடாதா?!

sasi.varathan

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: ரஜினி எழுதும் கவிதை!

? தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் தவிர வேறு என்ன பட்டம் கொடுக்கலாம்?

? கடவுள் சோஷியல் மீடியாவுக்கு வந்தால் என்ன நினைப்பார்?

? சசிகலா - ஜெ.தீபா இருவரும் சந்தித்தால் என்ன பேசுவார்கள்?

? வீட்டையே ஆபீஸாக மாற்றியதைப்போல ஆபீஸையே வீடாக மாற்றினால் என்ன நடக்கும்?

? என்னென்னமோ செய்து தாமரையை மலரவைக்கப் படாதபாடு படுகிறார்கள் பா.ஜ.க-வினர். நீங்களும் அவங்களுக்கு ஒரு சிறப்பான யோசனையைச் சொல்லலாமே!

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை,

ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism