Published:Updated:

வீடு, பயணம், உணவு, மின்சாதனம்: மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

மழை

மழைக்காலம் தொடங்கும் முன்பே வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை பழுது பார்த்து பராமரித்துக்கொள்வது அவசியம். மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் அபாயம் உண்டு என்பதால், எலெக்ட்ரிகல் சாதனங்களைக் கையாளும்போதும் கவனம் தேவை. கண்டிப்பாக ஈரக்கையால் இயக்கக் கூடாது.

வீடு, பயணம், உணவு, மின்சாதனம்: மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

மழைக்காலம் தொடங்கும் முன்பே வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை பழுது பார்த்து பராமரித்துக்கொள்வது அவசியம். மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் அபாயம் உண்டு என்பதால், எலெக்ட்ரிகல் சாதனங்களைக் கையாளும்போதும் கவனம் தேவை. கண்டிப்பாக ஈரக்கையால் இயக்கக் கூடாது.

Published:Updated:
மழை

கார்காலம் தொடங்கியாகிவிட்டது. இனி தினமும் தூறலும் சாரலும், இடியும் மின்னலும் வந்து நமக்கு `ஹாய்’ சொல்லிவிட்டு போகும். அதுவும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை, வெள்ளத்துக்கு பஞ்சமில்லை. மழைச்சாரலை ரசித்தபடி, சூடான பஜ்ஜியையோ, சமோசாவையோடு சுவைத்துக்கொண்டே, தேநீர் கோப்பையுடன் ஜன்னலருகில் அமர்ந்து காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பழைய பாடல்களுடன் லயித்துவிட்டால்... அதுவே பூலோக சொர்க்கம். அதோடு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், மழை பாதிப்புகளையும் தவிர்க்கலாம்.

வெள்ளம்
வெள்ளம்

* மழைக்காலம் தொடங்கும் முன்பு, அல்லது வெயில் சற்று அதிகம் இருக்கும் நாள்களில் கால் மிதியடிகள், திரைச்சீலைகள், தலையணை உறைகள், கனமான போர்வைகள் போன்றவற்றை துவைத்து எடுத்து வைத்துக்கொள்ளலாம். மழைபிடிக்கத் தொடங்கிவிட்டால் இவற்றையெல்லாம் துவைப்பதும், உலர்த்துவதும் கடினம். ஈரம் காயாமல் பூஞ்சைத் தொற்று ஏற்படலாம்.

* அத்தியாவசிய மளிகைப் பொருள்களான அரிசி, பருப்பு, மாவு வகைகள் போன்றவற்றை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளலாம். டெட்டால், தைலம், பாராசிட்டமால், கொசுவத்தி சுருள் மற்றும் சில அடிப்படையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். சாதாரண காய்ச்சல், சளி, இருமல் தொல்லைகளை அவசரத்துக்கு சமாளிக்க உதவும்.

* மழைநாள்களில் அடிக்கடி மின்தடை ஏற்படலாம். எனவே, பேட்டரி செல், மெழுகுவத்தி கைவசம் இருப்பது முக்கியம். எமர்ஜென்சி விளக்குகளை எடுத்து, தேவைப்பட்டால் ரிப்பேர் செய்தோ, புதிது வாங்கியோ தயாராக வைத்துக்கொள்ளலாம்.

* குடை, ரெயின் கோட்களை பரண் மேல் இருந்து எடுத்து, சுத்தம் செய்து, தேவைப்பட்டால் பழுது பார்த்து வைத்துக்கொள்ளலாம். வீட்டில் எத்தனை பேரோ அதற்கு இணையான எண்ணிக்கையில் இவற்றை வைத்துக்கொள்வது நலம். இல்லையென்றால், இருவர் குடை/ரெயின் கோட்டை எடுத்துச் சென்றுவிட்டார் எனில் அவர் வரும்வரை மற்றவர் காத்திருக்க வேண்டும்.

* மழைக்காலங்களில் கூடுமானவரை வீட்டையும், கழிவறைகளையும் ஈரமில்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகம் ஈரப்பதமான இடங்களில் பூச்சிகள், பூரான்கள் வரும் வாய்ப்புகள் உண்டாகும்.

Rain
Rain
Pixabay

* பார்க்கிங் ஏரியா போல வீட்டுக்கு வெளியிலோ, மொட்டை மாடியிலோ, திறந்த வெளியிலோ தேவையற்ற பொருள்களை போட்டு வைப்பதைத் தவிருங்கள். அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள், புழுக்கள் போன்றவை முட்டையிட்டு, பெருகி, நோயையும் பெருக்கும் அபாயமுண்டு. மாலை நேரங்களில் வேப்பிலை புகைபோட்டு கொசு மற்றும் பூச்சிகள் வராமல் தவிர்க்கலாம்.

* மழை நேரங்களில் குடிநீரை காய்ச்சி வடிகட்டி அருந்துவது நல்லது. கூடுமானவரை சூடான நீரைப் பருகுவது மிகவும் பாதுகாப்பானது. அதேபோல், சமைத்த உணவுகளை சுடச்சுட உண்பது ஆரோக்கியத்துக்கும் நாக்கின் சுவை மொட்டுகளுக்கும் நல்லது. செரிமானத்துக்கு சற்றுக் கடினமான கீரை மற்றும் அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். சூடான கஞ்சி, காய்கறி சூப் போன்றவற்றை அதிகம் பருகலாம்.

* மழைக்காலம் தொடங்கும் முன்பே வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை பழுதுபார்த்து பராமரித்துக்கொள்வது அவசியம். மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் அபாயம் உண்டு என்பதால், எலெக்ட்ரிகல் சாதனங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. கண்டிப்பாக ஈரக்கையால் இயக்கக் கூடாது.

* மழைநாள்களில் வீட்டில் `ஹோம் செப்பல்’ அணிந்துகொள்ளலாம். இதனால் தரையின் ஈரப்பதம் பாதங்களில் ஏறாமல் இருக்கும்; சேற்றுப்புண், பித்தவெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கும். மின்சாதனங்களைப் பயன்படுத்தும்போது ஷாக் அடிக்காமலும் தடுக்கும்.

வீடு, பயணம், உணவு, மின்சாதனம்: மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

* மழைநாள்களில் வெளியில் செல்லும்போது கவனமாகப் பயணிக்கவும். சாலையின் ஓரத்தில் செல்லாமல் நடுவில் செல்வது பாதுகாப்பானது. அது, சாலையோர பள்ளங்கள், அறுந்து விழுந்த மின்கம்பிகள், திறந்து கிடக்கும் மேன்ஹோல்களிடம் இருந்து காக்கும்.

* வெளியில் சென்று வந்தவுடன் சூடான நீரில் குளித்து உடைமாற்றுவது மழைக்கால நோய்களிலிருந்து காக்கும்.

* தொலை தூர பயணங்களை, வானிலை அறிவிப்பு, மழை பெய்ய வாய்ப்பு உள்ளிட்டவற்றைப் பரிசீலித்து முடிவெடுக்கவும்.

மழையில்லாமல் இப்பூமியில்லை. மழையில்லாமல் நமக்கு நீர் ஆதாரங்கள் இல்லை. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் மழையால் கவலை ஏதும் இல்லை.

வெல்கம் மாமழையே!

- தனுஜா ஜெயராமன்