Published:Updated:

Doctor Vikatan: எல்லா டெஸ்ட்டும் நார்மல்; ஆனாலும் கருவுறவில்லை; என்ன தீர்வு?

Baby (Representational Image)
News
Baby (Representational Image) ( Image by Andreas Wohlfahrt from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: எல்லா டெஸ்ட்டும் நார்மல்; ஆனாலும் கருவுறவில்லை; என்ன தீர்வு?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Baby (Representational Image)
News
Baby (Representational Image) ( Image by Andreas Wohlfahrt from Pixabay )

எங்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை. எல்லா பரிசோதனைகளையும் செய்துவிட்டோம். இருவருக்குமே எந்த பிரச்னையும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அப்புறமும் ஏன் கருத்தரிக்கவில்லை?

- மங்கை (விகடன் இணையத்திலிருந்து)

ஜெயராணி
ஜெயராணி

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜெயராணி.

``உங்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்பட்டன என்ற விவரம் இல்லை.

அடிப்படைப் பரிசோதனைகள் எல்லாம் நார்மல் என்று வந்தால் சிறப்புப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்குப் பரிசோதனை செய்யும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள்....

1. கர்ப்பப்பையின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் ஆரோக்கியமாக இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். உள்புறம் கட்டியோ, சதை வளர்ச்சியோ இருக்கக் கூடாது. கர்ப்பப்பை சரியான நீள, அகலத்துடன் இருக்க வேண்டும்.

2. கரு இணைக்குழாய் ஆரோக்கியமாகவும், அடைப்பின்றியும் இருக்க வேண்டும்.

3. கரு முட்டைப்பை மாதம் ஒரு கருமுட்டையை சுழற்சி முறையில் வெளியேற்ற வேண்டும்.

4. கரு முட்டை உற்பத்திக்கான ஹார்மோன்களான எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச், டி.ஆர்.எல், தைராய்டு போன்றவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

கருத்தரிக்காததன் காரணத்தை 90 சதவிகித தம்பதியருக்கு மிகச் சரியாக ஒரு மாத ஆய்வில் கண்டுபிடித்துச் சொல்லிவிட முடியும். உங்கள் மருத்துவர் உங்கள் இருவரையும் பரிசோதித்து, தேவையென்றால் கீழ்க் குறிப்பிட்டுள்ள டெஸ்ட்டுகளை எடுக்கச் சொல்வார்.

* மாதவிடாயான இரண்டாவது நாளில் ஹார்மோன் சோதனையும், பெல்விக் ஸ்கேன் சோதனையும் செய்து பாருங்கள்.

* மாதவிடாயான ஏழாவது நாளில் ஹெச்.எஸ்.ஜி மற்றும் எக்ஸ்ரே செய்ய வேண்டியிருக்கும்.

* மாதவிடாயான 21வது நாளில் எஸ்.பி.4 எனப்படுகிற சீரம் புரொஜெஸ்ட்ரோன் சோதனையும், மாதவிடாயான 7வது நாள் தொடங்கி, கருமுட்டையின் சரியான வளர்ச்சியை ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்ளும் ஃபாலிகுலர் ஸ்டடியும் மேற்கொள்ள வேண்டும்.

இப்படிப் பல விஷயங்களையும் பார்த்து, எல்லா பரிசோதனைகளும் நார்மல் என்று தெரிந்தால், `டயக்னாஸ்டிக் ஹிஸ்ட்ரோ லேப்ராஸ்கோப்பி' (Diagnostic Hystero Laproscopy) என்கிற மைனர் அறுவைசிகிச்சையைச் செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியான செர்விக்ஸில் புண் ஏற்பட்டு, விந்தணு செல்கிற பாதை குறுகலாக இருந்தாலும், குழந்தைப் பேறு உண்டாவதில் தாமதமாகலாம்.

கர்ப்பிணி (Representational Image)
கர்ப்பிணி (Representational Image)

மனைவிக்கு மட்டுமே சோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம் என நினைக்காமல், கணவனும் அவற்றுக்குத் தயாராக வேண்டும்.

சில நேரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தாலும், அந்த விந்தணுக்களுக்கு கருமுட்டையை கருத்தரிக்கச் செய்கிற சக்தி இருக்காது. அதற்கும் சிறப்புப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அவசியம்.

இன்றைய நவீன மருத்துவ உலகில் குழந்தையின்மை சிகிச்சையை சரிசெய்யும் ஏராளமான வழிகள் உள்ளன.

கணவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, நம்பிக்கையோடு இருங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?