Published:Updated:

வல்லாரை மறதிக்கு மருந்து... நினைவாற்றலுக்கு விருந்து!

வல்லாரை மறதிக்கு மருந்து... நினைவாற்றலுக்கு விருந்து!

வல்லாரை மறதிக்கு மருந்து... நினைவாற்றலுக்கு விருந்து!

"ஆர்.எஸ்.இராமசுவாமி"
தலைமை இயக்குநர், சித்த மருத்துவ மத்திய ஆராய்ச்சிக் குழுமம்

வல்லாரை மறதிக்கு மருந்து... நினைவாற்றலுக்கு விருந்து!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

றதியைப் போக்கவும் நினைவாற்றலைப் பெருக்கவும் உதவும் அற்புத மூலிகை வல்லாரை. அளவோடு சாப்பிட்டால் அதிக பலனைத் தரும். அளவுக்கு மிஞ்சினால் தலைவலி, தலை சுற்றல் உண்டாக வாய்ப்பு உண்டு.

•  வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 130 மி.கி முதல் 300 மி.கி. வரை (1-2 சிட்டிகை) எடுத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர, மூளை சீராகச் செயல்படும், நினைவாற்றல் அதிகரிக்கும்.

•  வல்லாரைக் கீரையுடன் சம அளவு துளசி இலை, கருப்பு மிளகு சேர்த்து அரைத்து 65 மி.கி எடை கொண்ட மாத்திரையாக செய்துவைத்து, காலை மாலை இரு வேளையும் (1-2) மாத்திரை சாப்பிட்டு வந்தால், எல்லா வகையான காய்ச்சல்களும் தணியும்.

•  யானைக்கால் நோயால் காலிலும் விரைகளிலும் ஏற்படும் வீக்கத்தைப் போக்க, வல்லாரை இலையை நன்றாக அரைத்துக்  கட்டினால் குணமாகும். வல்லாரைக் கீரையை சாறாக எடுத்தும் வீக்கம் இருக்கும் இடத்தில் பூசலாம். 

•  வல்லாரைப்பொடி 130 மி.கி வீதம் நாளொன்றுக்கு 3 முறை சாப்பிட்டு வர, மேகநோயால் ஏற்படும் நெறிகட்டிய வீக்கம், அவற்றுடன் சேர்ந்து ஏற்படும் புண்களும் சரியாகும். வல்லாரைப்பொடியில் தேவையான அளவு எடுத்து புண்கள் மீது தூவி வர, புண்கள் ஆறும். இலையைப் பச்சையாக அரைத்துப் புண்கள் மீது வைத்துக் கட்டினாலும் புண்கள் எளிதில் ஆறும்.

•  5 முதல் 6 வல்லாரை இலை, 4 முதல் 5 மிளகு இவற்றுடன் ஒரு சிறு பூண்டுப் பல் சேர்த்து அரைத்து, தினமும் காலையில் சாப்பிட வேண்டும். 20 - 40 நாட்களில் நாள்பட்ட புண்கள் குணமாகும். இந்த சமயத்தில் காலை உணவாக மோர் சாதம் மட்டுமே உண்ணவேண்டும்.

•  வல்லாரைக் கீரையை அவித்துப் பிழிந்து எடுத்த சாறு 8.4 கிராமுடன், 1040 மி.கி அளவுக்கு அதிமதுரத்தைக் கலந்து தினமும் இரு வேளைகள் தொடர்ச்சியாக சிலநாட்கள் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.

•  வல்லாரைக் கீரை தண்டுடன் சம அளவு வசம்பு, கடுக்காய், ஆடாதொடை, திப்பிலி, தேன் சேர்த்து முறைப்படி குடிநீர் சேர்த்து  காய்ச்சி, அதில் 15 - 30 மி.லி  அளவுக்கு  தினம் இரு வேளை பருகி வந்தால்,  இளைப்பு நோயினால் வரும் தொண்டைக் கமறல் நீங்கும்.

•  குழந்தைகளுக்கு உண்டாகும் தோல் நோய்கள், குருதிக்கேடு, நரம்பு நோய்கள் மற்றும் முதியவர்களுக்கு உண்டாகும் மேகம், வயிற்று நோய், காய்ச்சலுக்கும், வல்லாரை இலைச் சாறுடன், பசும் பால், தேவையான அளவு அதிமதுரத்தூள் சேர்த்துக் கலந்து கொடுத்து வர  நல்ல பலன் கிட்டும். 

•  குழந்தைகளுக்கு உண்டாகும் சீதக்கழிச்சல், குருதிக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு கோளாறுகளுக்கு 3,4  வல்லாரை இலைகளுடன் சீரகம், நாட்டுச் சர்க்கரை  சேர்ந்து அரைத்து சாப்பிடக் கொடுக்கலாம். அல்லது தனி இலையை மாத்திரம் அரைத்து தொப்புள் மீது பற்று இடலாம்.

•  வல்லாரை இலையுடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்து, குடிநீர் விட்டுக்காய்ச்சி வடிகட்டி 1 - 2 சங்கு குழந்தைகளுக்குப் புகட்ட, காய்ச்சல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

- பு.விவேக் ஆனந்த், படம்: தே.தீட்ஷித்