Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“பன்றிக் காய்ச்சல் பற்றிய விழிப்புஉணர்வு மக்கள் மத்தியில் இருந்தாலும், சந்தேகங்கள் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. என்னிடம் பலரும், ‘நான் டெல்லி போறேன். ஸ்வைன் ஃப்ளூ பாதிப்பு இருக்குமா?’, ‘என் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பலாமா?’ என்று கேட்கின்றனர். பன்றிக்காய்ச்சல், இன்ஃப்ளூயென்சா (Influenza) கிருமியால் ஏற்படக்கூடியது. இது, சாதாரணமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவி சளி, இருமல், காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி.

இது எல்லோருக்கும் மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்திவிடுவது இல்லை. ஆனால், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நுரையீரல், சர்க்கரை நோய் போன்று வேறு நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடலாம். ஒருவருக்கு ஸ்வைன் ஃப்ளூ வந்தால், சாதாரண தலைவலி, காய்ச்சல், சளி, மூக்கடைப்பு, உடல் வலி இருக்கும். இதற்கு, டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டாலே போதும். சிலருக்கு இதைவிட சற்று அதிக அளவிலும், சிலருக்கு மிகக்குறைந்த அளவிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது, அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, நிமோனியா காய்ச்சல் ஏற்படலாம்.  இது ஏற்படுவது மிகமிக அபூர்வம். இதற்கும் பயம் தேவையற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

பொதுவாக காய்ச்சல் வந்தாலே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். அவர் காய்ச்சலுக்கான மருந்தைக் கொடுத்து, கை கழுவுதல், வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது என சில பரிந்துரைகளை ச் செய்வார். அவற்றைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் டாக்டரைப் பார்க்க வேண்டும்.  அப்போதுதான் நோயாளியின் அறிகுறிகளை வைத்து என்ன மாதிரியான பாதிப்பு என்று டாக்டரால் கண்டறிய முடியும். அதன் பிறகு, பன்றிக்காய்ச்சலாகத் தெரிந்தால், டாக்டரின் பரிந்துரைப்படி டேமி ஃப்ளூ மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்கலாம்.  தீவிர பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற வேண்டியது அவசியம்” என்கிறார்,  தொற்றுநோய்கள் சிகிச்சை பிரிவு டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன்.

- பா.பிரவீன் குமார், படம்: எம்.உசேன்

•  பன்றிக்காய்ச்சல் எப்படிப் பரவுகிறது?

•  பன்றிக்காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?

•  காய்ச்சல் வராமல் இருக்க தடுப்பூசிகள் உண்டா?

•  மலேரியாவைத் தவிர்க்க என்ன வழி?

•  டெங்கு காய்ச்சலுக்கு என்ன சிகிச்சை?

•  ரேபீஸ் பாதிப்பை எப்படித் தவிர்ப்பது?

அன்பு வாசகர்களே,ஏப்ரல் 16 முதல் 23 வரை, தினமும் 044 - 66802904என்ற எண்ணுக்கு போன் செய்தால், பன்றிக்காய்ச்சல், டெங்கு போன்ற தொற்று நோய்களைத் தவிர்க்கும் வழிகள், சிகிச்சை முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விரிவாகப் பேசுகிறார் தொற்றுநோய்கள் சிகிச்சை நிபுணர் சுப்பிரமணியன் சுவாமிநாதன்

“இந்த உலகத்தையே பார்க்க வைக்கும் கண்ணின் அளவு, வெறும் 23 மி.மீ தான். இதற்கான கட்டுப்பாடுகள் மூளையில் உள்ளன. எந்த அளவுக்கு கண் சிறிய உறுப்போ, அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதனால்தான் கண் பராமரிப்பு மிக முக்கியம் என்கிறோம். பலரும் எதற்காக செக்அப் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். கண்களை, முகாம்களுக்கு சென்று பரிசோதித்துக்கொள்வதும், ஆப்டிகல் கடைகளிலேயே பரிசோதித்துக்கொள்வதும் தவறு. கண் பரிசோதனை என்பது, வெறும் கிட்ட- தூரப் பார்வையைப் பரிசோதிப்பது மட்டும் அல்ல.  அதையும் தாண்டி கண்ணின் அழுத்தம், விழித்திரை என பல விஷயங்களை பரிசோதிப்போம்” என்கிறார் கண் நல மருத்துவர் பி.காந்தாமணி.

“கண் நலம் என்பது சரிவித ஊட்டச்சத்து மிக்க உணவில் இருந்து தொடங்குகிறது.  அதுவும், முதலில் பெண்கள் கர்ப்பக் காலத்திலேயே ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது குழந்தையின் ஒவ்வொரு உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கர்ப்பிணி உண்ணாவிரதம் இருக்கக் கூடாது. தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும், கண்டகண்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. குழந்தை பிறந்ததுமே கண் மருத்துவரிடம் காண்பித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் முறையாகச் செய்தால் கண் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

இன்றைக்கு குழந்தைகள் அதிக அளவில் டி.வி பார்க்கின்றனர். எந்த நேரமும் கம்ப்யூட்டர், மொபைல் கேம் பயன்படுத்துகின்றனர்.  குழந்தைகள் வெளியில் சென்று விளையாடும் வாய்ப்பு குறைந்துவிட்டது. அவர்களை ஓடி ஆடி விளையாட விட்டாலே பல பிரச்னைகள் தீர்ந்துவிடும். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அதிக நேரம் டிவி-யில் செலவழிக்கின்றனர். மொபைல், கம்ப்யூட்டரை கண்ணுக்கு அருகில் வைத்து பார்க்கும்போது ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்ற பிரச்னை ஏற்படும். சரியான தூரத்தில் அமர்ந்து ஒளிர்த்திரையைப் பார்ப்பது, நாற்காலியில் உட்காரும் பொசிஷன் சரியாக இருப்பது, நிமிடத்துக்கு குறைந்தது 12 முறை கண்களை சிமிட்டுவது, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, கண்களை மூடி அல்லது 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை பார்த்தபடி கண்களுக்கு ஓய்வு கொடுப்பது போன்ற செயல்களின்மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும்” என்கிறார் டாக்டர் பி.காந்தாமணி.

- பா.பிரவீன் குமார், படம்: குமரகுருபரன்

•  கண் பராமரிப்பு ஏன் அவசியம்?

•  கண்களைப் பாதிக்கும் விஷயங்கள் எவை?

•  கம்ப்யூட்டர், மொபைல் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய கண் பாதிப்புகளைத் தவிர்க்க என்ன வழி?

•  கோடையில் கூலிங்கிளாஸ் ஏன் அணிய வேண்டும்?

•  நவீன கண் நல சிகிச்சை முறைகள் எவை?

அன்பு வாசகர்களே, ஏப்ரல் 24 முதல் 30 வரை, தினமும் 044 - 66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், கண் நல பராமரிப்பு வழிகளை விவரிக்கிறார் கண் மருத்துவர் பி.காந்தாமணி