Published:Updated:

ஒரு டீ சொல்லேன்...

ஒரு டீ சொல்லேன்...

ஒரு டீ சொல்லேன்...

ஶ்ரீமதி வெங்கட்ராமன்
கிளினிகல் நியூட்ரிஷியன்

ஒரு டீ சொல்லேன்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டீ குடிக்கலாம் என்று ஹோட்டல் சென்றால், “டீயா காபியா’’ என்று கேட்ட காலம் போய், “கிரீன் டீயா, வொயிட் டீயா” எனக் கேட்டு, கலர் கலராய் டீ விற்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழக்கமாகச் சாப்பிடும் டீ, ‘டஸ்ட் டீ’ வகையில் வரும். டீ வகைகளில் உடலுக்கு எந்த நலனையும் தராத டீ இது. டீயில் என்னென்ன வகைகள்கள் உள்ளன? எந்த டீயை நம்பிச் சாப்பிடலாம்?

ஒரு டீ சொல்லேன்...

வொயிட் டீ

இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். தேயிலைச் செடியின் இளந்தளிர்களைப் பறித்துத் தயாரிக்கப்படுவதால், இந்த டீ புதுமையான சுவையுடன் இருக்கும். லேசான இனிப்புச் சுவையுடன் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதில், பாலிபினால்ஸ் என்கிற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து இருப்பதால், புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திறன் கிடைக்கும். இதில், ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால், பற்சிதைவு மற்றும் பற்குழி போன்ற பிரச்னைகள் வராமல் காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, கிருமித் தொற்றுப் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.

ஒரு டீ சொல்லேன்...

கிரீன் டீ

இதில் அதிக அளவு பாலிபினால்ஸ் இருக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சில புற்றுநோய்கள் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

ஒரு டீ சொல்லேன்...

ஓலாங் டீ

பழங்கள், மல்லிகை போன்ற பல நறுமணங்களில் கிடைக்கிறது. வைட்டமின்கள், தாமிரம், செலினியம், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும். எலும்புகள் உறுதி அடையும். அலர்ஜி, பற்கள் தொடர்பான பிரச்னைகள் வராது. புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் இந்த டீயைக் குடிக்கலாம்.

ஒரு டீ சொல்லேன்...

ஐஸ் டீ

பிளாக், ஓலாங், வொயிட், கிரீன் போன்ற டீ வகைகளை, ஐஸ் டீயாகவும் தயாரிக்கலாம். டீயைத் தயாரித்துவிட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடவும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, மூன்று துளசி இலைகள், தர்பூசணி, திராட்சை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சுப் பழத்துண்டுகள் - சிறிதளவு, மூன்று ஐஸ் கட்டிகளை, ஃபிரிட்ஜில் வைத்த டீயுடன் கலந்தால், மணமும் சுவையும் மிக்க ஐஸ் டீ தயார். வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளதால், ஒரு நாளுக்குத் தேவையானப் புத்துணர்வு ஒரு கப் டீயில் கிடைக்கும்.

ஒரு டீ சொல்லேன்...

மூலிகை டீ

துளசி, புதினா, ரோஸ்மெரி, செம்பருத்தி, ரோஜா இதழ்கள், ஆவாரம் பூ, மல்லிகை, லாவண்டர், ஏலக்காய், லெமன் கிராஸ், இஞ்சி போன்றவற்றைக் கலந்து, மூலிகை டீ தயாரிக்கலாம். குமட்டல், தலைவலி, இருமல், சளி போன்ற தொல்லைகள் தீரும். புத்துணர்வைத் தரும். கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்கள் அண்டாது. நீண்ட, ஆழமான தூக்கம் கிடைக்கும். வயிறு மற்றும் செரிமான இயக்கங்களுக்கு மிகவும் நல்லது. நல்ல மனநிலையைத் தரும். நரம்பு மண்டல இயக்கத்தைச் சீராக்கும். தலைவலி குணமாகும். உள்ளுறுப்புகளில் இருக்கும் கழிவுகள் வெளியேறும்.

ஒரு டீ சொல்லேன்...

காபி

சிக்கரி என்பது ‘கெஃப்னைன் ஃப்ரி’ மூலிகை.  இது காபியில் சேர்க்கப்படும் மூலப்பொருள். காபி கொட்டையில் க்யூனைன் (Quinine) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், தலைவலியைப் போக்கும். நல்ல மனநிலையைத் தரும். பால் சேர்க்காமல் அளவாகக் குடித்தால், குடலில் வாழும் கெட்ட நுண்ணுயிரிகள் அழியும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். ஈரலைப் பலப்படுத்தும்.

எப்போது காபி குடித்தாலும், சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம். கருப்பட்டி, தேன் சேர்த்த காபியே சிறந்தது. நல்ல புத்துணர்ச்சி உடனடியாகக் கிடைக்கும். அடிக்கடி குடிக்காமல், ஒருநாளைக்கு ஒருமுறை எனக் குடிப்பது ஆரோக்கியமான பழக்கம்.

பிரத்யேக சுவையுடன் காபி கடைகளில் கிடைக்கக்கூடிய காபி வகைகளை அளவாக எப்போதேனும் குடிக்கலாமே தவிர, தினமும் குடிக்கக் கூடாது. வெவ்வேறு சுவைகளிலும் தயாரிப்புகளிலும் கிடைக்கும், காப்பசினோ, எஸ்பிரஸ்ஸோ போன்ற காபிகள், சுவையை அள்ளித்தந்தாலும் நல்ல பலன்கள் அதில் இல்லை. 

 - மினு, படம்: தி.கெளதீஷ்