Published:Updated:

இது டாக்டர் ஃபேமிலி

இது டாக்டர் ஃபேமிலி

பெண்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டாலே, குடும்பம், சமூகம் எல்லாம் ஆரோக்கியமாகிவிடும் என்கிறார், டாக்டர் ராஜம் ஆதிலிங்கம். நெல்லையில் அன்னை வேளாங்கன்னி மருத்துவமனையை உருவாக்கி, பெண்கள் நலன் குறித்துத் தொடர்ந்து பேசிவருபவர். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு, நெய்யூர் மற்றும் செங்கோட்டை மருத்துவமனைகளில் பணியாற்றிய பிறகு, பாளையங்கோட்டையில் இந்த மருத்துவமனையை அமைத்தார். இவரது கணவர் ஆதிலிங்கம், பொறியாளர். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையைக் கட்டியவர். இதற்காக அப்போதைய அரசு இவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தது. அங்குள்ள பிரபல மருத்துவமனைகளைப் பார்த்துவந்து, அதனைப் போலவே வடிவமைத்தார்.

ராஜம் ஆதிலிங்கத்தின் மகள் ஜிஜி செல்வன், மகன்கள் ஆண்டனிராஜ், ஃபிரான்சிஸ் ராய் ஆகியோரும் டாக்டர்கள். இது தவிர, ஜிஜி செல்வனின் மகன் ஜோசப் ஃபெடலிஸ், அவரது மனைவி மதுபென், மகள்கள் ஜீனா, ஜேன், மருமகன் அனிதாராஜ் ஆகியோரும் டாக்டர்களே. மொத்தத்தில் இவரது குடும்பத்தில் 46 டாக்டர்கள். 

இது டாக்டர் ஃபேமிலி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“உங்கள் தந்தை மாதிரி பொறியாளர் ஆகாமல், குடும்பத்தில் உள்ள அனைவரும் மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்தது ஏன்?” டாக்டர் ஜிஜி செல்வனிடம் கேட்டோம்.

‘‘எங்களுக்கு அம்மாதான் இன்ஸ்பிரேஷன். அவரிடம் நோயாளிகள் ஒரு குடும்ப உறுப்பினரைப் போலவே பழகுவார். அம்மாவும், நோயாளிகளை பரிசோதித்து, மருந்து மாத்தி
ரைகளை மட்டும் தந்து அனுப்பாமல், அவர்களின் குடும்ப விஷயங்களையும் கேட்டு, அதற்கு ஆலோசனைகளும் சொல்வார்.  நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது,  குடும்பத்தோடு வெளியூருக்கு போனால்கூட, அங்கும் யாராவது அம்மாவை அடையாளம் கண்டுபிடித்து, ஓடிவந்து பேசுவார்கள். இதெல்லாம்தான் எங்களையும் மருத்துவம் படிக்கவைத்தது. என்னிடம் சிகிச்சைக்கு வருகிற பெண்களிடம் அம்மாவைப் போலவே உட்கார்ந்துபேசுவேன்’’ அம்மாவைப் பெருமையாகப் பார்த்தபடி சொன்னார் ஜிஜி.

தொடர்ந்து பேசிய டாக்டர் ஆண்டனிராஜ், “எங்களுக்கு ஏதாவது காய்ச்சல், தலைவலி வந்தால், எல்லா அம்மாக்களையும் போல எங்கள் அம்மாவும் பதறிப்போவார். உடனே, மருத்துவராக மாறி மருந்துகளைக் கொடுப்பார். அம்மாவின் அன்பையும் டாக்டரின் கரிசனத்தையும் பார்த்து வளர்ந்ததால், எனக்கும் டாக்டர் படிப்பின் மேல் மதிப்பும் ஆர்வமும் இருந்தன. அப்பாவும் அதற்கு ஊக்கம் தந்தார். அதனால், லேப்ராஸ்கோப்பிக் மற்றும் பொது அறுவைசிகிச்சை நிபுணரானேன்’’ என்றார்.

‘‘இங்குள்ள கிராமப்பகுதிகளில் நிறைய பேருக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது. வயதானவர்கள் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில், எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவைசிகிச்சை மருத்துவத்தை நான் படிக்க வேண்டும் என அம்மா விரும்பினார். அப்படித்தான் படித்தேன்’’ என்கிறார் ஃபிரான்சிஸ் ராய்.

இது டாக்டர் ஃபேமிலி

“குடும்பத்தில் அனைவருமே மருத்துவராக இருக்கும்போது, குழந்தைகளைக் கவனிப்பதற்கும் ஒன்றாக வெளியிடங்களுக்கு செல்வதற்கும் எப்படி நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?”

‘‘நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருப்பது, எப்போதாவதுதான் நடக்கும். அந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வோம். காலை உணவின்போது, எல்லோரும் சேர்ந்து சாப்பிட வாய்ப்பு கிடைக்கும். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், யாராவது ஒருவர் குழந்தைகளோடு இருப்பது போல் பார்த்துக்கொள்வோம். குடும்பத்தோடு வெளியூர்களுக்குச் செல்வதாக இருந்தாலும், முன்கூட்டியே பிளான் செய்து வேலைகளை ஒதுக்கிவைத்து விடுவோம். சில நேரம், குடும்ப உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குகூட எல்லாரும் ஒன்றாகச் செல்ல முடியாது. வீட்டு உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் பிரச்னை இல்லாமல் போகிறது’’ என்கிறார், டாக்டர் ஆண்டனிராஜின் மனைவியும் குழந்தைகள் நல சிகிச்சை நிபுணருமான பானுமதி.

காது, மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணரும் டாக்டர் ஃபிரான்சிஸ் ராயின் மனைவியுமான வாணி ராய், ‘‘என் மகள் நடாஷாவும் நாதனும் ஸ்கூலில் இருந்து வந்ததுமே எங்களைத் தேடுவார்கள். அம்மா! ஏன் லேட்டுன்னு ஏக்கமாகக் கேட்டுக்கொண்டு இருந்த குழந்தைகள், இன்றைக்கு நிறைய பேரை குணமாக்கினீங்களானு ஆர்வமாகக் கேட்கும் அளவுக்குப் பக்குவமாகி விட்டார்கள்’’ என்கிறார்.

‘‘கிறிஸ்துமஸ், ஈஸ்டர் சமயங்களில், வெளியூரில் இருப்பவர்களும் இங்கு வந்துவிடுவதால், கிராமமே ஒன்றாகக் கூடியிருப்பது போல் எங்கள் வீடே கலகலப்பாக இருக்கும். ஒரு திருவிழா மாதிரி அற்புதமான தருணம் அது. உடலுக்கு மட்டும் இல்லாமல் மனதுக்கும் நிறைவாக இருக்கும்’’ என்று சந்தோஷமாகச் சொல்கிறார் ஃபிரான்சிஸ் ராய்.

“உங்கள் ஃபேமிலி ஃபிட்னெஸ் பற்றி சொல்லுங்களேன்?” 
 
‘‘உணவு விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருப்போம்.  பெரும்பாலான நாட்களில் எங்கள் வீட்டில் காலை உணவாக அவித்த கடலை, முளைகட்டிய பயிறுகள், அவல், பழங்கள்தான் இருக்கும். மதியம், நிறைய காய்களும், கீரைகளும் எடுத்துக்கொள்வோம். மீன், மாமிச உணவு வகைகளைச் சேர்த்துக்கொண்டாலும், அதிகம் எண்ணெய் சேர்க்காமல் பார்த்துக்கொள்வோம். ‘சரியான நேரத்துக்கு, சத்தான உணவு’ என  அம்மா கற்றுக்கொடுத்த உணவுப் பழக்கத்தைதான் நாங்கள் அனைவரும் கடைப்பிடிக்கிறோம். எங்கள் அப்பா 82 வயதிலும் தவறாமல் நடைப்பயிற்சி செய்வார். அம்மாவுக்கு தோட்ட வேலைகளில் ஈடுபாடு அதிகம். தினமும் இரண்டு மணி நேரமாவது, தோட்டத்தில் வேலை செய்வார்.

அண்ணனும் நானும் தினமும் நடைப்பயிற்சி செய்வோம். ஷட்டில் விளையாடுவோம். அண்ணன் ஓய்வு நேரத்தில், நண்பர்களுடன் கார் ரேஸுக்குச் செல்வார். இப்படி, ஒவ்வொருவரும் அவரவர்குப் பிடித்த வகையில், பொழுதுபோக்கு வைத்திருப்பதால் சோர்வுக்கே இடமில்லை’’ சிரிக்கிறார் ஃபிரான்ஸிஸ்.

இது டாக்டர் ஃபேமிலி

டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்...

• வயதானவர்களை அதிகம் பாதிக்கக்கூடியது, ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய். மாதவிடாய் நிற்கும் சமயத்தில், 45 வயதுக்கு மேல் உள்ள பெண்களையும், 60 வயதுக்கு மேல் உள்ள ஆண்களையும், இந்த நோய் அதிகம் பாதிக்கும். மது குடிப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு இந்த நோய் முன்கூட்டியே வரும் வாய்ப்பு அதிகம். டெக்ஸா ஸ்கேன் செய்துபார்த்தால் மட்டுமே இதன் பாதிப்பை அறியமுடியும். ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் - டி அளவை வைத்தும், இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியும்.

• 40 வயதைக் கடந்த பெண்கள், வருடத்தில் மூன்று மாதங்களுக்கு கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் டி சத்துள்ள எள், கீரை வகைகள், பீட்ரூட், பாதாம், பிஸ்தா, முழு உளுந்து, பால் பொருட்கள், கடல் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

• காலை மற்றும் மாலை வெயிலில் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், அந்தச் சமயத்தில் வெளியில் வந்து உட்கார்ந்தால்கூட போதுமானது.

 - ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்