Published:Updated:

மனம் இருந்தால் மறக்கலாம்!

புகைக்கு மாற்று சிகிச்சை முறைகள்

ஜெயராமன்
நெஞ்சக நோய் மருத்துவர்

மனம் இருந்தால் மறக்கலாம்!

ந்தியாவில் நிமிடத்துக்கு ஒருமுறை சிகரெட்டுக்கு எதிரான விளம்பரங்கள் டி.வியில் திரையரங்குகளில் ஒளிபரப்பாகின்றன. ஆனால், நிமிடத்துக்கு ஒருவர் சிகரெட்டால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்குள் நுழைகிறார். தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட சிகரெட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். ‘‘விடணும்னு நினைக்கிறேன், ஆனா முடியலை’’ என்பதுதான், தெரிந்தே விஷத்தை சுவாசிப்பவர்களின் ஸ்டேட்மென்ட். ஆனால், இது உண்மை இல்லை. மனம் இருந்தால் சிகரெட்டை மறந்துவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மனம் இருந்தால் மறக்கலாம்!

சிகரெட் ஆபத்துகள்

சிகரெட் புகைக்கும்போது, 4000-த்துக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் வெளிப்படுகின்றன. இவற்றில், 60-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் புற்றுநோயை வரவழைக்கக்கூடியவை. பூச்சிகளை அழிக்கும் நிக்கோட்டின், கழிப்பறையை சுத்தம் செய்யும் அமோனியா, வீட்டுக்குப் பூசப்படும் பெயின்ட், பேட்டரியில் உள்ள கேட்மியம், வினிகரில் உள்ள அசிடிக் அமிலம், மீத்தேன் வாயு, மெழுகில் உள்ள ஸ்டீரிக் அமிலம், அர்சினிக் என்கிற விஷம், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் டொலியூன், பியுடேன், கார்பன் மோனாக்சைடு போன்ற ஆபத்தான ரசாயனங்கள் சிகரெட்டில் உள்ளன.   சிகரெட்டை ஒருமுறை பிடித்தவுடன், மீண்டும் மீண்டும் பிடிக்கத் தூண்டும் போதைக்குக் காரணம், அதில் உள்ள நிக்கோட்டின்தான். இது புகைப்பவர்களை அடிமையாக்கும். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் புகைப்பிடிப்பவர்களுக்கு, இதய நோய்கள், சுவாசக் குழாய், நுரையீரல் பிரச்னைகள், மூளை பாதிப்புகள், பக்கவாதம், நிமோனியா, காசநோய், குழந்தையின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம்.  ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, தலை முதல் பாதம்வரை எந்த உறுப்புவேண்டுமானாலும் பாதிக்கலாம்.

உலர்ந்த புகையிலையைச் சுற்றிவைத்துத் தயாரிக்கப்படும் பீடியில், சிகரெட்டைக் காட்டிலும் நிக்கோட்டினின் அளவு அதிகம். பீனால், ஹைட்ரஜன் சியானைட், பென்சோபைரீன், அமோனியா போன்றவையும் மிக மிக அதிகம். சிகரெட்டைவிட, பீடி புகைப்பதால் வெளிவரும் கார்பன் மோனாக்சைட்டின் அளவும் அதிகம். இதனால், நுரையீரல் சீக்கிரத்திலேயே பாதிப்புக்கு உள்ளாகும். மேலும், மாரடைப்பு, இதய நோய், வாய், நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். இந்தப் பாதிப்புகளிலிருந்தும் நிக்கோட்டின் போதையிலிருந்தும் மீள நினைப்பவர்கள், மருத்துவரின் வழிகாட்டுதலுடன் மாற்று முறைகளைப் பின்பற்றலாம்.

மனம் இருந்தால் மறக்கலாம்!

இ-சிகரெட்

புகைப்பதற்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு, அதை நிறுத்த தற்போது இ-சிகரெட் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் இருப்பது செயற்கை நிக்கோட்டின். இது புகையிலையில் இருந்து தயாரிக்கப்பட்டது இல்லை. சிகரெட்டை நிறுத்த விரும்புகிறவர்கள், டாக்டரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே தற்காலிகமாக இ-சிகரெட் பயன்படுத்தலாம். இதில், வீரியம் உள்ள ரசாயனங்கள் இல்லை. சிகரெட் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, ஒரு நாளைக்கு எத்தனை இ-சிகரெட் பிடிக்கலாம் என்பதை, மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

மனம் இருந்தால் மறக்கலாம்!

நிக்கோட்டின் சூயிங்கம்

இதிலும் இருப்பது செயற்கை நிக்கோட்டின்தான். இந்த சூயிங்கம்மை  சாப்பிடுவதால், நிக்கோட்டினின் தேவை பூர்த்தியாகும். மருத்துவர் ஆலோசைனைப்படி, ஒரு நாளைக்கு ஆறு முதல் 10 முறை சூயிங்கம்மைச் சுவைக்கலாம்.

மனம் இருந்தால் மறக்கலாம்!

நிக்கோட்டின் ஸ்டிரிப்

சருமத்தில் ஒட்டிக் கொள்ளும் பேட்ச் (Skin patch). உள் வாயின் மேல் பகுதியில் ஒட்டியதும், அந்த ஸ்டிரிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கெமிக்கல்கள் வெளியேறும். இதனால், புகைக்கும் எண்ணம் தோன்றாது. தினமும், இந்த ஸ்கின் பேட்சை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனை பெற்று பேட்ச்சை ஒட்டிக்கொள்ளலாம்.

மனம் இருந்தால் மறக்கலாம்!

நிக்கோட்டின் ஸ்ப்ரே

மூக்கு மற்றும் வாய் மூலமாக அடிக்கும் ஸ்ப்ரேகள் கிடைக்கின்றன. புகைப்பவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று மருத்துவரே கண்டுபிடித்து ஆலோசனை வழங்குவார். அவர்களின் நிலையைப் பொறுத்து தினமும் ஒன்றிரண்டு முறை ஸ்ப்ரே செய்துகொள்ளலாம். இதனால், வெகு சீக்கிரம் நிக்கோட்டின் போதையிலிருந்து வெளிவர முடியும். இந்த முறையால், ரத்தத்தில் கலந்திருக்கும் நிக்கோட்டின் அளவைக்கூட குறைக்க முடியும்.

மனம் இருந்தால் மறக்கலாம்!

நிக்கோட்டின் மாத்திரைகள்

மேற்சொன்ன அனைத்து முறைகளிலும் சிறந்த முறையாக, நிக்கோட்டின் மாத்திரைகள் உள்ளன. சீக்கிரத்திலேயே நல்ல பலன்களைத்  தரும். தற்போது, பரவலாக இந்த மாத்திரைகள் கிடைப்பதால், சிகரெட் பிடிப்பதை நிறுத்த நினைப்பவர்கள் மருத்துவர் உதவியுடன் மாத்திரைகளைப் பயன்படுத்தி, புகைப்பதை நிறுத்தலாம்.  காலை, இரவு என இரண்டு வேளையும் இந்த மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

மனம் இருந்தால் மறக்கலாம்!

பக்கவிளைவுகள் வருமா?

செயற்கை நிக்கோட்டின் சிகிச்சை முறைகளால் சிகரெட் பழக்கத்திலிருந்து வெளிவரமுடியும் என்பது உறுதி. ஆனால், சிலருக்கு குமட்டல், வாந்தி, மயக்கம், பதற்றம், அரிப்பு, வாயுத் தொல்லை போன்ற  பக்கவிளைவுகள் ஏற்படலாம். சிகரெட்டால் வரும் கொடிய விளைவுகளைவிட, இந்த  மாற்று சிகிச்சை முறைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைவுதான். இவை அனைத்துமே சிகரெட் போதையில் இருந்து மீண்டு வருவதற்கான மாற்று முறைகள் மட்டுமே. போதைக்காக மாற்று முறைகளைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. மருத்துவரை கலந்து ஆலோசிக்காமல், மாற்று சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதும் தவறு.
 
வழிகள் எளிதாக இருப்பதால், சிகரெட், பீடிக்கு நோ சொல்வதைக் கொஞ்சம் யோசிக்கலாமே!

புகைப்பதை நிறுத்துவதற்கான டிப்ஸ்:

• முதலில் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தமான எண்ணமும் விருப்பமும் அவசியம்.

• புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். புகை பிடித்து வெளிவரும் புகையால், மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தெளிவு வேண்டும்.

• புகைப்பதற்கான செலவுகளைப் பட்டியலிட்டு, குடும்பத் தேவைகளை இதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். பண சேமிப்பையும் தொடங்கலாம்.

• புகைக்க அழைக்கும் நண்பர்களையும் சூழல்களையும் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

மனம் இருந்தால் மறக்கலாம்!

உயிரைப் பறிக்கும் புகையிலை!

புகையிலை தயாரிக்கப்படுவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.  பான், வெற்றிலையுடன் புகையிலை என, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் உருவாகும் பல நோய்களினால், ஆண்டுக்கு ஒன்பது லட்சம் பேர் இறக்கின்றனர்.  உயிர் இழப்பும் புற்றுநோயும் இந்தியாவில் பெருகியதற்கு முக்கியக் காரணம் புகையிலைதான். புகையிலையை, ஆண்கள் 57 சதவிகிதமும் பெண்கள் 11 சதவிகிதமும் பயன்படுத்துகின்றனர்.  இதில், பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 37 சதவிகிதம் என்பது வருத்தமான செய்தி.

 - ப்ரீத்தி