ஹெல்த்
Published:Updated:

மண்பாண்டங்களுக்கு மாறுவோம்!

மண்பாண்டங்களுக்கு மாறுவோம்!

சாஹித்ய பிரியா
உணவியல் நிபுணர்

மண்பாண்டங்களுக்கு மாறுவோம்!

த்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மண்பாண்டங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது. தற்போது, பொங்கல் பண்டிகையின் போதுகூட, மண்பானையில் பொங்கலிடும் வழக்கம் குறைந்து விட்டது. மண்பாண்டங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதாக, ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

மண்பாண்டங்களுக்கு மாறுவோம்!

ஏழைகளின் குளிர்சாதனப்பெட்டியான மண்பானைகளில் நீர் நிரப்பிவைத்தால், குளிர்ச்சியுடன் சுவையும் அருமையாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்த தண்ணீர் தரும் தொண்டைப் பிரச்னைகளும் இருக்காது. அரிசி, பயறு, பருப்பு வகைகள், புளி என வீட்டு சமையலுக்குரிய சாமான்களைக் கொட்டிப் பாதுகாக்கும் குதிராகவும், மண்பாண்டங்கள் இருந்திருக்கின்றன.

நான்ஸ்டிக், பிளாக் மெட்டல் என, எளிதில் சமைக்கக்கூடிய உலோக பாத்திரங்கள் வந்ததன் விளைவு, மண்பாண்டங்கள் மறைந்தே போயின.  உலோகங்களைக் காட்டிலும் மண்பாண்டங்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. “மண் பாண்டம் என்றால் ஒரு பானை, ஒரு சட்டிதானே... உலோகப் பாத்திரங்களைப் போல இதில் என்ன வெரைட்டிகள் உள்ளது?” என்று தோன்றலாம். பானை, கடாய், தண்ணீர்க் குவளை, தண்ணீர் ஜக், தட்டு, டம்ளர், கப், ஊறுகாய் ஜாடி என, அனைத்து சமையல் பாத்திரங்களும் களிமண்ணால் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.இவை அனைத்தும் 10 முதல் 500 ரூபாய் விலைகளில் கிடைக்கின்றன. “முன்பு எல்லாம் விறகு அடுப்பு.  அதனால், பானையில்  சமையல் செய்தாங்க. இப்போது, கேஸ் அடுப்பாச்சே... அதுல எப்படி?” என்று கேட்கக்கூடும்.  கறுப்பு மண்பாண்டங்களை  வாங்கிவந்து,  நேரடியாகப் பயன்படுத்தலாம். சிவப்பு மண் பாண்டங்களை தண்ணீரில் சிறிது காலம் பழகவிட்டு, அதன்பின் அதையும் கேஸ் அடுப்பில்  பயன்படுத்த முடியும்.

மண்பாண்டங்களுக்கு மாறுவோம்!

 மண்பாண்டங்களில் சமைப்பதால் ஏற்படும் பயன்கள் பற்றி விளக்குகிறார் உணவியல் நிபுணர் சாஹித்ய பிரியா.

மண்பாண்டங்களுக்கு மாறுவோம்!

“மண்பானையில் சமைப்பது முற்றிலும் இயற்கையானது. ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தரும். இதில், சமைத்த உணவு, நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். சுவையும் மாறாது. ஒவ்வொரு முறை சமைக்கும் போதும், மண்பானையை நீரில் நனைப்பதால், உணவுப் பொருட்களை தீயில் கருக்காமல் பாதுகாக்கிறது. மற்ற உலோகப்  பாத்திரங்களில் உள்ள ரசாயனங்கள் இதில் இல்லை.  சூடான பொருட்கள் சூடாகவும், குளிர்ச்சியான பொருட்களைக் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் தன்மை, மண்பாண்டத்துக்கு உண்டு.  சமைக்கப்படும் உணவுகளில்  உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையாமல் தடுக்கப்படுகின்றன. பானையை நீரில் ஊறவைக்கும் போது, பானையின் துளைகளில் நீர் தங்கி, சமைக்கும்போது ஆவி ஆகிறது. இதனால், உணவை எளிதில் சமைக்கவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் முடியும். மண்பாண்டங்கள் ஒட்டா தன்மை கொண்டது என்பதால், இதில் சமைக்கும்போது உணவில் எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. கார உணவுகளே நம் உடலுக்கு ஏற்றவை. ஆனால், இந்த ஃபாஸ்ட் புட் உலகில், நாம் உண்பது அனைத்தும் அமில உணவுகளே.  களிமண் காரத்தன்மை கொண்டது. எனவே, இதில் சமைப்பது, பி.ஹெச் (PH) அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும். உணவு எளிதில் செரிமானம் ஆகும்.

நான் ஸ்டிக் பாத்திரங்களை ஒதுக்குவிட்டு நமது பாரம்பரிய மண்பாண்டங்களுக்கு மாறுவோம்.

- அ.பார்த்திபன்
புகைப்பட உதவி: கே.ஜானகி பாட் வொர்க்ஸ், நுங்கம்பாக்கம், சென்னை.