ஹெல்த்
Published:Updated:

ஹெல்த்துக்கு சப்போர்ட்... சப்போட்டா!

ஹெல்த்துக்கு சப்போர்ட்... சப்போட்டா!

பாலசுப்ரமணியன்
அரசு சித்த மருத்துவர், பெரம்பலூர்

ஹெல்த்துக்கு சப்போர்ட்... சப்போட்டா!

சுவை மிகுந்த, கலோரி நிறைந்த சப்போட்டா ஆரோக்கியத்துக்கும் சப்போர்ட்டாக இருக்கிறது. உடலுக்குச் சத்தை அளிப்பதோடு, சருமத்துக்கும் பலன் அளிக்கிறது.

ஹெல்த்துக்கு சப்போர்ட்... சப்போட்டா!

• சப்போட்டாவில், வைட்டமின்கள் பி6, சி, இ, ரிபோஃப்ளேவின், நியாசின், மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைவாக உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தையும் தரும். இரும்புச்சத்து இருப்பதால் கர்ப்பிணிகள், ரத்தசோகை உள்ளவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடலாம். 

• ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட்டுவந்தால், குறைபாடு நீங்கும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடலாம்.

• கார்போஹைட்ரேட், சர்க்கரை, புரதச்சத்து இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இந்தப் பழத்தை உண்ணக் கூடாது.

• களைப்பைப் போக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சி தரக்கூடியது. குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.  

• சப்போட்டா, முழுவதுமாகப் பழுக்காத நிலையில், செங்காயாகவும் சமைத்துச் சாப்பிடலாம். உடல் வலுப்பெற உதவும். 

ஹெல்த்துக்கு சப்போர்ட்... சப்போட்டா!

• சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்கக்கூடியது. வாய்ப்புண், வயிற்றுப் புண், மலச்சிக்கல் தீரும்.

• சப்போட்டா பழத்துடன், எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட, சளித் தொல்லை நீங்கும்.  

• பித்த வாந்தி, மயக்கம் இருந்தால், சப்போட்டா பழத்துடன் சீரகம் சேர்த்துச் சாப்பிடலாம். சட்டென சரியாகும்.

• சப்போட்டா பழத்துடன், வெள்ளரி விதை, பயத்தமாவு கலந்து, குளிப்பதற்கு முன்பு பூசிவர, முகம் பிரகாசமாக ஜொலிக்கும். 

 - ர.ரஞ்சிதா   படங்கள்: மீ.நிவேதன்