ஹெல்த்
Published:Updated:

23 பேரில் உயிர் வாழும் ஐவர் உடல் உறுப்புதான நெகிழ்ச்சி

23 பேரில் உயிர் வாழும் ஐவர் உடல் உறுப்புதான நெகிழ்ச்சி

மூளைச்சாவு அடைந்த நபரின், உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்கும் விழிப்புஉணர்வு இன்று அதிகரித்துவரும் நிலையில், ஒரே நாளில் மூளைச்சாவு அடைந்த, ஐவரின் உறுப்புகள் தானமாகப் பெற்று, 23 பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இத்தகைய, நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்திருப்பது, இந்தியாவில் அநேகமாக இதுவே முதல்முறை.

23 பேரில் உயிர் வாழும் ஐவர் உடல் உறுப்புதான நெகிழ்ச்சி

ஒரே நேரத்தில் நடைபெற்ற தற்செயலான நிகழ்வால், மூளைச்சாவு அடைந்த ஐந்து பேரின் கல்லீரல், சிறுநீரகம், இதயம், கண்களைத் தானமாக அளிக்க, அவர்களது உறவினர்கள் முன்வந்தனர். இதைப் பெற்றுக்கொண்ட மருத்துவமனைகள், அதைத் தேவையுள்ள நபர்களுக்குத் தானமாக வழங்கின.

ஐந்து பேரிடம் இருந்தும் 10 சிறுநீரகங்கள், 6 விழிவெண்படலங்கள், 2 இதயங்கள் மற்றும் 5 கல்லீரல்கள் தானமாகப் பெறப்பட்டன. இதில், அப்போலோ மருத்துவமனையில் ஐந்து கல்லீரல்கள், ஒரு இதயம், நான்கு சிறுநீரகங்களை நோயாளிகளுக்குப் பொருத்தினர். மற்ற உறுப்புக்கள் சென்னை ஃபோர்ட்டிஸ் மலர், குளோபல், சங்கர நேத்ராலயா, ‘டாக்டர் காமாட்சி மருத்துவமனை’, கோயம்புத்தூர் கே.ஜி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு உள்ள நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.இந்த நிகழ்வை, ஒரு விழிப்புஉணர்வு நிகழ்வாக மாற்றிய, அப்போலோ மருத்துவமனை, இறந்தவர்களுக்கு மனதார அஞ்சலி செலுத்தியது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறைச் செயலாளாரான ராதாகிருஷ்ணன், அப்போலோ குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி ரெட்டி, துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள்  கலந்துகொண்டனர்.

டாக்டர் பிரதாப் பேசுகையில், “உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவம் அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற விழிப்புஉணர்வுக்காகதான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உயிர் இழந்த ஐந்து பேரும், வாழ இரண்டாவது வாய்ப்பாக இந்த உடல் உறுப்பு தானம் நடத்தப்பட்டது. ஒரே நாளில், 23 பேரைக் காப்பாற்றிய ஐந்து பேரின் குடும்பத்தின் துயரத்தை அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம். தனிநபரின் உடல் உறுப்புகள் மூலம், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் புதிய வாழ்க்கை கிடைப்பதால், தானத்திலே சிறந்த தானமாக உறுப்பு தானம் இருக்கிறது.’’ என்றார்.

- ப்ரீத்தி