Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

‘‘உடலில் மிக முக்கியமான பகுதி, வயிறு. நாம் சாப்பிட்ட உணவை செரிமானம் செய்து உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும் முக்கியப் பணியைச் செய்கிறது.  இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், கணையம் எனப் பல உறுப்புக்கள் சேர்ந்ததுதான் செரிமான மண்டலம்.    இந்த செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டால், உடல் மெலிந்து, மற்ற உறுப்புக்களின் செயல்திறன் பெரிதும் பாதிக்கப்பபடும்” என்கிறார் இரைப்பை மற்றும் குடல் சிகிச்சை நிபுணர் ரவி.

“இன்றைய உணவுப் பழக்கத்தில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளன. முதலாவது, உணவில் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. அடுத்தது, எண்ணெய் அல்லது கொழுப்புச்சத்து நிறைந்த உணவு எடுத்துக்கொள்வது அதிகரித்துவிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

காய்கறி, பழங்களில்தான் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து செரிமானமாவது  இல்லை.  செரிமானமாகிய கழிவுப் பொருட்களை வெளியே கொண்டுவர உதவுகிறது. நார்ச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது மலச்சிக்கல் ஏற்படும். மேலும், ஏராளமான நோய்களும் உருவாகக் கூடும். உணவில் பாதி அளவு பச்சைக் காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, மலச்சிக்கல், புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளும் போதுகூட, நாம் உண்ணும் உணவில் பாதி அளவு பச்சைக் காய்கறிகள் இருப்பது அவசியம்.

மேலும், செரிமான மண்டலத்தில் ஏற்படும் மிக முக்கியமான பாதிப்புகளுள் ஒன்று  மஞ்சள் காமாலை.  இது நோய் அல்ல.  பல நோய்களுக்கான அறிகுறி. கல்லீரலில் வைரஸ் தொற்று, மது அருந்துதல், பித்தப்பை கல் அடைப்பு போன்ற பல காரணங்களால் மஞ்சள் காமாலை ஏற்படலாம். மஞ்சள் காமாலையுடன் வயிற்றுவலி, உடல் முழுக்க நமைச்சல் இருந்தால், பித்தப்பையில் கல் அடைப்பு இருக்கலாம்.  மஞ்சள் காமாலை எதனால்  ஏற்பட்டது என்பதைக்  கண்டறிந்து  சிகிச்சை  எடுப்பதன் மூலம், பாதிப்பில் இருந்து தப்பலாம்” என்கிறார் டாக்டர்.

• செரிமான மண்டலத்தின் முக்கியத்துவம் என்ன?

• உணவுமுறை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

• நெஞ்சு எரிச்சல் எதனால் ஏற்படுகிறது?

• சரியாகச் சாப்பிடாவிட்டால் வயிற்றுப் புண் வருமா?

• மஞ்சள் காமாலைக்கு என்ன சிகிச்சை?

• மலச்சிக்கலைத் தவிர்க்க என்ன வழி?

அன்பு வாசகர்களே, ஜூலை 16 முதல் 23-ம் தேதி வரை தினமும், 044-6680290.4என்ற எண்ணுக்கு போன் செய்தால், வயிறு செரிமான மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள், தவிர்க்கும் வழிகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் இரைப்பை மற்றும் குடல் சிகிச்சை நிபுணர் ரவி.

“குழந்தையின்மை பிரச்னை ஆண், பெண் இருவரையும் சார்ந்தது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால், ஆண்களுக்கு உள்ள பிரச்னைகளை யாரிடம் காட்டுவது என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. குழந்தைப்பேறுக்கான மருத்துவத்தில் ஆண்களுக்கு உள்ள குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதை ஆண்ட்ராலஜி (Andrology) என்கின்றனர். இதை செக்ஸாலஜி (Sexology) மற்றும் ஸ்பெர்மட்டாலஜி (Spermatology) என இரண்டாகப் பிரிக்கலாம். உடலுறவு கொள்வதிலேயே பிரச்னை இருப்பவர்களுக்கு என்ன பிரச்னை எனக் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதை செக்ஸாலஜி என்கிறோம். விந்து அணு சுரப்பு, விந்து அணு செயல்திறனில் குறைபாடு இருந்தால் அதை சரிசெய்யும் மருத்துவத்தை ஸ்பெர்மட்டாலஜி என்கிறோம்” என்கிறார் ஆண்ட்ராலஜி நிபுணர் தர்மராஜ்.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“இன்றையக் காலகட்டத்தில் திருமணம் ஆகி குழந்தை இல்லை என்று வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படி வரும் தம்பதிகளிடம் பேசும்போது, ஒரு பார்ட்னர் செக்ஸ் வைத்துக்கொள்வோம் என்பார். இன்னொருவர், இதுவரை வைத்துக்கொண்டதே இல்லை என்பார். திருமணம் முடிந்து நான்கைந்து ஆண்டுகளாகியும் ஒரு முறைகூட உடலுறவு வைத்துக்கொள்ளாதவர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். விறைப்புத்தன்மை, விந்து சீக்கிரம் வெளியேறுதல் போன்ற காரணங்களால் உடலுறவுகொள்வதை ஆண்கள் தவிர்க்கலாம். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஸ்ட்ரெஸ்தான். வேலை முடிந்து வீடு திரும்பும் ஆண்கள்,  அலுவலக டென்ஷன், நெருக்கடி காரணமாக வீடு வந்ததும் டி.வி, இன்டர்நெட் என வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். இன்றைக்குப் பலரும் செக்ஸ் பற்றி யோசிப்பதே இல்லை. அந்த அளவுக்கு ஸ்ட்ரெஸ் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக, பொருத்தமில்லாத திருமணங்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சில மருந்துகள் உபயோகப்படுத்துவது எனப் பல காரணங்களால்  உடலுறவில் விருப்பம் குறைந்துவிடுகிறது. எதனால் பிரச்னை எனக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இதைச் சரிசெய்ய முடியும்” என்கிறார் டாக்டர்.

• ஆண்ட்ராலஜி என்றால் என்ன?

• குழந்தையின்மைக்கு மன அழுத்தம் எந்த அளவுக்குக் காரணமாக இருக்கிறது?

• ஆண் உறுப்பு தொடர்பான சந்தேங்களுக்கு என்ன தீர்வு?

• ஆண்களுக்குக் குழந்தையின்மை பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

• விந்தணு குறைபாட்டுக்கு என்ன சிகிச்சை?

• விந்தணு இல்லாதவர்கள் தானம் பெறுவதுதான் தீர்வா?

அன்பு வாசகர்களே, ஜூலை 24 முதல் 31-ம் தேதி வரை தினமும், 044-66802904. என்ற எண்ணுக்கு போன் செய்தால், ஆண்களுக்கு ஏற்படும் பல்வேறு பாலியல் சந்தேகங்கள், குழந்தையின்மைக்கான காரணங்கள், தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் ஆண்ட்ராலஜி நிபுணர் பி.தர்மராஜ்.

- பா.பிரவீன் குமார், படம்: தி.குமரகுருபரன்