Published:Updated:

என்ன சிகிச்சை என்று தெரியாமல் தவித்த பெற்றோர்!

வழிகாட்டிய டாக்டர் விகடன் முகாம்

நாகர்கோவிலில் ‘சிவா மருத்துவமனை’யுடன் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தியது டாக்டர் விகடன்.

என்ன சிகிச்சை என்று தெரியாமல் தவித்த பெற்றோர்!

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்துவந்த நிலையிலும் ஏராளமானோர் ஆர்வத்துடன் முகாமில் கலந்துகொண்டனர். பொது மருத்துவம், வயிறு இரைப்பை, எலும்பு மூட்டு, மகளிர் மற்றும் மகப்பேறு, குழந்தைகள் நலம், பல் மருத்துவம், இதயம், சர்க்கரை நோய், நாளமில்லா சுரப்பியியல் உள்ளிட்ட பல துறை மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்புண், குடல் இறக்கம், குடல் ஏற்றம், பித்தப்பைக் கல், மூலம் உள்ளிட்ட வயிறு, இரைப்பைத் தொடர்பான பிரச்னைகளைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, இதய நோய்களைக் கண்டறிய இ.சி.ஜி, எக்கோ பரிசோதனைகள் செய்யப்பட்டன. எலும்பு அடர்த்தியைக் கண்டறியும் பி.எம்.டி பரிசோதனையும் செய்யப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என்ன சிகிச்சை என்று தெரியாமல் தவித்த பெற்றோர்!

முகாமில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். களக்காட்டைச் சேர்ந்த ஜெயலீலா, “எனக்கு தைராய்டு பிரச்னை இருக்குமோ என ரொம்ப நாளா சந்தேகமா இருந்துச்சு. அதுக்காக செக்கப்  செய்தேன். ரொம்ப அக்கறையா கேட்டாங்க. பிரஷர், ஹைட், வெயிட் எல்லாம் பரிசோதிச்சாங்க. எலும்பு, குழந்தைகள், பெண்கள் நலம்னு எல்லா சிறப்பு டாக்டர்களையும் ஒரே இடத்துக்கு கூட்டிட்டுவந்தது ஒரு பெரிய ஹாஸ்பிட்டலுக்கே போயிட்டு வந்த திருப்தி. டாக்டர் விகடனுக்கும் சிவா மருத்துவமனைக்கும் ரொம்ப நன்றி” என்றார்.

நாங்குநேரி ஜெஸ்பயஸ் கூறுகையில், “நான் கொஞ்சம் குண்டாக இருக்கறதால, உடல் பருமனைக் குறைக்க செக் பண்ணிக்கிட்டேன். அப்புறம், தைராய்டுக்கு செக்அப் பண்ணேன். எழுத்துல உயர்ந்த சேவை பண்ற விகடன்... மக்களுக்கு, உயர்தர மருத்துவத்தை முகாம் மூலமா தர்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு டாக்டர் விகடனின் மருத்துவ சேவை தொடரணும்” என்றார்.

என்ன சிகிச்சை என்று தெரியாமல் தவித்த பெற்றோர்!

தொண்டையில் அறுவைசிகிச்சை செய்த தழும்போடு இருந்த சிறுவனின் பெற்றோரிடம் பேசினோம். “நாங்க கன்னியாகுமரி மாவட்டம் சரலூர்ல இருந்து வந்திருக்கோம். இவனுக்கு தைராய்டு பிரச்னை இருக்குன்னு ஆபரேஷன் செய்தாங்க. ஆனால் அது சரியாக இல்லை. அடிக்கடி பிரச்னை வந்துட்டிருக்கு. இங்கே ஸ்பெஷல் டாக்டர்கள் வர்றாங்கன்னு தெரிஞ்சதும்  வந்துபார்த்தோம். ரிப்போர்ட் எல்லாம் பார்த்துட்டு ஆலோசனை சொன்னாங்க. இன்னும் ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்த்துட்டு அதை உறுதிப்படுத் திட்டோம்னா, என்ன மாதிரி ட்ரீட்மென்ட் கொடுக்கலாம்னு முடிவு செய்திடலாம். கவலைப்படாதீங்க பிரச்னையை சரி செய்திடலாம்னு நம்பிக்கை கொடுத்திருக்காங்க” என்றார் நெகிழ்ச்சியாக!

-  த.ராம், படங்கள்: ரா.ராம்குமார்