Published:Updated:

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

கன்சல்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்டிங் ரூம்

கல்பனா, வேலூர்.
“என் மகளுக்கு 13 வயதாகிறது.  பருவமடைந்துவிட்டாள். ஆனால், இன்றும் கை சூப்பும் பழக்கம் இருக்கிறது. இந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது? இதற்கு நல்லத் தீர்வைச் சொல்லுங்கள்.”

டாக்டர் கண்ணன், குழந்தைகள் மனநல மருத்துவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 “கை சூப்பும் பழக்கத்தை சிறுவயதிலேயே கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இவ்வளவு வயது வரை விட்டுவைத்திருப்பது மிகவும் தவறு.

கன்சல்டிங் ரூம்

ஹார்மோன் மாற்றங்கள், மரபியல் பழக்கங்கள் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். கை சூப்பும் பழக்கம் தவறானது. இதனால், கிருமிகள் வாய்வழியே உள்ளே புகுந்து வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். மேலும், பற்கள் சீராக இருக்காது. முகத்தோற்றம் கெடும். கை சூப்புவதால் மற்றவர்கள் கேலி செய்ய நேரலாம். இவற்றையெல்லாம் உங்கள் குழந்தைக்குப் புரியும்படி எடுத்துச்சொல்லி, கை சூப்பும் பழக்கத்தை நிறுத்த வழி செய்யுங்கள். மென்மையான அணுகுமுறையின் மூலம், அறிவுரை சொல்லலாம். ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சலிங் பெறுவது மிகவும் நல்லது.

 தினமும் காலண்டரில், கை சூப்பும் தேதியை சிவப்பு மையிலும், கை சூப்பாத தேதியைப் பச்சை மையிலும் குறித்து வைத்து, அதை உங்கள் மகளிடம் காண்பியுங்கள். ‘பச்சை நிற மை குறித்த நாட்களில் நீ கை சூப்பவில்லை’ என்று சிறு பரிசைத் தாருங்கள். ‘இது தொடர்ந்தால் நீ விரும்பும் பொருட்களை வாங்கித்தருவோம். உனக்குப் பிடித்த இடத்துக்கு அழைத்துச் செல்வோம். உன்னால் கை சூப்பும் பழக்கத்தை நிச்சயம் விட முடியும்’ என்பன போன்ற நம்பிக்கை வார்த்தைகளை விதையுங்கள். இந்த முயற்சிகளால் கை சூப்பும் பழக்கத்தை மறக்கவைக்க முடியும். இந்தப் பிரச்னை தொடர்ந்தால், மருத்துவரிடம் காண்பித்து, பிரச்னையைக் கண்டறிந்து தீர்வு பெறுவது நல்லது.”

 பூஜா, திருப்பத்தூர்.

“நான் சில மாதங்களுக்கு முன்பு பைக்கிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். மூட்டில் லிகமென்ட் டேர் என்று டாக்டர் சொன்னார். இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்த பிறகு, நன்றாக நடக்க ஆரம்பித்தேன். ஆனால், அடிபட்ட மூட்டு இன்னொரு மூட்டினைப் போல் வலுவாக இல்லை. காலை மடக்கும்போது, சத்தம் வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்கிறார் டாக்டர். என்னால் தினசரி அந்தப் பயிற்சிகளை செய்ய முடிவது இல்லை. கால் அவ்வப்போது வலிக்கிறது ஆயுர்வேதத்தில் இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா?”

டாக்டர் சாந்தி விஜய்பால்,
ஆயுர்வேத மருத்துவர், சென்னை.

“லிகமென்ட் என்பது கால் மூட்டுக்களைப் பிணைக்கும் கயிறு போன்றது. லிகமென்ட் டேர் என்றால், தசை நார் கிழிவு. தசைநார் உறுதியாக இருந்தால்தான் நடப்பது, உட்காருவது போன்ற அன்றாடம் நாம் செய்யும் செயல்களைச் செய்ய முடியும். இதுவே உறுதியாக இல்லாதபட்சத்தில், நடக்கும்போது சில சமயங்களில் தடுமாற்றம் ஏற்படலாம். மூட்டு வலியும் இருக்கும். கால்களை மடக்கும்போது, சத்தம்கூட கேட்கும். இந்தப் பிரச்னைக்கு ஆயுர்வேதத்தில் தீர்வு இருக்கிறது.

ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி, கடைகளில் கிடைக்கும் முறிவு எண்ணெயை, அடர்த்தியான பஞ்சில் ஊற்றி, வலி ஏற்படும் இடத்தில் வைத்துக்கட்ட வேண்டும். கட்டிய பின், ‘நீ-பிரேஸ்’ போட்டுக்கொள்ளலாம். 15 நாட்களுக்கு இதைச் செய்தால், தசை நார் கிழிவு சரியாகும். மூட்டு தேய்மானமாவதைத் தடுக்கவும், லிகமென்ட் உறுதியாகவும் ஆயுர்வேதத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. இவற்றை மூன்று நான்கு மாதங்கள் வரை சாப்பிட்டுவந்தால், முழுமையாகக் குணமடைய முடியும்.

எப்போதும் மூட்டு தொடர்பான பிரச்னைகளுக்கு உடற்பயிற்சி அவசியம். வாரத்துக்கு குறைந்தது ஐந்து நாட்களாவது பயிற்சிகள் செய்ய வேண்டும். இதனால், கால் வலி, மூட்டு வலி வராது. வலி இருப்பவர்கள், படிக்கட்டில் தாவி ஏறுவது, எகிறிக் குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. கேழ்வரகு, பிரண்டை, எலும்பு சூப் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம், மூட்டுப் பகுதிகளை வலுப்பெறச் செய்யலாம்.”

 - ப்ரீத்தி, படங்கள்: ரா.வருண் பிரசாத்தி.கெளதீஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism