Published:Updated:

சமைத்த உணவை சூடுபடுத்தலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சமைத்த உணவை சூடுபடுத்தலாமா?
சமைத்த உணவை சூடுபடுத்தலாமா?

சமைத்த உணவை சூடுபடுத்தலாமா?

பிரீமியம் ஸ்டோரி
சமைத்த உணவை சூடுபடுத்தலாமா?

ணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், காலையில் சமைத்த உணவையே, இரவும் எடுத்துக்கொள்வது அல்லது இரவு சமைப்பதை அடுத்த நாளைக்குச் சூடுபடுத்தி எடுத்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பல வீடுகளில், பாலை வாங்கிக் காய்ச்சுவதும், பின்னர் தேவைக்கு ஏற்ப அதை மீண்டும் சூடுபடுத்திக்கொள்வதும் உண்டு.

இப்படி உணவை அடிக்கடி சூடுபடுத்துவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. குறிப்பாக, முறையாகக் குளிரூட்டப்படாத, பாதுகாக்கப்படாத உணவுகளை அடிக்கடி சூடுபடுத்திச் சாப்பிடுவது, உடல்நலத்துக்கு உலைவைத்துவிடும்.

ஏன் உணவை அடிக்கடி சூடுபடுத்தக் கூடாது?

உணவுப் பொருளைத் தகுந்த பக்குவத்துக்குச் சமைக்கிறோம். உணவில் இருக்கும் நுண்கிருமிகள் இந்தச் செயல்முறையால் அழிக்கப்படுகின்றன. இந்த உணவை உடனே உட்கொள்ளும்போது பாதிப்பு ஏதும் இல்லை; ஆறு  முதல் எட்டு மணி நேரத்துக்கு வைத்திருந்தோம் என்றால், அதில் மீண்டும் நுண்கிருமிகள் வளரத் தொடங்கிவிடும்.

இந்த தட்பவெப்பநிலை பாக்டீரியா மற்றும் நுண்கிருமிகள் பல மடங்கு வேகமாக வளரப் போதுமானதாக இருக்கிறது. உணவை மீண்டும் சூடுபடுத்தினாலும், கிருமிகள் அழியும் அளவுக்கு அதை நாம் நீண்ட நேரம் அடுப்பில் வைப்பது இல்லை. இதனால், இந்த உணவே நஞ்சாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. அதாவது, ஃபுட் பாய்சன் ஆகிவிடும். இதனால், வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சமைக்கும்போது நாம் பயன்படுத்தும் எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தும்போது, உணவில் உள்ள சத்துக்களும் சிதைந்துவிடும். உணவின் ருசியும் மணமும்கூட மாறிவிடும். நீரில் கரையும் வைட்டமின்கள் சாதாரணமாகச் சமைக்கும்போதே அழிந்துவிடும். இந்த நிலையில், மீண்டும் மீண்டும் சூடேற்றும்போது, இருக்கும் சிறிதளவு சத்துக்களும் முற்றிலும் சிதைந்துவிடும்.

இன்னொரு பக்கம் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும்போது, அது டிரான்ஸ்ஃபேட் என்ற கெட்ட கொழுப்பாக மாறும். இதனால், ரத்தக் குழாயில் கொழுப்புப் படிதல், இதயப் பாதிப்புகள் ஏற்படலாம்.

சமைத்த உணவை சூடுபடுத்தலாமா?

சூடுபடுத்துதல்... சில டிப்ஸ்!

குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, தேவையான அளவில் சமைக்க வேண்டும்.

காலையிலேயே ஒரே மூச்சில் மதியம், இரவுக்கும் சேர்த்துச் சமைத்துவிட்டு, தேவைப்படும்போது சூடேற்றிச் சாப்பிடுவது தவறு. 

ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்றால், ஒருமுறை மட்டும் சூடேற்றலாம். குழம்பு போன்றவற்றை சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடலாம். அதிலும், மிச்சம் ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தக் கூடாது.

ரீஹீட் செய்யப்பட்ட உணவில் மணமும் நிறமும் நன்றாக உள்ளது என்பதை நம்பிச் சாப்பிடக் கூடாது. கண்ணுக்குத் தெரியாத எண்ணிலடங்கா நுண்கிருமிகள் இருக்கக்கூடும்.

- கோ.இராகவிஜயா

படம்: மா.பி.சித்தார்த்

சூடுபடுத்தக்கூடாத உணவுகள்!

ஹோட்டல்களில உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஸ்டோரேஜ் செய்யப்பட்டிருக்கும். நாம் வாங்கும் உணவு எப்போது தயாரிக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியாது. தவிர்க்க முடியாத சூழலில் ஹோட்டல் உணவைச் சாப்பிட நேர்ந்தால், வாங்கிய உடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஃபிரிட்ஜில்வைத்து, சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. பாலை எப்போது தேவையோ அப்போதும் மட்டும் அளவாகச் சூடேற்றி, அப்போதே பயன்படுத்திவிட வேண்டும். டீ, காபியை ரீஹீட் செய்து அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காபி மற்றும் டீயை மறுபடியும் சூடேற்றினால், வேறு சுவையில் இருக்கும்.

கீரைகளைக் கண்டிப்பாக மறுமுறை சூடேற்றி உபயோகிக்கக் கூடாது. கீரைகளில் ‘நைட்ரேட்ஸ்’ உள்ளது. பல மணி நேரம் கழித்து மறுபடியும் கீரையை சூடேற்றுவதால், அதில் உள்ள நைட்ரேட்ஸ் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரசாயனமாக மாறலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கீரைகளைத் தேவைக்கு ஏற்ப சமைத்து, உடனுக்குடன் பயன்படுத்திவிட வேண்டும். பருப்பு மற்றும் தானியங்களை ரீஹீட் செய்வதால், புரதச்சத்து அழிந்துவிடும்.

காளானை மறுமுறை சூடேற்றிப் பயன்படுத்தக் கூடாது. பச்சைக் காளான்களை நறுக்கும்போதே, அதில் உள்ள புரதச்சத்து அழியத் தொடங்கிவிடும். காளானில் இருக்கும் சத்தை முழுமையாகப் பெற, உடனடியாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. சிக்கன், மட்டன் போன்ற மாமிச உணவுகளைச் சமைத்த பிறகு குளிரூட்டுவதும் மறுபடியும் சூடேற்றிப் பயன்படுத்துவதும் தவறு. புரதம் அதிகம் உள்ள மாமிச வகைகளை ஒருமுறைக்கு மேல் சூடேற்றுவதால், செரிமானப் பிரச்னைகள், ஃபுட் பாய்சனிங் ஏற்படலாம். முட்டை உணவுகளுக்கும் இது பொருந்தும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு