Published:Updated:

துன்பம் போக்கும் தும்பை

துன்பம் போக்கும் தும்பை
பிரீமியம் ஸ்டோரி
News
துன்பம் போக்கும் தும்பை

துன்பம் போக்கும் தும்பை

துன்பம் போக்கும் தும்பை

ணற்பாங்கான இடங்களில் வளரக்கூடியது, தும்பை. சிறுதும்பை மற்றும் பெருந்தும்பை என இரண்டு வகை உள்ளன.

பெருந்தும்பையை `ஆனைத்தும்பை’ என்றும் அழைப்பர்.

முழுச் செடியும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது என்றாலும், இதன் இலையிலும் பூவிலும் அதிக மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.

வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமப்படுத்தும் ஆற்றல் இதன் இலைக்கு உண்டு. இளைப்பு, இருமல், ஜலதோஷம் தலைவலி, நீர் வேட்கை பிரச்னைகளைச் சரிசெய்யும். 

இதன் இலையுடன் புளி சேர்த்துக் கடைந்து, உணவோடு சேர்த்துச் சில நாட்களுக்குச் சாப்பிட்டுவர, வெள்ளைப்படுதல், கண் புகைச்சல், கை கால்களில் ஏற்படும் அசதி, அதிகத் தாகம், சோம்பல் நீங்கும்.

துன்பம் போக்கும் தும்பை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தும்பை இலையைச் சமைத்துச் சாப்பிட்டுவந்தால், கப நோய்கள் நீங்குவதோடு, உடலுக்கு வலுவும் கூடும்.

தும்பை இலைச்சாற்றை தினமும் காலை வேளையில் 10 முதல் 15 மி.லி அருந்திவர, உடலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்கும்.

இதன் இலைச்சாற்றை சித்த மருத்துவர்  மேற்பார்வையில் எப்படி மூக்கில் விட வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டு, மூக்கினில் விட,  சளி கரைந்து வெளியேறும், மூக்கடைப்பு நீங்கும்.

இலை மற்றும் பூவோடு தும்பைச் செடியை எடுத்துத் தண்ணீரில் நன்றாகக் கொதிக்கவைத்து ஆவி பிடிக்க, ஒற்றைத் தலைவலி நீங்கும்.

உடலில் ஏற்படும் கொப்பளங்கள், நமைச்சல், சொறி, சிரங்குகள் நீங்க, தொடந்து ஐந்து நாட்களுக்குத் தும்பை இலைகளை அரைத்து மேனியில் பூச வேண்டும்.

- பு.விவேக் ஆனந்த்

படங்கள்: தே.தீட்ஷித்