Published:Updated:

'நல்ல’ எண்ணெய்!

'நல்ல’ எண்ணெய்!
பிரீமியம் ஸ்டோரி
News
'நல்ல’ எண்ணெய்!

'நல்ல’ எண்ணெய்!

லிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் எனப் புதிய புதிய சமையல் எண்ணெய்களுக்கு மாறியதுதான் மிச்சம். உடல்பருமன், இதய நோய் பாதிப்பு மட்டும் குறையவே இல்லை. நம் பாரம்பரிய நல்லெண்ணெயிலேயே ஏராளமான நன்மைகள் நிறைந்திருக்கின்றன. ரீஃபைண்டு செய்யப்படாத, செக்கில் ஆட்டிய நல்லெண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், கிடைக்கக்கூடிய பலன்கள்...

'நல்ல’ எண்ணெய்!

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும்.

சுவாச மண்டலத்தின் செயல்திறனைப் பாதுகாக்கும். ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கும், தாமிரம், கால்சியம், துத்தநாகம் உள்ளதால், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சர்க்கரை நோய், புற்றுநோயைத் தடுக்கும், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளதால், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்கும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்; துத்தநாகம் நிறைவாக உள்ளதால், ஆரோக்கியமான, அழகான சருமத்துக்கு உதவும்.

தலையில் தேய்த்து குளித்துவந்தால், உடல் வெப்பத்தைக் குறைக்கும். வெள்ளை முடியைப் போக்கி, முடிக்கு ஊட்டத்தை அளித்து, நிறத்தை அளிக்கும்.

100 கிராம் நல்லெண்ணெயில் ஒருநாள் தேவையில் 17 சதவிகிதம் வைட்டமின் கே, 7 சதவிகிதம் வைட்டமின் இ உள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- பா.பிரவீன் குமார்