Published:Updated:

ஃபீல் ஃப்ரெஷ் டீடாக்ஸ்!

ஃபீல் ஃப்ரெஷ் டீடாக்ஸ்!

நச்சு நீக்கம் எப்படி சாத்தியம்?

ஃபீல் ஃப்ரெஷ் டீடாக்ஸ்!

நச்சு நீக்கம் எப்படி சாத்தியம்?

Published:Updated:
ஃபீல் ஃப்ரெஷ் டீடாக்ஸ்!
ஃபீல் ஃப்ரெஷ் டீடாக்ஸ்!

‘உடலை சுத்தமாகப் பராமரிப்பதன் மூலம் நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழலாம்’ என்கின்றன, நமது பாரம்பரிய மருத்துவங்கள். எப்போதும் சோர்வு, எனர்ஜி இல்லாத நிலை, செரிமானக் குறைபாடு, உடல் வலி, சருமப் பிரச்னை என்று பல விஷயங்கள் நம்மைப் பாடாய்படுத்துகின்றன. “பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இவற்றை எல்லாம் கவனிக்க ஏது நேரம்” என்று கேட்பவர்கள்தான் அதிகம்.

நம் உடலில் பல்லாயிரக்கணக்கான செயல்பாடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதன், விளைவாக நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை வெளியேற்றும் பணியை நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், செரிமானமண்டலம், சருமம் ஆகியவை செய்கின்றன. இந்த நச்சுக்கள் வெளியேறாமல், உடலில் தங்கும்போது உடல்நலக் குறைவுகள் ஏற்படுகின்றன. இவற்றை வெளியேற்றும் சிகிச்சைமுறையே டீடாக்ஸ் எனப்படும் நச்சு நீக்க சிகிச்சைகள். டீடாக்ஸ் செய்வதால், உடல், மனம் இரண்டுமே ஃப்ரெஷ் ஆகின்றன. பஞ்சகர்மா, எனிமா, மசாஜ், மருந்து உட்கொள்ளுதல், பத்திய முறை, குளியல் வகைகள், கட்டுப்பாடான உணவுமுறைகள் எனப் பலவகையான டீடாக்ஸ் முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் டீடாக்ஸ் வாட்டர் எனப்படும் நச்சு நீக்கக் குடிநீர்...

ஃபீல் ஃப்ரெஷ் டீடாக்ஸ்!

தயாரிக்கும் முறை

இதுவரை, வெறும் தண்ணீரை அருந்திவந்தோம். இதில், சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்யலாம். அதாவது, இரண்டு லிட்டர் தண்ணீருடன் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் (ஜூஸாக அல்ல) சிலவற்றைக் கலந்து, அதை நாள் முழுதும் குடிக்கலாம்.

உடலைக் காக்கும் ஹெல்த்தி டிரிங்க்காக இதைப் பயன்படுத்தி வந்தாலே போதும், நல்ல மாற்றங்கள் சில மாதங்களில் தெரியும்.

டீடாக்ஸ் நீரைத் தயாரிக்க, சுத்தமான நீரைப் பயன்படுத்துங்கள்.

சர்க்கரை, பனைவெல்லம் சேர்க்க வேண்டாம். சில ஜூஸ் வகைகள் தயாரிக்கும்போது மட்டும் பனைவெல்லம் அல்லது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

காய்கறி, பழங்களைச் சிறு துண்டுகளாக நறுக்கிப் பயன்படுத்தும்போது, அதன் சாறு தண்ணீரில் நன்கு இறங்கும். இதனால், முழுப் பயனையும் பெற முடியும்.

ஆரோக்கியமான நபர்களுக்கு இரண்டு லிட்டர் நீரில் இந்த டிரிங்ஸைத் தயாரிக்க வேண்டும். சிறுநீரகக் குறைபாடு போன்ற பிரச்னை உள்ளவர்கள், டாக்டர் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

ஸ்லிம்டவுண் வாட்டர்

புதினா இலைகள், வெள்ளரித் துண்டுகள், ஒரு இன்ச் இஞ்சி, ஆரஞ்சு சுளைகளை நீரில் போட்டு குடிக்க வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடலை ஃபிட்டாக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும்.

ஃபீல் ஃப்ரெஷ் டீடாக்ஸ்!

சூப்பர் ஸ்கின் வாட்டர்

பீட்ரூட், கேரட் துண்டுகள், புதினா இலைகள் கலந்த நீர். பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ள சிறந்த நீர். உடலுக்குள் சென்று, கழிவுகளைச் சிறுகச்சிறுக வெளியேற்றி
விடும். இதனால், சருமம் பொலிவு பெறும்.

எடை குறைக்கும் குடிநீர்

எலுமிச்சைச் சாற்றுடன், புதினா இலைகள், ஒரு இன்ச் இஞ்சியைத் தட்டிப் போட்டு குடித்துவரலாம். காலையில் ஒரு கிளாஸ் அளவுக்கு இந்த நீரை அருந்தலாம். இதனால், பித்தம் குறையும். தொப்பை கரைந்து, ஃபிட்டாகும். இந்த ஜூஸைக் குடித்த பிறகு நடைப்பயிற்சி, யோகா செய்யலாம்.

சிம்பிள் மார்னிங் வாட்டர்

மிதமான வெந்நீருடன் நான்கு சொட்டு எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். மலச்சிக்கல் முழுமையாகத் தீரும். தேன், மலமிளக்கியாகச் செயல்பட்டு, உடலைப் பலமாக்கும்.

கோடைக்கான டீடாக்ஸ் வாட்டர்

தண்ணீரில் ஆரஞ்சு சுளைகள், வெள்ளரித் துண்டுகள் போட்டுக் குடிக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நீர் இழப்பை இதன் மூலம் ஈடுகட்ட முடியும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

பெண்களுக்கான  டீடாக்ஸ் வாட்டர்

கற்றாழையின் சதைப்பகுதியுடன் நீர்த்த மோர், சிறிது மிளகு கலந்து அருந்த வேண்டும். நாட்டுமாதுளைப் பழச்சாற்றுடன் நாட்டுச்சர்க்கரை கலந்து அருந்திவந்தால், மாதவிலக்குப் பிரச்னைகள் சரியாகும். கர்ப்பப்பை பலமாகும். மாதவிலக்கு சமயத்தில் வரும் வயிற்றுவலி, இடுப்புவலி குறையும்.

புத்துணர்வு தரும் டீடாக்ஸ் வாட்டர்

முலாம் அல்லது கிர்ணிப் பழத்தை வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரையுடன் கலந்து குடிக்கலாம். வெயில் காலத்தில், தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும். திடீர் எனர்ஜி உண்டாகி, சோர்வடையாமல் பாதுகாக்கும். வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், நீர்ச்சத்து இருப்பதால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சருமப் பொலிவு தரும் தண்ணீர்

இளநீருடன் சிறிதளவு புதினா, சீரகம் கலந்து குடிக்க வேண்டும். வெயிலால் களை இழந்த சருமத்துக்குப் புத்துணர்வு கிடைக்கும். சருமம், குடல், உணவுக் குழாய், வயிற்றுக்குச் சிறந்த டிரிங்க். புதினா, புத்துணர்ச்சியைத் தரும். சீரகம், உடலைச் சீராக்கி தங்கம்போல் ஜொலிக்கவைக்கும்.

சரும ஊட்டம் தரும் வாட்டர்

மாம்பழம், ஆரஞ்சு, வெள்ளரி, புதினா கலந்த நீர். இந்த மஞ்சள் நிறத் தண்ணீர், சருமத்தையும் தங்கம்போல மாற்றக்கூடியது. பார்வைத்திறனைக் கூட்டும். ஆரஞ்சு மற்றும் வெள்ளரி உடலைக் குளிர்ச்சி ஆக்கும்.

பாரம்பரிய டீடாக்ஸ் டிரிங்க்ஸ்


பானகரம் சிறிதளவு கொடாம் புளியை எடுத்து நீரீல் போட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டி, பனைவெல்லம்  கலந்து குடிக்கலாம். இடுப்பு, வயிற்றைச் சுற்றி உள்ள சதையைக் கரைக்கும்.

ஃபீல் ஃப்ரெஷ் டீடாக்ஸ்!

சளியைப் போக்கும் அதிமதுரம்

ஒரு டம்ளர் நீரில், சிறிதளவு அதிமதுரம் கலந்து குடித்துவந்தால், சளி, இருமல், தொண்டைக்கட்டு, கரகரப்பு குரல், நெஞ்சு சளி, மூக்கில் நீர் வழிதல் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நெல்லி நீர்

தண்ணீரில், நெல்லிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டுக் குடித்துவந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

உயர் ரத்த அழுத்தம் போக்கும் முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை ஒரு கைப்பிடி, சிறிதளவு சீரகம், பனைவெல்லம், ஒரு கிளாஸ் நீர் கலந்து, மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி, குடித்துவர, உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

கோடைக்கு ஆற்றல் தரும் டிரிங்க்

ஒரு டம்ளர் தண்ணீரில், தேற்றான் கொட்டைப் பொடி சிறிது கலந்து குடித்தால், உடனடி ஆற்றல் கிடைக்கும். வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவோர் இதை அருந்தலாம்.

கல்லைக் கரைக்கும் வாட்டர்

காய்ந்த திராட்சைகள், சீரகம், வால்மிளகு, சோம்புடன் தண்ணீர் சேர்த்து, அரைத்து வடிகட்டி அருந்திவந்தால், பித்தப்பைக் கற்கள் கரையும்.

கீரீன் டீடாக்ஸ் கொத்தமல்லி இலை

களை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, அதில் சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் செரிமானப் பிரச்னைகள் தீரும்.

இரவு பானம்

கடுக்காய் தோல், பனைவெல்லம், நீர் கலந்து இரவில் படுக்கச் செல்லும் முன்னர் குடிக்க வேண்டும். இதனால், காலையில் எழுந்ததும் மலம் கழிக்கும் உணர்வு தோன்றும். மலச்சிக்கல் நீங்கும்.

- ப்ரீத்தி,

படங்கள்: ஜெ.தான்யராஜு, தே.அசோக்குமார்

டீடாக்ஸ் செய்வதால்...

ரத்தம் சுத்திகரிக்கப்படும். இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் (impurities) வெளியேறும்.

கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல், நிணநீர், சருமம் சுத்தமாகும்.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

உள்ளுறுப்புகள் இயக்கம் சீரடையும்.

ரத்த ஓட்டம் சீராகி, புத்துணர்வு, ஆரோக்கியம் அதிகரிக்கும்.