Published:Updated:

சுவை உணர்க

சுவை உணர்க
பிரீமியம் ஸ்டோரி
சுவை உணர்க

சுவை உணர்க

சுவை உணர்க

சுவை உணர்க

Published:Updated:
சுவை உணர்க
பிரீமியம் ஸ்டோரி
சுவை உணர்க
சுவை உணர்க

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் என்ற ஐந்து புலன்களால் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது.  இதில், நுகர்தல் மற்றும் சுவை உணர்வு இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? நமக்கு எல்லாம் வீட்டில் குழம்பு தாளிக்கும்போதே பசிக்க ஆரம்பித்துவிடும். சாலையில் செல்லும்போது சிக்கன் பிரியாணி வாசனை ஆளை இழுக்கும். ஆனால், எந்த வாசனை என்றே உணர முடியாமல், என்னதான் சுவையான உணவைச் சாப்பிட்டாலும், ஏதோ ஒன்றைச் சாப்பிட்டோம் என்ற உணர்வு இருந்தால் என்ன செய்வோம்?

வாசனை உணர்வுக்கும் சுவை உணர்வுக்கும் தொடர்பு உள்ளது. நாம் சாப்பிடும்போதும், பருகும்போதும், உணவை அசைபோடும்போதும் உணவில் இருந்து வெளிப்படும் மூலக்கூறுகள், நம் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள சுவை உணர்வு செல்களைத் தூண்டும். இந்த சுவை உணர்வு செல்கள் வாயின் உட்புறமும், நாவின் சுவை மொட்டுகளிலும், உள் தொண்டையின் மேற்பரப்பிலும் குவிந்திருக்கும். பிறக்கும்போது, நமக்கு 10,000 சுவை மொட்டுகள் இருக்கும். வயதாக, வயதாக அவற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். சுவை உணர்வின் செல்கள் தூண்டப்படும்போது, நரம்புகள் வழியே அந்தச் செய்தி மூளைக்குக் கடத்தப்பட்டு, மூளையால் அந்தச் சுவை உணரப்படுகிறது. காரம், உப்பு, புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு, கசப்பு என ஆறு சுவைகளையும் இந்தச் சுவை மொட்டுக்களாலேயே உணர முடியும்.  இப்படி, சுவை அறியும் திறனில் ஏற்படும் பிரச்னையை ‘டேஸ்ட் டிஸ்ஆர்டர்’ என்கிறோம்.

டேஸ்ட் டிஸ்ஆர்டர்

பொதுவாக, ‘பேய் ருசியுணர்வு’ எனப்படும் `பேன்டம் டேஸ்ட் பெர்சப்ஷன் (Phantom taste perception) பிரச்னைதான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் சுவைக்குறைபாடு். அதாவது, வாயில் ஏதும் இல்லாதபோதுகூட விரும்பத்தகாத ருசியுணர்வு இருந்துகொண்டிருக்கும். இதைத் தவிர இனிப்பு, புளிப்பு, கசப்பு என்று அறுசுவை உணர்வு மிகக் குறைவாக இருக்கும். இதை ஹைப்போக்யூசியா (Hypogeusia) என்கிறோம். சிலருக்கு எந்த சுவையுமே தெரியாது. இதை  அக்யூசியா (Ageusia) என்கிறோம். இதுதவிர, டிஸ்க்யூசியா (Dysgeusia) என ஒரு வகை பிரச்னை உள்ளது. இவர்களுக்கு எப்போதுமே வாயில் கெட்டுப்போன, மிகவும் மோசமான உணவைச் சுவைத்த உணர்வு இருக்கும். சிலருக்கு வாய் எரிச்சலாக இருப்பதுபோல இருக்கும்.

சுவை உணர்க

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹைப்போக்யூசியா

இந்தக் குறை உள்ளவர்களுக்கு, சுவையைப் பகுத்து உணர்வது சற்று சிரமமாக இருக்கும். லட்டு சாப்பிட்டாலும் அது இனிப்பாகத்தான் உள்ளதா என சுவையை உணரத் தடுமாறுவார்கள். சிலருக்கு, தற்கொலை எண்ணம், பதற்றம், எரிச்சல்  உணர்வு இருக்கும். கீமோதெரப்பி சிகிச்சை எடுப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

அக்யூசியா

இது முழுமையான சுவைக் குறைபாடு். இது மிகவும் அரிதான பிரச்னை. இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு எந்த ருசியையும் உணர முடியாமல் போகும். லட்டு சாப்பிட்டாலும்கூட, ‘என்ன சர்க்கரை போட்டாங்களா? இல்லையா?’ என்று கேட்பார்கள். அக்யூசியா, நரம்புகளில் ஏற்படும் திசு சேதத்தால் ஏற்படுகிறது. குறிப்பாக, நாக்கின் நரம்புகளில் உள்ள திசுக்கள் சேதம் அடையும்போது, நாக்கு முழுமைக்குமான சுவை உணரும் தன்மை போய்விடுகிறது.

டிஸ்க்யூசியா

இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு எதை உண்டாலும் கெட்டுப்போன உணவைப் போலவும், அழுகிப்போன உணவைப் போலவும் தோன்றும். இதுவும் கீமோதெரப்பி, ஆஸ்துமா மருந்துகள் எடுத்துக்கொள்வதாலும், துத்தநாகப் பற்றாக்குறையாலும் ஏற்படும்.

காரணங்கள்

இதுபோன்ற சுவைக் குறைபாடுகள் சிலருக்குப் பிறவியிலேயே வரக்கூடும். முதுமையினாலும், காதுக்குள் ஏற்படும் தொற்றுக் காரணமாகவும், தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்க்கு கதிரியக்கச் சிகிச்சை கொடுப்பதால் புற்றுநோய் செல்கள் இறப்பதோடு சேர்ந்து சுவை மொட்டுகளும் செயல் இழந்துவிடுவதாலும் இந்தக் குறைபாடு தோன்றும். ரசாயனம் மற்றும் செயற்கை வாயுக்களோடு புழங்கும் வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும், சர்க்கரை நோய், புற்றுநோய், பக்கவாதம், கல்லீரல் பிரச்னை, சிறுநீரகப் பிரச்னை, தைராய்டு பிரச்னை, பல் நோய், நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்பு போன்றவற்றுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்களுக்கும், ஆன்டிபயாடிக் மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கும் சுவைக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். புகை, மதுப்பழக்கமும் இதற்கு ஒரு முக்கியமான காரணம்.

சிகிச்சை

சுவைக் குறைபாடு எதனால் வருகிறது என்பதை அறிந்து,  அதற்குத் தகுந்த சிகிச்சை தர வேண்டும். ஒருவர் குடிப்பதாலோ, புகைப்பதாலோ வருகிறதா அல்லது அவர்களின் நாளமில்லா சுரப்பிகளிலோ நரம்பு மண்டலத்திலோ பிரச்னை ஏதேனும் இருக்கிறதா என்பதை அறிந்து, சிகிச்சை தர வேண்டும். மருந்து, மாத்திரைகள் பயன்படுத்துவதால் சுவைக் குறைபாடு ஏற்படுகிறது எனில், மருத்துவரை நாடி மருந்தை மாற்றி எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம். உணவுப்பழக்கம், வாழ்க்்கை முறை மாற்றம், மருந்து, மாத்திரைகள் மற்றும் அறுவைசிகிச்சை உள்பட எதனால் பாதிப்பு என்பதற்கு ஏற்ப சிகிச்சைகள் மாறுபடும்.

இவர்கள் ஒவ்வொரு உணவையும் தனித்தனியே சாப்பிட வேண்டும். ஒன்றோடு ஒன்று கலந்து சாப்பிடுவது தவறு. அது மேலும் சுவை மொட்டுக்களைப் பாதிக்கும். புகை, மதுவை அறவே தவிர்க்க வேண்டும். வாயைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

- பி.கமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism