Published:Updated:

பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்

பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்

பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்

பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்

பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்

Published:Updated:
பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்
பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்

ற்கள் நம் முகத்தை அழகாகக் காட்டும் அற்புத உறுப்பு. ஜீரணம் எனும் செயல் நடக்க உதவும் முதல் போர் வீரன். இன்று, இரண்டில் ஒருவருக்குப் பல் பாதிப்பு இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்று. இது, பல் பராமரிப்பில் நமக்கு உள்ள அலட்சியத்தைக் குறிக்கிறது. நம் பற்களைப் பாதிக்கும் 8 காரணங்கள் என்னென்ன... 

இனிப்புகள்

அதிகப்படியான இனிப்புகள் சாப்பிடுவதால் பற்சொத்தை, பற்சிதைவு ஏற்படுகின்றன. இனிப்புகளில் உள்ள அமிலங்கள் பல்லின் பாதுகாப்புக் கவசமான எனாமலில் படிந்து, அதை அரித்துவிடும். பசை போன்ற சில இனிப்புகள் பற்களில் ஒட்டிக்கொண்டு தொந்தரவை ஏற்படுத்தும். இனிப்புகளையோ நொறுக்குத்தீனிகளையோ தனியாகச் சாப்பிடாமல், உணவோடு சேர்த்துச் சாப்பிடும்போது வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரந்து, அந்த இனிப்புகளைப் பற்களில் சேரவிடாது. சாக்லேட் போன்ற இனிப்புகளைச் சாப்பிடுவதுதான், குழந்தையிலேயே பற்சொத்தை ஏற்படக் காரணம். இதைத் தவிர்க்க இனிப்பு சாப்பிட்டதும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

சாஃப்ட் டிரிங்க்ஸ்

சோடா, கோலா போன்ற கார்பனேட்டட் பானங்களில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், பற்களின் எனாமலை அரித்துவிடும். எனவே, இவற்றைத் தவிர்த்து இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றைக் குடிக்கலாம்.

காபி மற்றும் சிகரெட்

காபியில் உள்ள அடர் நிறம் பற்களை எளிதில் மஞ்சள் அல்லது காபி நிறத்துக்கு மாற்றக்கூடியது. இதில் இருக்கக்கூடிய அமிலம் பற்களை அரிக்கும். அதே போன்று புகைபிடிப்பவர்களுக்கும் ஈறுகளில் பிரச்னை ஏற்பட்டு, பற்கள் விழுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பாக்கு போன்றவை பற்களில் காரையை ஏற்படுத்தி, ஈறுகளின் வலிமையைப் பாதித்துவிடும். இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பால் பற்கள் பராமரிப்பு

‘நள்ளிரவில் குழந்தை அழுகிறது’ எனத் தாய்மார்கள் பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்துவிடுவார்கள். குழந்தையும் பால் குடித்தபடியே தூங்கிவிடும். இப்படித் தொடர்ந்து செய்யும்போது, குழந்தையின் பால் பற்களில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, இந்த பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

கடினமானவற்றைத் தவிர்க்கவும்


சிலர், பற்களால் பாட்டில் மூடியைத் திறப்பது, பாலித்தீன் பாக்கெட்டைக் கிழிப்பது, கடினமானவற்றைக் கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். உணவை மெல்லத்தான் பற்கள்; இது போன்றவற்றைக் கடிப்பதற்கு அல்ல... இந்தச் செயல்கள் பற்களின் உறுதித்தன்மையைப் பாதிக்கும்.

பற்களை அரைத்தல்

தூக்கத்தில் பற்களை நரநரவெனக் கடிப்பது, அரைப்பது போன்றவற்றாலும் பற்களுக்குப் பாதிப்பு அதிகமாகும். இதனால், பற்கள் தேயும் வாய்ப்பு உண்டு. இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சை எடுப்பதன் மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.

பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்

பல் துலக்குதல்

தினமும் இரண்டு முறை பல் துலக்குவது நல்லது. ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னரும் நன்கு வாய் கொப்பளிப்பது மிகவும் நல்லது. சிலர், சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னரும் பல் துலக்குவார்கள். இது, பற்களின் எனாமலைப் பாதித்து, பற்கூச்சத்தை ஏற்படுத்தும். நாளடைவில் பற்கள் வலு இழந்து, விழுந்துவிடும். பற்களுக்கு ஏற்ற மென்மையான பிரஷ்கொண்டு வட்ட இயக்கத்தில் (Circular motion) பல் துலக்க வேண்டும்.

குளிர்ந்த, அதிக சூடான உணவு

ஐஸ் கட்டிகளைக் கடித்துச் சாப்பிடுவது தவறு. இவ்வாறு செய்யும்போது, பற்களின் உள்ளே இருக்கும் மெல்லிய திசுக்கள் பாதிக்கப்படும். இதனால், பற்கள் சிறிது சிறிதாக நொறுங்கி, உடைய ஆரம்பிக்கும். அதேபோன்று மிகவும் சூடான உணவை உண்பதாலும் சுடச்சுட டீ, காபி போன்றவற்றைக் குடிப்பதாலும் பற்சிதைவு ஏற்படும். எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

- பி.கமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism