Published:Updated:

'நஞ்சில்லா வேளாண்மை' பசுமைப் புரட்சி ஏற்படுத்திய பஞ்சத்தைப் போக்குமா Exclusive Deal

'நஞ்சில்லா வேளாண்மை' பசுமைப் புரட்சி ஏற்படுத்திய பஞ்சத்தைப் போக்குமா Exclusive Deal
'நஞ்சில்லா வேளாண்மை' பசுமைப் புரட்சி ஏற்படுத்திய பஞ்சத்தைப் போக்குமா Exclusive Deal

இந்தியாவில் பசுமைப் புரட்சி ஆரம்பிக்கபட்ட காலகட்டம் 1966. அதிக மகசூலைத் தரும் ஹைபிரிட் பயிர் வகைகள், மாறுபட்ட நீர் பாசன முறைகள், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை பசுமைப் புரட்சி இந்தியாவுக்கு அறிமுகம் செய்துவைத்தது. பசுமைப் புரட்சியின் வெற்றியால் உணவு தானிய உற்பத்தியில் இறுதியாக இந்தியா தன்னிறைவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பசுமைப் புரட்சி ஏற்படுத்திய விவசாய முன்னேற்றத்தால், அம்முறைகளை விவசாயிகள் தொடர்ந்து பயன்படுத்தி வரலாயினர், ஆனால் அதன் பின்விளைவுகளைப் பற்றிய போதிய அறிவும், விழிப்புணர்வும் அவர்களுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.

'நஞ்சில்லா வேளாண்மை' பசுமைப் புரட்சி ஏற்படுத்திய பஞ்சத்தைப் போக்குமா Exclusive Deal


உணவே மருந்தென உண்டுவந்தோம், இன்று நம் மண்ணில் விளைவிக்கப்படும் உணவை உண்டாலே மருந்து சாப்பிடவேண்டிய நிலை வந்துவிடுகிறது. பசுமைப்புரட்சியால் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த ஆரம்பித்து, விவசாயத்துக்கு உதவக்கூடிய பல நல்ல சிற்றுயிர்களைக்  கொன்றுவிட்டோம். இப்போது, கேடு விளைவிக்கும் பூச்சிகளும் ரசாயனங்களை எதிர்க்கும் வீரியத்தைப் பெற்று பயிர்களை நாசம் செய்கின்றன. மண்ணின் உயிர்த்தன்மையோ பாழாகிக்கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட நிலத்தில் விளையும் தானியங்களும் காய்கறிகளும் சத்தில்லாமலும், உடலுக்கே ஊறு செய்யக்கூடியனவாகவும் இருக்கின்றன. இருந்தாலும், விவசாயம் திசை திரும்பிப் போனதற்கு பசுமைப் புரட்சியை மட்டும் குறைகூற முடியாது!

'நஞ்சில்லா வேளாண்மை' பசுமைப் புரட்சி ஏற்படுத்திய பஞ்சத்தைப் போக்குமா Exclusive Deal

பசுமைப் புரட்சிக்குப் பின் இயற்கை விவசாயத்துக்கு மாறாதது நாம் இழைத்த பெரும்பிழையாகும். வேளாண் நிலங்களை ரியல் எஸ்டேட்டுக்கு விற்றோம், நீர் நிலைகளை கண்டுகொள்ளாமல் இருந்தோம், இளைஞர்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லாமல் விட்டது நாம் செய்த பெரும் தவறாகும். முறையான உணவுப்பொருள் விநியோகக் கொள்கை இல்லாதது மற்றும் பயிர் இழப்பைக் குறைக்க தகுந்த முன்னெச்சரிக்கை எடுக்காதது, இவையும் விவசாயம் தடுமாறிப்போகக் காரணங்களாகும். சரி, இனி நாம் செய்யவேண்டியதுதான் என்ன?

"மாற்று வேளாண்மை" எனும் மந்திரம்...

இயற்கை விவசாயத்தைப் கெட்டியாகப் பிடித்துக்கொள்வதுதான் நமக்கான சிறந்த உபாயம்! கூட்டுறவு முறையில் இயற்கை விவசாயத்தைச் செய்துகாட்டிவருகிறது இராமநாதபுரம் மாவட்டம், ஏனாதி கிராமத்தை மையமாகக் கொண்டு விளங்கும் "மாவேள்" நிறுவனம். சீமைக்கருவேலமரம் ஒழிப்பு மற்றும் தரிசு நில மேம்பாடு  சார்ந்த பணிகளுக்கான பொருளாதார தேவைக்காக  துவக்கப்பட்ட இந்நிறுவனம் பாரம்பரிய உணவு வகைகளை இயற்கை முறையில் விளைவித்து, அதனை விற்பனை செய்துவருகிறது. நிறுவனத்தின் பெயரும் திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு அமைக்கபட்டதே - "(மா)ற்று (வே)ளாண்மை", இதுவே "மாவேள்" ஆகும். தமிழ்நாடு முழுவதும் இன்றைய தினப்படி 80 கிளைகளையும் 32 மரச்செக்கு ஆலைகளையும், பல இயற்கை அங்காடிகளையும் செயல்படுத்திவரும் நிறுவனமாக மாவேள் திகழ்கிறது.

'நஞ்சில்லா வேளாண்மை' பசுமைப் புரட்சி ஏற்படுத்திய பஞ்சத்தைப் போக்குமா Exclusive Deal

"இதுவரை பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளது மாவேள். தொடர்ந்து நிலங்களை சீரமைத்து இயற்கை வேளாண்மையில் தமிழகமெங்கும் இயற்கை வேளாண்மை கூட்டுறவு வங்கி எனும் உழவர் சங்க உறுப்பினர்களின் மூலப்பொருட்களைக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை உணவு மற்றும் அழகுசாதனப் பொருட்களையும் வழங்கிவருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கும் விவசாயம் சார் தொழில் செய்பவர்களுக்கும், வேளாண்சார் வணிகத்தை சிறப்புற செய்ய போதிய விழிப்புணர்வும், பயிற்சியும், விற்பனைக்கு உதவியும் செய்துவருகிறது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து அனைத்து மாநிலங்களிலும் கிளைகள் நிறுவவும், விவசாயிகளுக்கு மேலும் லாபம் வழங்கும் விதமாக உற்பத்தியை பெருக்கும் நோக்கில் உலக நாடுகள் அனைத்திற்கும் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுவருகிறது", என்கிறார் இந்நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பூங்கதிர்வேல். முறையான கொள்கைகளுடன் கூடிய, இயற்கை விவசாயத்தைப் பின்பற்றினால் எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு என்பது இருக்காது என்பதே மாவேள் கூறும் மந்திரம்.

மாவேள் வழங்கும் 100% இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பசுமை விவசாயப் பொருள்களை www.maavel.com எனும் வலைத்தளத்தில் ஆர்டர் செய்து வாங்கலாம். நாட்டுக்கோழி முட்டை, நாட்டுமாட்டுப் பால் மற்றும் நெய், மரச்செக்கு நல்லெண்ணெய், இயற்கை மனம் வீசும் மரச்செக்கு தேங்காய் எண்ணெய், உடலுக்குத் தெம்பைத் தரும் மரச்செக்கு  கடலை எண்ணெய், மூங்கில் அரிசி, சிறுபொன்னி அரிசி, நாட்டுச் சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்துவருகிறது www.maavel.com. இயற்கை உணவுண்டு, உடலை ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வைத்துக்கொள்ள நினைப்பவர் எவருக்கும் மாவேள் தளத்தின் பொருள்கள் பேருதவியாய் அமையும்.