புற்றுநோய்... யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்றைய சூழலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆபத்துகளில் புற்றுநோயும் ஒன்று என இந்தியச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உடலில் உள்ள ஒரு செல் தன்னுள் பிரிந்து வேறொரு செல்லைப் பிரித்தெடுக்கும். இது சாதாரண ஒரு நிகழ்வு. இந்த செல் பிரிதல் நிகழ்வு சிலநேரங்களில் சட்டென நிலை மாறி, ஓரிடத்தில் எக்குத்தப்பாக, வெகுவேகமாக நடைபெறும். அதாவது திடீரென செல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். அதுதான் புற்றுநோய் எனப்படுகிறது. உடலின் எந்தப் பாகத்தில் புற்று நோய் உருவாகிறது என்பதைப் பொறுத்து ஆபத்தின் அளவும் வேறுபடுகிறது.

இன்றைக்குக் கருப்பைப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக மார்பகப் புற்றுநோய் அதிவேகமாகப் பெண்களைத் தாக்கி வருகிறது. மார்பகப் புற்றுநோய் பெண்களை மட்டுமே தாக்கும் என்று நினைக்காதீர்கள். பெண்களைப் போலவே ஆண்களையும் இந்த மார்பகப் புற்று நோய் தாக்கி வருகிறது. இரண்டு லட்சம் ஆண்களில் ஒருவரை இந்த நோய் தாக்குவதாகச் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் ஆண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

ஐரோப்பாவில் ஆண்டுக்கு 30,000 பேரும் அமெரிக்காவில் சுமார் 2,000 பேரும் புதிய மார்பகப் புற்றுநோயாளிகளாக மாறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இது குறைவுதான் என்றாலும் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தாய், சகோதரிகள் என உறவுகளின் மத்தியில் வரும் புற்றுநோய் பெண்களைத் தாக்கும். தந்தை வழியாகக்கூட பெண்களைத் தாக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் ஆண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் இன்ன காரணத்தால்தான் வருகிறது என்று வரையறுத்துச் சொல்ல முடியவில்லை. பரம்பரை வழியாக வருவதுதான் என்றாலும், இதுதான் காரணம் என்று சொல்ல முடியவில்லை. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு மருந்துகள், கதிரியக்கத் தாக்கம், புகையிலை, மதுப்பழக்கம் எனப் பல்வேறு காரணிகள் மார்பகப் புற்று நோயை அதிகம் வரவழைக்கிறது என்கிறார்கள்.

40 வயதுக்குமேல் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதைப்போல, 50 வயதைத் தாண்டிய ஆண்களுக்கே மார்பகப் புற்றுநோய் தாக்குகிறது. பெண்களைவிட ஆண்களுக்கு இந்த நோய் வந்தால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்பது ஆறுதலான செய்தி.

மார்பில் கட்டி, ஒரு மார்பு மட்டும் பெரிதாவது, மார்பில் ஆறாத புண், நீர் வடிதல், மார்பு உள்வாங்கிப் போதல், மார்புக் காம்பில் வீக்கம், அக்குளில் கட்டி போன்றவை ஆண்களின் மார்பகப் புற்றுநோய்க் கான அறிகுறிகளாகும். பெண்களைப் போல அல்லாமல் ஆண்களுக்குக் குறைவான மார்பகத் திசு இருப்பதால் அவர்களின் மார்பகப் புற்று, அருகிலுள்ள உறுப்புகளில் விரைவாகப் பரவுவதற்கு வாய்ப்பு கள் அதிகம். அறுவைசிகிச்சை, வேதிச் சிகிச்சை, கதிர் வீச்சுச் சிகிச்சை மற்றும் மருந்துகள் என எல்லாமே பெண்களின் மார்பகப் புற்றுநோய்ச் சிகிச்சையைப் போலவே ஆண்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

இளம் வயதில் ஆண்களுக்கு மார்புப் பகுதிகள் வீங்குவது, பெரிதாவது எல்லாம் ஹார்மோன் பிரச்சினையால்கூட இருக்கலாம். அதைப் புற்றுநோய் என்று குழப்பிக் கொள்ள வேண்டாம்.

ஆகவே, மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டதும் சிகிச்சையைத் தொடங்கி விட்டால், மிக எளிதாக இந்த நோயைக் குணப்படுத்தி விடலாம். மேமோகிராம் மற்றும் சிடி ஸ்கேன் மூலம் மார்பகப் புற்றை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். கீமோதெரபி மூலம் புற்று நோயை எளிதாகக் குணப்படுத்த முயற்சி செய்யலாம். அதிகமாகப் பரவியிருந்தால் அறுவைசிகிச்சை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக அகற்றிவிடலாம்.

அறுவைசிகிச்சை செய்த பின்னர் கதிர்வீச்சுச் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிட முடியும். இந்த நோயைக் குணப்படுத்த சிகிச்சையைவிட மனத் தைரியமும் நம்பிக்கையும் முதலில் அவசியம். உடற்பயிற்சி, எடையைக் கட்டுக்குள் வைத்திருத்தல், தீயபழக்கங்களைக் கைவிடுதல், நல்ல உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளுதல் போன்றவை உங்களை விரைவாகக் குணமடையச் செய்யும்.

இந்த நோயை எத்தனை சீக்கிரமாகக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கிறோமோ அத்தனை எளிதாக ஆபத்தினைக் கடந்துவிடலாம் என்பதுதான் உண்மை. எனவே ஆண்களுக்குவரும் இந்தப் புற்றுநோயைப்பற்றி அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளால் நோய்களிலிருந்து விலகி வாழலாம். மார்பகப் புற்றுநோயும் விதிவிலக்கல்ல.

- மு.ஹரி காமராஜ்