முட்டையை அவிக்காமல் அப்படியே சாப்பிட்டால் உடல் வலுப்பெறும் என்கிறார்களே அது உண்மையா? பூப்படைந்த பெண்களுக்கு அவிக்காத முட்டையுடன் வேறு என்ன தரலாம்?

-கே.நந்திதா, சென்னை.

ஆம் உண்மைதான். அவிக்காத பச்சை முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. அது, 100 சதவிகிதம் முழுமையாக உடல் வலுப்பெற உதவும். வேறு எந்த உணவுப்பொருளிலிருந்து கிடைக்கும் புரதமும் இந்த அளவுக்கு முழுமையாகப் பயன்படாது. மேலும், இதை அதிகாலையில் சாப்பிடுவது சிறந்தது. பூப்படைந்த பெண்களுக்கு ‘பச்சை முட்டை’ தருவதுடன் விளக்கெண்ணெய் மற்றும் உளுந்தங்களி கொடுப்பது சிறந்தது. இதனால் உடலுக்குச் சக்தி கிடைக்கும்.விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வதால் குடலும் சுத்தமாகும். கர்ப்பப்பை வலுப்படும். இதனை 15 முதல் 40 நாள்களுக்கு அதிகாலையில் சாப்பிடுவது நல்லது. கடைகளில் கிடைக்கும் பிராய்லர் கோழி முட்டைகளைப் பயன்படுத்தாமல் நாட்டுக்கோழி முட்டைகளைப் பயன்படுத்துவது நல்லது.

என் வயது 22. டைபாய்டு காய்ச்சல் ஒருமுறை வந்தால் மறுமுறை வராது என்பார்கள். ஆனால், எனக்கு இதுவரை மூன்று முறை டைபாய்டு காய்ச்சல் வந்துள்ளது. அதற்கு என்ன காரணம்? என்ன சிகிச்சை செய்யலாம்?

- கே.சுவாமிநாதன், கோவை.

டைபாய்டு காய்ச்சல் என்பது ஒரு முறைதான் வரும் என்பது தவறான கருத்து. எத்தனைமுறை வேண்டுமானாலும் வரலாம். சுகாதாரக் குறைவாக யார் நடந்துகொண்டாலும் அவர்களுக்கு டைபாய்டு வர வாய்ப்புண்டு. இது வைரஸ் மூலம் தொற்றக்கூடியது. சுகாதரமற்ற உணவு, பழைய உணவுகளைச் சாப்பிடுவது, அடிக்கடி பயன்படுத்திய எண்ணெயில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது, சுத்தமில்லாத தண்ணீரைக் குடிப்பது, உடம்பை ஆரோக்கிய மில்லாமல் பராமரிப்பது, கழிவறைக்குச் சென்று விட்டுக் கைகளைச் சரியாகக் கழுவாமல் இருப்பது போன்ற காரணங்களால் டைபாய்டு காய்ச்சல் வரலாம் டைபாய்டு ஏற்படுத்தும் வைரஸ்களால் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டுச் செரிமானச் சுரப்பிகள் பாதிப்படைகின்றன.

டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலம் மஞ்சள் நிறமற்றுக் காணப்படும். நாக்கில் வெள்ளைப்படலம் தோன்றும், வயிற்று வலி இருக்கும். சாப்பிடுவது கஷ்டமாக இருக்கும். இவை முக்கிய அறிகுறிகள். டைபாய்டு உள்ளவர்கள் புரதம், கொழுப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நீர் ஆகார உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் அறிவுறுத்தலின்படி ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 7 முதல் 10 நாள்களில் இதைக் குணப்படுத்திவிட முடியும். ஆனால் முழுமையாகக் குணமாக 30 முதல் 45 நாள்கள் ஆகலாம். சரியான சிகிச்சைமுறையைப் பின்பற்றி வைரஸ் கிருமிகள் வெளியேறும் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

டைபாய்டு விலகும் சமயத்தில் அசைவ உணவுகள் மீது மிகுந்த ஆசை ஏற்படும். நாவை அடக்காமல் சாப்பிட்டால் மறுபடி டைபாய்டு வரலாம். முடிந்தவரை வேகவைத்த சைவ உணவுகளை உண்பது பாதுகாப்பானது.

எனக்கு 23 வயதாகிறது. உடல் எடை அதிகம் என்பதால் சில நேரங்களில் உணவைத் தவிர்த்து விடுகிறேன். உணவைத் தவிர்ப்பதால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளதா?

- சி.புஷ்கலா, சின்னமனூர்

உணவைத் தவிர்ப்பதால் எடை குறையாது. மாறாக ஆரோக்கியம்தான் பாதிக்கப்படும். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கு முன்பு நீங்கள், உங்களின் பி.எம்.ஐ அளவைச் சரிபார்க்க வேண்டும். அதாவது சராசரியாக பி.எம்.ஐ அளவு 19-25-க்குள் இருக்க வேண்டும். அதற்குமேல் இருந்தால்தான் எடையைக் குறைக்க வேண்டும். நீங்கள் ஒரு நாளைக்கு 3 வேளை உணவு உண்பதற்குப் பதிலாக, 3 முதல் 4 மணி நேர இடைவேளையில் 5 வேளைகளில் உணவைச் சிறிது சிறிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

இரவில் தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பாகவே, சாப்பிட்டு விட வேண்டும். அப்போதுதான் உடலின் வளர்சிதைமாற்றம் சீராக இருக்கும். உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்ள முடியும். இரவு நேரங்களில் அசைவம், கீரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவு களைத் தவிர்ப்பது நல்லது. கொண்டைக் கடலை, பச்சைப் பயறு போன்ற பருப்பு வகைகளைச் சாப்பிடலாம். முக்கியமாக, இரவு சீக்கிரமாகத் தூங்கிக் காலையில் சீக்கிரமாக எழுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.